இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word INDEBTED...

படம்
Word of the day is INDEBTED... Pronunciation /ɪnˈdet̬.ɪd/ Function The word INDEBTED is an adjective. Meaning It means grateful because of help given என்று சொல்லலாம் அதாவது கொடுக்கப்பட்ட உதவிக்கு நன்றி உள்ளவராக இருத்தல் என்று அர்த்தம். நண்பர்களே! இந்த INDEBTED என்ற இந்த வார்த்தைக்கு தமிழில் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற வார்த்தைகளை அர்த்தமாக கொள்ளலாம். மேலும் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற இந்த வார்த்தையை இரண்டு விதங்களில் நாம் பயன்படுத்துவோம். முதலாவதாக நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் நமக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் பொழுது அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவோம். இரண்டாவதாக ஒருவர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு உதவி செய்யும்போது அவர் செய்த அந்த உதவியை அவருக்கு திருப்பி செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கும் பொழுது அந்த இடத்திலேயும் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். இவ்வாறாக INDEBTED என்...

Know the word AVARICIOUS...

படம்
Word of the day is AVARICIOUS... Pronunciation /ˌæv.əˈrɪʃ.əs/ Function The word AVARICIOUS is an adjective. Meaning It means showing an extremely strong wish to get or keep money or possessions என்று சொல்லலாம் அதாவது பணம் அல்லது உடைமைகளைப் பெற அல்லது வைத்திருக்க அதிகப்படியான விருப்பத்தைக் காட்டுகிற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவருக்கு காசு, பணம், சொத்து மேல தீராத ஆசை இருக்கும் பொழுது அவரை AVARICIOUS என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். இவர்கள் காசு பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களது எண்ணம் ஏக்கம் எல்லாமே காசு பணத்தின் மேலேயே எப்பொழுதும் இருக்கும். இவர்கள் ஒரு காரியம் செய்தால் அதில் தனக்கு என்ன லாபம் இருக்கிறது என்று யோசிப்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களால் மற்ற யாருக்கும் எந்த லாபமும் இருக்காது. இவர்கள் பணத்தின் மீது அதிக ஆசை கொண்டிருப்பவர்களாக இருப்பதால் பணத்தை செலவழிக்க மாட்டார்கள் கஞ்சத்தனமானவர்களாகவே இருப்பார்கள். இவர்களை கேவலமானவர்கள் என்று கூட சொல்லலாம். எனவே தமிழில் பேராசை கொண்ட அல்லது கஞ்சத்தனமான அல்லது கேவலமான போன்ற அர்த்தங...

Know the word CRAFTY...

படம்
Word of the day is CRAFTY... Pronunciation /ˈkræf.ti/ Function The word CRAFTY is an adjective. Note CRAFTY என்ற இந்த வார்த்தையை POSTIVE ஆக ஒரு அர்த்தத்திலும் NEGATIVE ஆக மற்றொரு அர்த்தத்திலும் என இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக POSTIVE ஆன அர்த்தத்தில் பார்க்கும் பொழுது It means relating to crafts or interested in crafts என்று சொல்லலாம் அதாவது கைவினை பொருட்கள் தொடர்பான அல்லது கைவினைகளில் ஆர்வமான என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! மரச்சாமாண்கள் கொண்டு, துணிகள் கொண்டு, காகிதம் கொண்டு, பல வண்ணங்கள் கொண்டு, வெட்டுதல், ஒட்டுதல், தைத்தல் என செய்யப்படும் கைவினை பொருட்களையும் அதனை செய்வதில் ஆர்வம் கொண்ட நபரையும் இந்த CRAFTY என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம். எனவே ஒரு நபரை She is very crafty or he is very crafty என்று சொல்லும் பொழுது அவர் கைவினைப் பொருட்கள் செய்யக்கூடியவர் அல்லது அவர் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் என்று அர்த்தமாகும். மேலும் She has all kinds of crafty items என்று சொல்லும் பொழுது அவளிடம் எல்லா வகையான கைவினைப் பொருட்களு...

Know the word FABULOUS...

படம்
Word of the day is FABULOUS... Pronunciation /ˈfæb.jə.ləs/ Function The word FABULOUS is an adjective. Note The word FABULOUS has two meanings. Meaning முதலாவதாக It means very good or excellent என்று சொல்லலாம் அதாவது மிகவும் நன்றாக அல்லது அருமையாக என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும் பொழுது, அனுபவிப்பதற்கு அருமையாக இருக்கும் பொழுது, மனதிற்கு இனிமையாக இருக்கும் பொழுது உள்ளத்திற்கு சந்தோஷத்தை தருவதாக அமையும் பொழுது, மனது விரும்பக் கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் அணிந்த ஆடை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்போது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே நீங்கள் உண்ட உணவு மிகவும் அருமையாக மிகவும் சுவையாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே நீங்கள் நண்பர்களுடன் குடும்பத்துடன் உறவினர்களுடன் சென்ற ஒரு சுற்று விழா மிகவும் ஆனந்தமாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்...

Know the idiom AS FRESH AS A DAISY...

படம்
Let's learn an idiom today... The Idiom is AS FRESH AS A DAISY. Function The idiom, AS FRESH AS A DAISY should be used in a sentence keeping fresh as an adjective. Meaning It means to be full of energy and enthusiasm என்று சொல்லலாம் அதாவது ஊக்கமும் உற்சாகமும் நிறைந்திருக்கின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவரை பார்க்கும் பொழுது துடிதுடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் முகத்தில் எந்தவித சோர்வும் தெரியாத விதமாகவும் இருக்கும் பொழுது அந்த நபரை இந்த AS FRESH AS A DAISY என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி விவரிக்கலாம். மேலும் நண்பர்களே! ஒருவர் துடிதுடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஊக்கம் நிறைந்தவராகவும் இருக்க வேண்டுமென்றால் அவர் ஆரோக்கியம் நிறைந்தவராக இருக்க வேண்டும். எனவே நண்பர்களே! இந்த IDIOM ஆனது துடிதுடிப்பான, சுறுசுறுப்பான ஆரோக்கியம் நிறைந்த, ஊக்கம் நிறைந்த, ஆற்றல் நிறைந்த,  சோர்வற்ற போன்ற அனைத்து விதமான நேர்மறை அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே தமிழில் மிகவும் துடிதுடிப்பான, மிகவும் சுறுசுறுப்பான, சோர்வற்ற போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். In a senten...

Know the word RESOLUTE...

படம்
Word of the day is RESOLUTE... Pronunciation /ˈrez.ə.luːt/ Function The word RESOLUTE is an adjective. Meaning It means determined in character, action, or ideas என்று சொல்லலாம் அதாவது தீர்மானமான குணம், செயல் அல்லது யோசனை கொண்ட என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, தீர்மானமான எண்ணத்தோடு செயல்படுகிற ஒரு நபரை இந்த RESOLUTE அப்படிங்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம். இப்படிபட்டவர்கள் இவர்களது திட்டத்திற்கு அல்லது நோக்கத்திற்கு இடைஞ்சலாக அல்லது தடையாக எதுவும் வராதபடி பார்த்துக் கொள்வார்கள். அப்படியே தடைகள் வந்தாலும் அந்த தடைகளை கடந்து அவர்களது குறிக்கோளை நோக்கி, அவர்களது திட்டத்தை நோக்கி தொடர்ந்து ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். அதைப்போலவே ஒரு மனிதன் தீர்மானமான ஒரு முடிவை எடுக்கும் பொழுது அந்த முடிவை RESOLUTE DECISION என்று சொல்லலாம்.  அதைப்போலவே ஒரு உறுதியான முயற்சியை மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சியை RESOLUTE EFFORT என்று சொல்லலாம். அதைப்போலவே தீர்மானமான அல்லது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நடவடிக்கைகளை...

Know the word HUMDRUM...

படம்
Word of the day is HUMDRUM... Pronunciation /ˈhʌm.drʌm/ Function The word HUMDRUM can be used as adjective and noun. Meaning It means having no excitement, interest, or new and different events என்று சொல்லலாம் அதாவது உற்சாகம், ஆர்வம் அல்லது புதிய மற்றும் வேறுபட்ட நிகழ்வுகள் இல்லாத என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு சிலருக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் அதனால் ஒவ்வொரு சவால்களும் வரும்பொழுது அதனை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் எதிர் கொள்வார்கள். அதேநேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் எந்தவித சவாலும் இல்லாமல் இருக்கும் பொழுது அங்கே உற்சாகம் குறைந்து விடும் ஆர்வம் குறைந்து விடும் அதனால் வாழ்க்கை சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடும். அதைப்போலவே நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி எந்தவித உற்சாகமும் இல்லாமல், பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமையாமல், ஆர்வத்தை தூண்டாமல், வழக்கம்போல இருப்பது போலவே ஒரே மாதிரியாக இருக்கும் பொழுது அந்த நிகழ்ச்சி சலிப்பு தட்டிவிடும். இவ்வாறாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ உற்சாகம் இல்லாததாக ஆர்வமில்லாததாக...

Superb 7 alternatives for DIE...

படம்
ALTERNATIVE VOCABS FOR THE WORD DIE நண்பர்களே! இன்றைய பதிவில் DIE என்ற ஆங்கில வார்த்தைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளை பார்ப்போம். DIE என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகள் நிறைய இருப்பினும் இந்த பதிவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஏழு ஆங்கில வார்த்தைகளை பார்ப்போம். முதலாவதாக KICK THE BUCKET என்ற IDIOM ஐ சொல்லலாம். இந்த IDIOM இல் உள்ள KICK என்ற வார்த்தையை VERB ஆக பயன்படுத்தி ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக You can do anything after I kicked the bucket என்று சொல்லலாம் அதாவது நான் இறந்த பிறகு நீ எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அர்த்தம். இரண்டாவதாக MEET YOUR MAKER என்ற EXPRESSION ஐ சொல்லலாம். இந்த EXPRESSION இல் உள்ள MEET என்ற வார்த்தையை VERB ஆக பயன்படுத்தி ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக Have you planned to meet your maker? என்று சொல்லலாம் அதாவது உன்னை உருவாக்கியவரை சந்திக்க திட்டம் போட்டு விட்டாயா? என்று அர்த்தம் அதாவது சாவதற்கு திட்டம் போட்டு விட்டாயா? என்று அர்த்தம். மூ...

Know the word GAINSAY...

படம்
Word of the day is GAINSAY... Pronunciation /ˌɡeɪnˈseɪ/ Function The word GAINSAY is a verb  Meaning It means to refuse to accept something as the truth என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றை உண்மை என்று ஏற்க மறுப்பது என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! ஒருவர் நம்மைப் பற்றியோ அல்லது பிறரை பற்றியோ அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றியோ சொல்லும் ஒரு கருத்தை நாம் ஏற்க மறுக்கும் பொழுது அல்லது அதற்கு முரண்பட்டு பேசும்பொழுது அந்த இடத்திலே இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் யார் என்ன சொன்னாலும் அதற்கு பதிலாக நீ சொல்வது தப்பு,  நீ சொல்வது உண்மை இல்லை என்று சொல்வார் என்றால் அந்த இடத்திலே அவர் செய்யும் அந்த செயலை இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி சொல்லலாம். பொதுவாக நாம் சாதாரணமாக பேசும் பொழுது ஒருவர் சொல்லும் கருத்தை ஏற்க மறுக்கும் பொழுது அந்த இடத்திலே DENY அல்லது DISAGREE போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம் அந்த இடத்திலே இந்த GAINSAY என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் நண்பர்களே! இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையானது SAY AGAINST என்...

Know the word STRAITJACKET...

படம்
Word of the day is STRAITJACKET... Pronunciation /ˈstreɪtˌdʒæk.ɪt/ Function The word STRAITJACKET can be used as noun and verb. Meaning It refers to a overgarment of strong material used to bind a violent prisoner or patient என்று சொல்லலாம் அதாவது மூர்க்க குணம் கொண்ட ஒரு கைதியை அல்லது ஒரு நோயாளியைக் கட்டுப்படுத்த வலுவான பொருளாலான ஒரு மேல் ஆடை என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிறைக்கைதிகள் மற்றும் நோயாளிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்கள் மீது அணியப்படும் நீண்ட கைப்பகுதிகளை உடைய மேல் ஆடையை குறிப்பதற்காக இந்த STRAITJACKET என்ற இந்த வார்த்தை பயன்படுத்தபடுகிறது. STRAITJACKET என்ற இந்த வார்த்தையை STRAI(GH)TJACKET என்றும் எழுதலாம். எனவே தமிழில் வன்முறையாளரைக் கட்டுப்படுத்தும் புறச்சட்டை என்று இந்த STRAITJACKET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence As soon as he was admitted in the hospital, he was straitjacketed. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவருக்கு வன்முறையாளரைக் கட்டுப்படுத்தும் புறச்சட்டை அணிய...

Know the word INELUCTABLE...

படம்
Word of the day is INELUCTABLE... Pronunciation /ˌɪn.ɪˈlʌk.tə.bəl/ Function The word INELUCTABLE is an adjective. Meaning It means impossible to avoid என்று சொல்லலாம் அதாவது தவிர்க்க இயலாத என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையானது ஒரு முடிவை தவிர்க்க முடியாது என்று சொல்லப்படுகின்ற இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக இந்த வார்த்தையானது INELUCTABLE FATE அல்லது INELUCTABLE CONCLUSION அல்லது INELUCTABLE DESTINY என்று அதிக அளவில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தவிர்க்க முடியாத முடிவு என்று அர்த்தம். மேலும் இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையானது பேசும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை விட எழுதும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் தவிர்க்க முடியாத அல்லது தவிர்க்க இயலாத என்ற அர்த்தத்தில் இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence If you eat too much, it is ineluctable that you will put on weight. நீ அதிகமாக சாப்பிட்டால், உனது உடல் எடை கூடும்...

Know the word LONGEVITY...

படம்
Word of the day is LONGEVITY... Pronunciation /lɑːnˈdʒev.ə.t̬i/ Function The word LONGEVITY is a noun. Meaning It means long life என்று சொல்லலாம் அதாவது நீண்ட ஆயுள் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு உயிரினம் நீடித்து வாழக்கூடியதாக இருக்கும் பொழுது அல்லது ஒரு பொருள் நீடித்து உழைக்கக் கூடியதாக அல்லது நீடித்து நிலைக்கக் கூடியதாக  இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் நீண்ட ஆயுள் கொண்டவனாக, நூறு வருடங்களுக்கு மேலாக வாழும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம். பொதுவாகவே ஆமை மற்றும் திமிங்கலம் போன்ற உயிரினங்கள் அதிக LONGEVITY யை கொண்டதாக இருக்கிறது. அதைப்போலவே ஒரு பொருள் நீடித்து உழைக்க கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிள் மொபைல் ஃபோனானது மற்ற மொபைல் ஃபோன்களை விட அதிகம் நீடித்து உழைக்கக் கூடியதாக இருக்கிறது அதனால் அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம். இவ்வா...

Know the word TRAFFICKING...

படம்
Word of the day is TRAFFICKING... Pronunciation /ˈtræf.ɪ.kɪŋ/ Function The word TRAFFICKING is a noun. Meaning It means the act of buying or selling goods illegally என்று சொல்லலாம் அதாவது சட்டவிரோதமாக பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் செயல் என்று அர்த்தம். நண்பர்களே! இதைத்தான் நாம் தமிழில் கடத்தல் என்று சொல்கிறோம். எனவே தமிழில் கடத்தல் என்ற அர்த்தத்தில் இந்த TRAFFICKING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்கும் பொழுது அல்லது வாங்கும் பொழுது அதனை ARMS TRAFFICKING என்று சொல்லலாம் அதாவது ஆயுதங் கடத்தல் என்று அர்த்தம். அதைப்போலவே போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்கும் பொழுது அல்லது வாங்கும் பொழுது அதனை DRUGS TRAFFICKING என்று சொல்லலாம் அதாவது போதை பொருள் கடத்தல் என்று அர்த்தம். அதைப்போலவே மனிதர்களை கடத்தும் பொழுது அதனை PEOPLE TRAFFICKING என்று சொல்லலாம். அதைப்போலவே குழந்தைகளை கடத்தும் பொழுது அதனை CHILD TRAFFICKING என்று சொல்லலாம். In a sentence He was arrested because he was involved in child trafficking. அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட...

Know the word CLUTTER...

படம்
Word of the day is CLUTTER... Pronunciation /ˈklʌt.ər/ Function The word CLUTTER can be used as noun and verb. Meaning It means a state of being untidy என்று சொல்லலாம் அதாவது ஒழுங்கற்று இருக்கும் நிலை என்று அர்த்தம். நண்பர்களே! ஒழுங்கற்று இருக்கும் நிலை என்ற அர்த்தத்தில் CLUTTER என்ற இந்த வார்த்தையை மூன்று விதமாக பயன்படுத்தலாம். முதலாவதாக ஒரு இடத்தில் சீராக ஒழுங்காக இருக்க வேண்டிய பொருட்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொழுது பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மேஜையின் மேல் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் என பல பொருட்கள் ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் ஒழுங்காக, ஒரு சீராக அடுக்கி வைக்கப்படாமல் இங்கும் அங்குமாக சிதறி கிடக்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம். எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் ஒழுங்கற்று இருத்தல் அல்லது சிதறி கிடத்தல் என்ற அர்த்தத்தில் இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இரண்டாவதாக இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை ஒரு ஓசையோ அல்...

Know the idiom IN THE WAKE OF SOMETHING...

படம்
The IDIOM is IN THE WAKE OF SOMETHING... Meaning It means happening after an event or as a result of it என்று சொல்லலாம் அதாவது ஒரு நிகழ்வுக்குப் பிறகு அல்லது அதன் விளைவாக நடக்கின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதன் விளைவாக அல்லது நடைபெற்றதன் விளைவாக இன்னொரு நிகழ்ச்சி நடைபெறும் பொழுது அந்த இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு இடத்திலே ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதனால் அல்லது ஒரு முக்கியமான நபர் ஒருவர் வருகை தருவதனால் அந்த இடத்திற்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் போது அந்த இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு இடத்திலே ஒரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறும் பொழுது அதன் விளைவாக காவல்துறையானது பாதுகாப்பை அதிகப்படுத்துகிற இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு நிகழ்ச்சியானது ஒரு நிகழ்ச்சியின் விளைவாக அல்லது அதனை முன்னிட்டு நடைபெறும் பொழுது அந்த இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்த...

Know the word HENCEFORTH...

படம்
Word of the day is HENCEFORTH... Pronunciation /ˌhensˈfɔːθ/ Function The word HENCEFORTH is an adverb. Meaning It means starting from this time என்று சொல்லலாம் அதாவது இந்த நேரம் முதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! புதிதாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு இந்த நேரத்திலிருந்து செயல்பட ஆரம்பிக்கிறது என்று பேசும் பொழுது அந்த இடத்திலே இந்த HENCEFORTH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு அலுவலகத்தில் பணி புரியும் பணியாட்கள் மதிய உணவு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் அலுவலகத்துக்கு பணிக்கு திரும்புவது ஒரு வழக்கமாக இருந்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு இன்றிலிருந்து யாரும் மதிய உணவு இடைவேளையின்போது மதிய உணவு சாப்பிட வெளியே செல்ல கூடாது என்று அந்த முடிவை சொல்லும் பொழுது அந்த இடத்திலே HENCEFORTH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி அந்த முடிவை சொல்லலாம். மேலும் நண்பர்களே! இந்த HENCEFORTH என்ற இந்த வார்த்தைக்கு பதிலாக HENCEFORWARD என்ற வார்த்தையையும் பயன்படுத்தலாம் இரண...

Know the word PAST...

படம்
Word of the day is PAST... Pronunciation /pæst/ Function The word PAST can be used as adjective, adverb and preposition. Meaning நண்பர்களே! PAST என்ற இந்த வார்த்தையை கடந்த அல்லது கடந்து அல்லது தாண்டி என்ற தமிழ் அர்த்தத்தில் நிறைய இடங்களில் பயன்படுத்தலாம். முதலாவதாக ஒருவர் நம்மை கடந்து நாம் செல்லும் திசையிலோ அல்லது நமக்கு எதிர் திசையிலோ செல்லும் பொழுது பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக He went past me in a bike but he did not notice me என்று சொல்லலாம் அதாவது அவன் பைக்கில் என்னைக் கடந்து சென்றான் ஆனால் அவன் என்னைக் கவனிக்கவில்லை என்று அர்த்தம். இரண்டாவதாக PAST என்ற இந்த வார்த்தையை ஒரு இடத்தை கடந்து இன்னொரு இடத்தை அடையும் இடத்தில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக You have to go past the post office to reach the bus stand என்று சொல்லலாம் அதாவது பேருந்து நிலையத்தை அடைய தபால் நிலையத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று அர்த்தம். மூன்றாவதாக PAST என்ற இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் நேரத்தை சொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக The time is ten past five என்று சொல்ல வேண்...

Know the idiom THREE DOG NIGHT...

படம்
Know the Idiom THREE DOG NIGHT. Function The idiom, THREE DOG NIGHT is a noun. Meaning It means very cold night என்று சொல்லலாம் அதாவது ரொம்ப குளிரான இரவு என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! வெயில் காலத்துல வெப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள வீடுகளில் ஏசி பயன்படுத்துவது வழக்கம். அதைப்போலவே குளிரான தேசங்களில் கடுங்குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் HEATER பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. HEATER என்று ஒன்றை கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் தங்களது படுக்கையை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வதற்காக படுக்கையில் நாய்களை பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. குளிரின் பயங்கரத்தை பொருத்து தேவையான நாய்களின் எண்ணிக்கையை கூட்டியதாக கூறப்படுகிறது. எனவே குளிரான இரவு காலங்களில் இரண்டு நாய்களை படுக்கையில் வைத்து தூங்கியதாகவும் ரொம்ப குளிரான இரவு காலங்களில் மூன்று நாய்களை படுக்கையில் வைத்து தூங்கியதாகவும் கடுங்குளிரான இரவு காலங்களில் நான்கு நாய்களை படுக்கையில் வைத்து தூங்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் TWO DOG NIGHT, THREE DOG NIGHT & FOUR DOG NIGHT என்று IDIOMS ...

Know the idiom AS COOL AS CUCUMBER..

படம்
Idiom is AS COOL AS CUCUMBER. Function The idiom, AS COOL AS CUCUMBER should be used in a sentence keeping cool as an adjective. Meaning It means very calm என்று சொல்லலாம் அதாவது மிகவும் அமைதியான என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தை குறித்து எல்லோரும் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பொழுது அல்லது ஒரு விஷயத்தை குறித்து எல்லோரும் ரொம்ப ரொம்ப ரொம்ப மன வேதனையில் இருக்கும் பொழுது ஒரு மனிதன் மட்டும் எந்தவித சஞ்சலமும் இல்லாதது போன்று, எந்தவித பதட்டமும் இல்லாதது போன்று, எந்த விதமான சந்தோஷமும் இல்லாதது போன்று, தனது உணர்ச்சியை எந்தவிதத்திலும் வெளிக்காட்டாமல்  COOL ஆக இருக்கும்பொழுது அந்த மனிதனை இந்த AS COOL AS CUCUMBER என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம். அதைப் போலவே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியதால் ஒருவர் பாராட்டப்படும் பொழுது அல்லது ஒரு விஷயத்தை குறித்து எல்லோரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதன் மட்டும் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்  அமைதியாக, COOL ஆக எந்தவித சஞ்சலமும் இல்லாமல் ஒருவர் இருக்கும்பொழுது அந்த மனிதனை இந்த AS CO...

Know the word EMBELLISH...

படம்
Word of the day is EMBELLISH... Pronunciation /ɪmˈbel.ɪʃ/ Function The word EMBELLISH is a verb. Meaning It means to make something more attractive or beautiful என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை கவர்ச்சிகரமாகவோ அல்லது அழகாகவோ உருவாக்குதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! EMBELLISH என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயத்தை வண்ணம் தீட்டியோ அல்லது கலை ஆபரணங்கள் சேர்த்தோ அல்லது கலை நயம் சேர்த்தோ கவர்ச்சிகரமாகவோ அல்லது அழகாகவோ உருவாக்குகிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தில் பலூன் கட்டி, கொடித்தால் கட்டி, வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தும் இடத்தில் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒருவர் எழுதிய கதைக்கு இன்னும் சில கவர்ச்சிகரமான வார்த்தைகளை சேர்த்து, நகைச்சுவை பகுதிகளை சேர்த்து,  இன்னும் பல புதிய வாக்கியங்களை இணைத்து அந்த கதையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிற இடத்திலும் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு இடத்தையோ அல்லது ஒரு பொருளையோ அல்லது ஒரு பேச்சையோ அல்லது ஒரு கதையையோ அ...

Know the word WHOPPING...

படம்
Word of the day is WHOPPING... Pronunciation /ˈwɑː.pɪŋ/ Function The word WHOPPING is an adjective. Meaning It means extremely large என்று சொல்லலாம் அதாவது ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் பொழுது அல்லது எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கும் பொழுது இந்த WHOPPING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். ஒரு விஷயம் என்று சொல்லும் பொழுது அந்த விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு பொருளாக இருக்கலாம் அல்லது ஒரு நபரின் எடையாக இருக்கலாம் அல்லது ஒருவருக்கு அடிபட்ட காயமாக இருக்கலாம் அல்லது ஒரு வெற்றியாக இருக்கலாம் அல்லது ஒரு தோல்வியாக இருக்கலாம் அல்லது ஒருவர் சொல்லும் பொய்யாக இருக்கலாம் அல்லது ஒருவருக்கு உயர்த்தப்பட்ட ஊதியமாக இருக்கலாம் அல்லது ஒருவர் அடித்த கோல்களின் எண்ணிக்கையாக இருக்கலாம். இவ்வாறு ஒரு விஷயம் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரியதாக இருக்கும் பொழுது அல்லது எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த WHOPPING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் ரொம்ப ரொம்ப ரொம்ப...

Know the word INCUMBENT...

படம்
Word of the day is INCUMBENT... Pronunciation /ɪnˈkʌm.bənt/ Function The word INCUMBENT can be used as adjective and noun. Note INCUMBENT என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக It means officially having the named position என்று சொல்லலாம் அதாவது பேர் கொண்ட பதவியை அதிகாரப்பூர்வமாக கொண்டுள்ள என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த INCUMBENT என்ற இந்த வார்த்தையானது பதவியில் இருக்கின்ற அல்லது பதவியில் இருக்கும் என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த INCUMBENT என்ற இந்த வார்த்தையை ஒரு அலுவலகத்தில் இருக்கும் எந்த ஒரு பதவியையும் குறிக்க பயன்படுத்தலாம். ஆனாலும்  INCUMBENT என்ற இந்த வார்த்தையானது ஓட்டு போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பதவியை குறிக்க அதிக அளவில்  பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக The incumbent president என்று சொல்லும் பொழுது பதவியில் இருக்கும் ஜனாதிபதி என்று அர்த்தம். The incumbent manager என்று சொல்லும் பொழுது பதவியில் இருக்கும் மேலாளர் என்று அர்த்தம். The incumbent headmast...

Know the word DISCOMFIT...

படம்
Word of the day is DISCOMFIT... Pronunciation /dɪˈskʌm.fɪt/ Function The word DISCOMFIT is a verb. Meaning It means to make someone feel uncomfortable, especially mentally என்று சொல்லலாம் அதாவது ஒருவரை மனதளவில் சங்கடப்படுத்துவது என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு பொது இடத்தில் பலபேர் முன்னிலையில் ஒருவர் மற்றொருவரை அவமானப்படுத்தும் பொழுது அந்த அவமானப்படுத்தப்பட்ட நபருக்கு மனதளவில் ஒரு கஷ்டமான அல்லது மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை உருவாகும். அப்படித்தானே? எனவே அந்த நபரால் அந்த இடத்துல அதற்கு மேல தொடர்ந்து இருக்கவே முடியாது. அதனால் அந்த நபருக்கு அந்த இடத்தை விட்டே ஓடிப் போய்விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் கூட உருவாகிவிடும். அப்படித்தானே? இவ்வாறாக ஒரு நபர் அசிங்கப்படுத்தப்படும் போது அவமானப்படுத்தப்படும் பொழுது நோகடிக்கப்படும் பொழுது இந்த DISCOMFIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் இந்த DISCOMFIT என்ற இந்த வார்த்தையானது ஒரு படை முற்றிலுமாக தோற்கடிக்கப்படுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த வார்த்தையானது ஒரு நபர் முற்றிலுமாக நோகடிக்...

Know the idiom SHED CROCODILE TEARS...

படம்
Let's learn an idiom today... Function The idiom, SHED CROCODILE TEARS is a verb. Meaning It means to pretend to be sad or to sympathize with someone without really caring about them என்று சொல்லலாம் அதாவது சோகமாக இருப்பது போல் நடிப்பது அல்லது பிறர் மீது அக்கறையாக இருப்பது போல் பொய்யான அனுதாபம் காட்டுவது என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த SHED CROCODILE TEARS என்ற இந்த IDIOM ஐ வெளிவேடக்காரர்கள் வடிக்கும் கண்ணீருக்கு ஒப்பிடலாம். அதாவது ஒரு நபர் சோகத்தில் இருக்கும் பொழுது அந்த சோகத்தில் இருக்கும் நபருடன் தானும் சோகத்தில் இருப்பது போல் நடித்து, பொய்யாக கண்ணீர் வடித்து  பிறரை ஏமாற்றும் பொழுது அந்த இடத்திலே இந்த SHED CROCODILE TEARS என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். இவ்வாறு ஒரு நபர் பொய்யாக கண்ணீர் வடித்து சோகத்தில் இருப்பது போல் நடிக்கும் பொழுது அந்த நபரை நீல கண்ணீர் வடிக்கிறார் என்று நாம் தமிழில் சொல்லுவோம். இப்படிப்பட்டவர்களை நமது உறவினர்கள் மத்தியில் பார்க்க முடியும். நாம் வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பார்க்க முடியும். மேலும் அரசியல்வாதிகள் பல பேர் இவ...

Know the word VAMOOSE...

படம்
Word of the day is VAMOOSE... Pronunciation /vəˈmuːs/ Function The word VAMOOSE is a verb. Meaning It means to go away or disappear suddenly என்று சொல்லலாம் அதாவது திடீரென்று மறைந்து போகுதல் அல்லது விலகிப் போகுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! எல்லாருக்குமே எல்லா இடமுமே பிடிக்காது என்று சொல்லலாம் அதற்கு காரணம் அங்கே இருக்கும் ஆட்களாக இருக்கலாம் அல்லது அங்கே நடக்கும் செயல்களாக இருக்கலாம். இவ்வாறாக நமக்கு ஒரு இடம் பிடிக்காமல் போகும் பொழுது அந்த இடத்திற்கு போகாமல் இருக்க முயற்சி செய்வோம். அப்படியே அந்த இடத்திற்கு போகக்கூடிய ஒரு சூழ்நிலை வந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே வெளியே வருவதற்கு முயற்சி செய்வோம். அப்படித்தானே? இவ்வாறாக ஒருவர் ஒரு இடத்திலிருந்து வேகமாகவோ அல்லது உடனடியாகவோ அல்லது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவோ தப்பித்து ஓடிவிடும் பொழுது அந்த இடத்திலே இந்த VAMOOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். VAMOOSE என்ற இந்த வார்த்தையானது SPANISH லிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும் SPANISH ல் VAMOSE என்ற இந்த வார்த்தைக்கு LET'S GO அல்லது WE SHALL GO என்ற அர்...

Know the word TAKE AROUND...

படம்
Word of the day is TAKE AROUND... Pronunciation /teɪk əˈraʊnd/ Function The word TAKE AROUND is a phrasal verb. எனவே இதனை VERB ஆக பயன்படுத்த வேண்டும். Meaning It means to visit a place with someone, showing them the most interesting or important parts என்று சொல்லலாம் அதாவது யாராவது ஒருவருக்கு ஒரு இடத்தின் மிகவும் சுவாரசியமான அல்லது முக்கியமான பகுதிகளை காட்டுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு நபர் ஒரு இடத்திற்கு புதிதாக வரும்போது அந்த இடத்தை சுற்றி பார்க்க விரும்புவார் மேலும் அந்த இடத்தில் உள்ள முக்கியமான மற்றும் சுவாரசியமான பகுதிகளை பார்க்க விரும்புவார். அப்படித்தானே! அதைப்போலவே புதிதாக ஒரு நபர் நாம் வாழ்கின்ற இடத்திற்கு வரும் பொழுது நாம் வாழ்கின்ற இடத்தை சுற்றிக்காட்டுவதற்காக அவர்களை அழைத்துச் செல்வோம். அப்படித்தானே! இவ்வாறாக ஒரு நபரை சுற்றிக்காட்டுவதற்காக அழைத்துச் செல்லும் பொழுது அந்த இடத்திலே இந்த TAKE AROUND என்ற இந்த PHRASAL VERB ஐ பயன்படுத்தலாம். எனவே தமிழில் சுற்றிக்காட்டுதல் அல்லது சுற்றிப்பார்க்க அழைத்து செல்லுதல் என்ற அர்த்தத்தில் TAKE AROUND என்ற இந்த வார...

Know the word SIMPLETON...

படம்
Word of the day is SIMPLETON... Pronunciation /ˈsɪm.pəl.tən/ Function The word SIMPLETON is a noun. Meaning It refers to a person without the usual ability to use reason and understand என்று சொல்லலாம் அதாவது பகுத்தறிவை பயன்படுத்தி ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளக்கூடிய வழக்கமான திறமை இல்லாத ஒரு மனிதர் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளக்கூடிய திறமை மற்றும் அதனை வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய திறமை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரு வாழ்வியல் கருத்தை சொன்ன முதல் முறையே புரிந்து கொண்டு அதனை வாழ்க்கையில் செயல்படுத்தும் திறமை கொண்டவர்களை நாம் அறிவாளி புத்திசாலி என்று தமிழில் அழைப்போம். அதற்கு நேர் எதிராக ஒரு வாழ்வியல் கருத்தை எத்தனை முறை சொன்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய திறமை இல்லாதவர்களை, அப்படியே புரிந்து கொண்டாலும் அதனை வாழ்க்கையில் செயல்படுத்த தெரியாதவர்களை அல்லது செயல்படுத்தாதவர்களை அறிவு கெட்டவர், புத்தி இல்லாதவர், பொது அறிவு இல்லாதவர், முட்டாள் என்று நாம் தமிழில் அழைப்போம். இவ்வாறாக ஒரு மனிதனால் ஒரு வாழ்வியல் கருத...

Know the word STEALTHILY...

படம்
Word of the day is STEALTHILY... Pronunciation /ˈstel.θəl.i/ Function The word STEALTHILY is an adverb. Meaning It means quietly and carefully in order not to be seen or heard என்று சொல்லலாம் அதாவது பார்க்கவோ கேட்கவோ கூடாது என்பதற்காக அமைதியாகவும் கவனமாகவும் செயல்படுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த STEALTHILY என்ற இந்த வார்த்தையானது ஒரு செயலானது இரகசியமாக, திருட்டுத்தனமாக யாரும் அறியாத வகையில் நடைபெறும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக ஒரு விலங்கு மற்றொரு விலங்கை வேட்டையாடும் பொழுது அந்த விலங்கிற்கு தெரியாமல் மெல்ல மெல்ல அதை நோக்கி நகருமிடத்தில் இந்த STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப் போலவே ஒரு மனிதன் பிறர் கண்களுக்கு தப்பி யாரும் அறியாத வகையில் இரகசியமாக திருட்டுத்தனமாக ஒரு செயலை செய்யும் பொழுது STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப் போலவே ஒரு கணினியினுள் ஒரு வைரஸ் நுழைந்து அங்கே உள்ள தகவல்களை இரகசியமாக திருட்டுத்தனமாக திருடுமிடத்தில் அல்லது அழிக்கும் இடத்தில் STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத...

Know the word GROWL...

படம்
Word of the day is GROWL... Pronunciation /ɡraʊl/ Function The word GROWL is a verb. Meaning It means to make a low, rough sound, usually in anger என்று சொல்லலாம் அதாவது பொதுவாக கோபத்தில் குறைந்த சத்தத்தில் கரடுமுரடான ஒலியை எழுப்புதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இரண்டு நாய்கள் சண்டை போடும் பொழுது கோபத்தில் ஒன்றை மற்றொன்று பார்த்து உர்ர்ர்ர் என்று சத்தத்தை எழுப்பும். அந்த சத்தத்தை தான் இந்த GROWL என்ற இந்த வார்த்தை குறிக்கிறது. ஒரு நாயானது அறிமுகமாகாத ஒரு மனிதனைப் பார்த்து இவ்வாறு சத்தத்தை எழுப்பும் பொழுது 'பக்கத்தில் வராதே, ஓடிப் போய்விடு" என்ற அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது. இவ்வாறாக ஒரு மனிதன் கோபத்தில் இருக்கும் பொழுது மற்றொரு மனிதன் மீது சத்தமிடும் பொழுது அந்த சத்தத்தை கூட இந்த GROWL எந்த இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். நாம் தமிழில் கூட ஒரு மனிதன் கோபத்தில் இன்னொரு மனிதன் மீது அதிக சத்தத்தில் திட்டும் பொழுது "நாய் போல கத்துகிறான்" என்று சொல்லுவோம் அந்த இடத்தில் இந்த GROWL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் உறுமுதல் அல்லது நாய...

Know the word AFFORD...

படம்
Word of the day is AFFORD... Pronunciation /əˈfɔːrd/ Function The word AFFORD is a verb. Note AFFORD என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக It means to have enough money or time to spend for என்று சொல்லலாம் அதாவது செலவழிக்க போதுமான பணமோ அல்லது நேரமோ இருத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவரிடத்தில் ஒரு பொருள் வாங்குவதற்கு போதுமான பணம் இருக்கும் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் ஒரு காரணத்திற்காக செலவு செய்வதற்கு போதுமான நேரம் இருக்கும் இடத்தில் AFFORD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது CAN AFFORD அல்லது CAN'T AFFORD என்று CAN என்ற வார்த்தையை இதோடு இணைத்தே பயன்படுத்த வேண்டும். இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் வாங்க முடிதல் அல்லது செலவு செய்ய முடிதல் என்று அர்த்தத்தில் AFFORD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். Meaning இரண்டாவதாக It means to provide or supply something என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை வழங்குதல் அல்லது அளித்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்...