இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word VIE...

படம்
Word of the day is VIE. Pronunciation /vaɪ/ Function The word VIE is a verb. Meaning   It means to compete with other people to achieve or get something என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை சாதிக்க அல்லது பெற மற்றவர்களுடன் போட்டியிடுதல் என்று அர்த்தம்.   நண்பர்களே! VIE என்ற இந்த வார்த்தையானது பிரெஞ்சு மொழியில் உள்ள ENVIER என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும். ENVIER என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு ஆங்கிலத்தில் TO DESIRE or TO COVERT என்று சொல்லலாம் அதாவது தமிழில் ஆசை கொள்ளுதல் அல்லது பேராசை கொள்ளுதல் என்று அர்த்தம் ஆனால் ஆங்கிலத்தில் இந்த வார்த்தையானது ஒரு விஷயத்திற்காக ஆசைப்படுதல் என்ற நிலையிலிருந்து ஒரு விஷயத்திற்காக போட்டியிடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு வேலைக்காக போட்டியிடும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம் அதைப்போலவே ஒரு விளையாட்டு போட்டியில் பல பேர் ஒரு வெற்றிக்காக போட்டியிடும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம் அதைப்போலவே அரசியலில் பல பேர் ஒரு வெற்றிக்காக போட்டியிடும் பொழுது அந்த

Know the phrase NO LONGER...

படம்
Know the phrase NO LONGER... Function The phrase NO LONGER is an adverb. Meaning It is used to indicate that something that was valid in the past is not valid anymore என்று சொல்லலாம் அதாவது கடந்த காலத்தில் செல்லுபடியாகிய ஒன்று இனி செல்லுபடியாகாது என்பதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம். மேலும் NO LONGER என்ற இந்த PHRASE ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது அதனை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியமாகும். எனவே கீழ்காணும் வாக்கியங்களை கற்றுக் கொள்வதன் மூலமாக இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம். 1) DO VERB or ACTION VERB ஐ கொண்ட ஒரு வாக்கியத்தில் NO LONGER என்ற இந்த PHRASE ஐ SUBJECT க்கும் VERB க்கும் இடையில் அமைக்க வேண்டும். FOR EXAMPLE Raja no longer plays football என்ற வாக்கியத்தில் DO VERB ஆக PLAY என்ற VERB வந்துள்ளது ஆதலால் NO LONGER என்ற இந்த PHRASE ஆனது SUBJECTக்கும் VERB க்கும் இடையில் அமைந்துள்ளது மேலும் இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ராஜா இனி ஒரு போதும் கால்பந்து விளையாட மாட்டார் என்பதாகும்  மேலும் இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம்

Know the word PRESUME...

படம்
Word of the day is PRESUME. Pronunciation /prɪˈzuːm/ Function The word PRESUME is a verb. Meaning   It means to suppose something to be true without definite proof என்று சொல்லலாம் அதாவது திட்டவட்டமான ஆதாரம் இல்லாமல் ஏதாவதொன்றை உண்மை என்று கருதுவது என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! PRESUME என்ற இந்த வார்த்தையானது ஒரு நபர் தனது கடந்த கால அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது தனக்கு கிடைத்த குறைந்தபட்ச தகவல்களின் அடிப்படையிலோ ஒரு சூழ்நிலையை ஊகித்து முடிவுக்கு வரும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒருவர் "I presume that he will be at the meeting." என்று சொல்லும் பொழுது அவர் யாரைக் குறித்து சொல்கிறாரோ அந்த நபர் அந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்று உறுதியாக சொல்லாமல், இருக்கலாம் என்று ஊகித்து சொல்கிறார் என்று அர்த்தமாகும். அதைப்போலவே "I presume that you have already completed the assignment."  என்று சொல்லும் பொழுது அந்த நபர் யாரைக் குறித்து கூறுகிறாரோ, அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து விட்டார் என்று ஊகித்து சொல்கிறாரே தவிர அந்த நபர் செ

Know the word UNSCRUPULOUS...

படம்
Word of the day is UNSCRUPULOUS... Pronunciation /ʌnˈskruː.pjə.ləs/ Function The word UNSCRUPULOUS is an adjective. Meaning   It describes someone or something that behaves in a dishonest, unfair or unethical way என்று சொல்லலாம் அதாவது நேர்மையற்ற, நியாயமற்ற அல்லது நெறிமுறையற்ற முறையில் நடந்து கொள்ளும் ஒருவர் அல்லது ஏதாவதொன்று என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! ஒரு நபர் தன்னுடைய எண்ணம் அல்லது குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்மையற்ற முறையில் அல்லது நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பொழுது அந்த நபரை UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். மேலும் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் பிறருக்கு ஏற்படும் தீங்கினை குறித்து சிறிதும் கலக்கம் அடையாதவர்களாகவே, மனசாட்சி குத்தாதவர்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, ஒரு BUSINESSMAN தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களைச் சுரண்டி தனது லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்யும் பொழுது அந்த நபரை விவரிக்க UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதேபோலவே ஒரு அரசியல்வாதி தனது அதிகாரம் மற்றும் அரசி

Know the word SERENDIPITY...

படம்
Word of the day is SERENDIPITY... Pronunciation /ˌser.ənˈdɪp.ə.t̬i/ Function The word SERENDIPITY is a noun. Meaning   It refers to the finding of interesting or valuable things by chance என்று சொல்லலாம் அதாவது தற்செயலாக சுவாரஸ்யமான அல்லது மதிப்புமிக்க விஷயங்களைக் கண்டுபிடிப்பது என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! முழுக்க முழுக்க அதிர்ஷ்டவசமாக அல்லது முற்றிலும் எதிர்பாராத விதமாக அதாவது தற்செயலாக ஏதாவதொரு சந்தோஷமான நிகழ்ச்சி அல்லது மனதுக்கு இனிதான நிகழ்ச்சி அல்லது ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி நடைபெறும் பொழுது அந்த நிகழ்ச்சியை SERENDIPITY என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம். எடுத்துக்காட்டாக எதிர்பாராத விதமாக நீங்கள் ரயிலிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ சந்தித்த ஒரு நபரின் மூலமாக உங்களுக்கு கிடைத்த ஒரு நீண்ட கால நட்பு அல்லது அந்த நிகழ்வின் மூலமாக உங்களுக்கு கிடைத்த ஒரு வேலை வாய்ப்பை SERENDIPITY எந்த இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம். அதைப்போலவே வீட்டிலே ஏதாவதொன்றை தொலைத்து விட்டு அதனை தேடிக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு முன்பாக தொலைத்த மிகவும் முக்கியமான மற்றொரு பொருள் கிடைக்க

Know the word REBATE...

படம்
Word of the day is REBATE... Pronunciation /ˈriː.beɪt/ Function The word REBATE can be used as noun and verb. Meaning   It refers to a reduction in the price of a product or service என்று சொல்லலாம் அதாவது தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் அல்லது வழங்கப்படும் சேவையின் விலையில் குறைப்பு என்று அர்த்தம். பொதுவாக நண்பர்களே! ஒரு உற்பத்தியாளரோ அல்லது ஒரு சில்லறை வியாபாரியோ தங்களிடம் புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை அல்லது உபரியாக இருக்கும் உபரி சரக்குகளை வாடிக்கையாளருக்கு விற்பதற்காக தள்ளுபடிகள் கொடுத்து அவற்றை விற்கும் பொழுது அந்த இடத்திலே REBATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மொத்தத்தில் புதிதாக ஒரு பொருள் வாங்கும் பொழுது அந்த பொருளை விற்பனை செய்பவர் OFFER வழங்கும்பொழுது அல்லது CASH DISCOUNT வழங்கும்பொழுது அல்லது 10% CASH REFUND வழங்கும்பொழுது அல்லது CASH REFUND IN FUTURE PURCHASE என்று சொல்லும் பொழுது அதனை இந்த REBATE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். எனவே தமிழில் தள்ளுபடி என்ற அர்த்தத்தில் REBATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence It is always good to buy

Know the idiom FINAL NAIL IN THE COFFIN...

படம்
Know the Idiom FINAL NAIL IN THE COFFIN... Function The idiom FINAL NAIL IN THE COFFIN is a noun. Meaning It refers to the final event or action that leads to the complete and irreversible downfall என்று சொல்லலாம் அதாவது முழுமையான மற்றும் மீளமுடியாத வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இறுதி நிகழ்வு அல்லது செயல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! எவ்வாறாக ஒரு சவப்பெட்டியில் இறந்த மனிதனை வைத்து சவப்பெட்டியை இறுதி ஆணியால் அடித்து மூடும் பொழுது அந்த மனிதனுக்கான எல்லாமே நிறைவுக்கு வருகிறதோ அதைப்போல தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த ஒரு நிறுவனமோ அல்லது ஒரு மனிதனோ இறுதியாக சந்திக்கின்ற ஒரு தோல்வியோடு அந்த நிறுவனத்தின் அல்லது அந்த மனிதனின் நல்ல பெயருக்கு அல்லது வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் பொழுது அந்த இடத்திலே அந்த நிறுவனம் அல்லது அந்த மனிதன் சந்தித்த அந்த இறுதியான தோல்வியை FINAL NAIL IN THE COFFIN என்ற இந்த IDIOM ஐ கொண்டு குறிக்கலாம். FINAL NAIL IN THE COFFIN என்ற இந்த IDIOM ஐ LAST NAIL IN THE COFFIN என்றும் பயன்படுத்தலாம். இரண்டிற்குமே ஒரே அர்த்தம்தான். எனவே தமி

know the term WHITE ELEPHANT...

படம்
Word of the day is WHITE ELEPHANT... Pronunciation /ˌwaɪt ˈel.ɪ.fənt/ Function The word WHITE ELEPHANT is a noun. Meaning   It refers to a possession that is a financial burden என்று சொல்லலாம் அதாவது நிதிச்சுமையாக இருக்கும் ஒரு உடைமை என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! பொதுவாக யானை  கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த வெள்ளை நிற யானையானது யானை வகையில் மிகவும் அரியவகை ஒன்றாகும். இந்த அரிய வகை வெள்ளை யானைகள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள இந்தோனேசியா, மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இதனைச் சார்ந்த பிற நாடுகளிலும்  காணப்பட்டன. இவை அரிய வகையாக இருந்ததால் இவற்றை ஒருவர் உடைமையாக பெற்றிருப்பது ஒரு கௌரவமாக, மதிப்புமிக்க ஒன்றாக, பெருமையான ஒன்றாக பார்க்கப்பட்டது எனவே இவை பரிசாகவும் பிறருக்கு வழங்கப்பட்டது. நாளடைவில் இந்த வெள்ளை யானைகளை பராமரிப்பது என்பது ஒரு பெருஞ்சுமையாக மாறிவிட்டது அதே நேரத்தில் அதனை பரிசாக பெற்றவர் பராமரிப்பது என்பது மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறிவிட்டது. இவ்வாறாக மதிப்பு மிக்க ஒரு பொருள் பராமரிக்க முடியாத காரணத்தினால் ஒரு பெருஞ்சுமையாக அதனை உடைமையாக பெ

Know the word PERUSAL...

படம்
Word of the day is PERUSAL. Pronunciation /pəˈruː.zəl/ Function The word PERUSAL is a noun. Meaning   It refers to reading carefully with intent to remember என்று சொல்லலாம் அதாவது நினைவில் கொள்ளும் நோக்கத்துடன் கவனமாகப் படித்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியையும் ரசித்து, ருசித்து, மனதில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாசிக்கும் பொழுது அந்த இடத்திலே PERUSAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே கூர்ந்து ஆராய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு DOCUMENT ஐ மிகக் கவனமாக ஒரு வரி கூட விடாமல் வாசித்து ஆய்வு செய்யும் பொழுது அந்த இடத்திலேயும் PERUSAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் கூர்ந்து வாசித்தல் அல்லது முழுமையாகப் வாசித்தல் அல்லது ஒரு வரி கூட விடாமல் வாசித்தல் அல்லது கூர்ந்து ஆராய்தல் போன்ற அர்த்தங்களில் PERUSAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence It is good to give the contract a thorough perusal before approving it  ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்க

Know the phrasal verb PUT DOWN...

படம்
Word of the day is PUT DOWN... Pronunciation /pʊt daʊn/ Function The word PUT DOWN is a phrasal verb and it is used as a verb in a sentence. Note PUT DOWN என்ற இந்த phrasal verb ஐ PUT SOMETHING DOWN அல்லது PUT SOMEONE DOWN என்று இரண்டு அர்த்தங்களில் ஆறு விதமாக பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக to keep something down என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது மேலே உள்ள ஒரு நிலையிலிருக்கும் ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதனையோ அதற்கு கீழே உள்ள ஒரு நிலையில் மெதுவாக வைத்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக Kindly put the mobile down on the table. தயவுசெய்து மொபைலை மேசையில் மேலே வைக்கவும். Kindly put the baby down on the floor  தயவுசெய்து குழந்தையை கீழே தரையின் மேல் வைக்கவும். இரண்டாவதாக to write or record something என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது எதையாவதொன்றை டைரியில் அல்லது நோட்டில் எழுதுதல் அல்லது பதிவு செய்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக You can put down your thoughts in a paper and then give it to me. உங்களது எண்ணங்களை ஒரு காகி

Know the word ARSONIST...

படம்
Word of the day is ARSONIST Pronunciation /ˈɑːr.sən.ɪst/ Function The word ARSONIST is a noun. Meaning   It refers to a criminal who illegally sets fire to property என்று சொல்லலாம் அதாவது சட்டவிரோதமாக சொத்துக்களுக்கு தீ வைக்கும் குற்றவாளி என்று அர்த்தம். நண்பர்களே! இந்த ARSONIST ஐ தீ வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் தங்களுடைய கோபத்தை தீ வைப்பதன் மூலமாகதான் காட்டுவார்கள். ஒருவர் தன்னுடைய வீட்டையோ அல்லது நிலத்தையோ அல்லது காரையோ அல்லது ஏதாவதொன்றையோ தீ வைத்து அதன் மூலமாக காசு சம்பாதிக்க திட்டமிடும்போது அவர்களை இந்த ARSONIST என்று இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். மேலும் ஒருவர் தனது கோபத்தை காட்டும் விதமாக அல்லது பழிக்கு பழி வாங்கும் விதமாக பிறரின் சொத்தை எரித்து சேதப்படுத்தும் போது, நாசம் செய்யும் போது அவரையும் இந்த ARSONIST என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். மொத்தத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஒருவர் தன்னுடைய சொத்தையோ அல்லது பிறரது சொத்தையோ தீ வைத்து அழிக்கும் பொழுது அந்த நபரை ARSONIST என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். எனவே தமிழில் சட்ட விரோதமாக

Know the idiom CRY OVER SPILLED MILK...

படம்
Know the idiom CRY OVER SPILLED MILK Function The idiom CRY OVER SPILLED MILK is used in a sentence keeping the word CRY as a verb. Meaning It means to feel sorry or sad about something that has already happened என்று சொல்லலாம் அதாவது ஏற்கனவே நடந்த ஒன்றை நினைத்து வருந்துவது அல்லது வருத்தப்படுவது என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! நாம் பேசும் பொழுது சில நேரங்களில் சொல்லுவோம். அதாவது நடந்தது நடந்திருச்சு, PAST IS PAST இனிமேல் அதை பற்றி பேசுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று சொல்லுவோம் அந்த இடத்திலே CRY OVER SPILLED MILK என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். இந்த IDIOM ஆனது கடந்த காலத்தை குறித்து பேசுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று எதிர்மறை வாக்கியமாக பேசும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் இந்த IDIOM ஐ பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைக்கும் பொழுது, அந்த வாக்கியத்தில் NO, NOT, NEVER போன்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக It is no use crying over spilled milk என்று வாக்கியத்தை ஆரம்பிக்கலாம் அதாவது கடந்த காலத்தைப் பற்றி பேசுவதில் எந்தவித பயனும

Know the word SINECURE...

படம்
Word of the day is SINECURE... Pronunciation /ˈsɪnɪkjʊər/ Function The word SINECURE is a noun. Meaning It means a paid position that involves little or no work என்று சொல்லலாம் அதாவது கொஞ்சம் கூட வேலையே இல்லாத ஒரு வேலைக்கு ஊதியம் வழங்குவது என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! எந்தவித உடல் உழைப்பு இல்லாமலும் எந்த வித அறிவு பகிர்வு இல்லாமலும் ஒருவர் மிக குறைந்த வேலையை செய்து மிக அதிக ஊதியம் பெறும்பொழுது அந்த இடத்திலே SINECURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக அரசாங்கத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது பெரிய பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பை வகிப்பவர்கள் பெயரளவிலேயே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் வேலை முக்கியமான நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டியது இருக்கும் மேலும் முக்கியமான கோப்புகளில் கையெழுத்து போட வேண்டி இருக்கும் இதை தவிர பெரிய அளவில் உடல் உழைப்போ அல்லது அறிவு பகிர்வோ செய்ய வேண்டியது இருக்காது ஆனால் அவர்கள் பெறும் ஊதியமோ மற்ற எல்லாரையும் விட மிக அதிகமாக இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் தான் SINECURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வே

Know the term SIGNIFICANT OTHER...

படம்
Word of the day is SIGNIFICANT OTHER. Pronunciation /sɪɡˌnɪf.ɪ.kənt ˈʌð.ɚ/ Function The word SIGNIFICANT OTHER is a noun. Meaning   a person with whom someone has a romantic or sexual relationship that has lasted for some time and that is likely to last longer என்று சொல்லலாம் அதாவது  யாரொருவருடன் ஒரு நபர் சிறிது காலம் நீடித்த மற்றும் நீண்ட காலம் நீடித்த பாலியல் உறவை கொண்டிருந்தாரோ அந்த நபர் என்று அர்த்தம். நண்பர்களே! காலங்கள் மாற மாற மனிதனுடைய எண்ணங்களும் மாறுகிறது மனிதனுடைய எண்ணங்கள் மாற மாற அவனுடைய செயல்களும் மாறுகிறது இவ்வாறாக மனிதனுடைய எண்ணங்களும் செயல்களும் மாறுவதால் அதற்கேற்றார் போல சில வார்த்தைகளும் உருவாகிறது. அதன்படி உருவான ஒரு வார்த்தை தான் இந்த SIGNIFICANT OTHER. இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் தான் உனக்கு BOYFRIEND இருக்கிறதா? அல்லது உனக்கு GIRLFRIEND இருக்குதா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் மேலை நாடுகளில் Do you have a BOYFRIEND? அல்லது Do you have a GIRLFRIEND? என்று கேட்பதை நிறுத்தியே விட்டார்கள். அப்படியே ஒருவர் மற்றொருவரிடம் அதிலும் சிறந்து விதமா

Know the idiom BITE THE BULLET...

படம்
Know the Idiom is BITE THE BULLET. Function The idiom BITE THE BULLET is used in a sentence keeping the word BITE as a verb. Meaning It means to be brave in a difficult situation என்று சொல்லலாம் அதாவது ஒரு கடினமான சூழ்நிலையில் தைரியமாக இருத்தல் என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! ஒரு மனிதன், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தைரியமான முடிவை எடுக்கும் பொழுது அந்த இடத்திலே BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக உடனடியாக ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஆனால் அதே நேரத்தில் அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று வரும் பொழுது அந்த நபர் அந்த வலியை மயக்க மருந்து இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள ஒப்புக்கொள்ளும் பொழுது அந்த முடிவை இந்த BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி கூறலாம். இவ்வாறாக ஒரு மனிதர், ஒரு கடினமான சூழ்நிலையில், துணிகரமான ஒரு முடிவை எடுத்து அதனை செயல்படுத்தும் போது அந்த இடத்திலே BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். தமிழில் துணிகர முடிவு அல்லது தைரியமான முடிவு என்ற அர்த்தத்தில் இந

Know the word MELLIFLUOUS...

படம்
Word of the day is MELLIFLUOUS... Pronunciation / melˈɪf.lu .əs/ Function The word MELLIFLUOUS is an adjective. Meaning It means having a pleasant and soothing sound என்று சொல்லலாம் அதாவது இனிமையான மற்றும் ஆறுதலான ஒலியைக் கொண்டிருக்கின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த வார்த்தையானது MELLIFLUUS என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் FLOWING WITH HONEY என்றாகும் அதாவது தேனாக பாய்கின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நாம் தமிழில் சில நேரங்களில் பயன்படுத்துவோம் அதாவது ஒருவருடைய பேச்சோ அல்லது ஒரு இசையோ கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் பொழுது மனதிற்கு ஆறுதல் தருவதாக இருக்கும் பொழுது அந்த பேச்சை அல்லது அந்த இசையை தேன் போல் காதில் பாய்கின்றது என்று சொல்வோம். அதே அர்த்தத்தில் இந்த MELLIFLUOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் கனிவாக, மென்மையாக, இனிமையாக, ஆறுதலாக, தேன் போல் பாய்கின்ற, மென்மையாக போன்ற அர்த்தஙகளில் இந்த MELLIFLUOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence Th

Know the word EFFERVESCENT...

படம்
Word of the day is EFFERVESCENT... Pronunciation /ˌef.ɚˈves.ənt/ Function The word EFFERVESCENT is an adjective. Note The word EFFERVESCENT has two meanings. Meaning முதலாவதாக it means giving off bubbles   என்று சொல்லலாம் அதாவது குமிழ்களை வெளியேற்றுகிற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! உடல் சோர்வாக இருக்கும் பொழுது உற்சாகத்தை தூண்டுவதற்காக குளுக்கோஸ் மாத்திரைகள் என்று ஒன்று உண்டு. அதனை தண்ணீரில் போடும் பொழுது குமிழ்களும் நுரைகளும் மளமளவென்று வெளியே வரும் அவ்வாறாக குமிழ்களும் நுரைகளும் மளமளவென்று வெளியே வருவதை EFFERVESCENT என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். இதனை EFFERVESCENT REACTION என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் குமிழ்களை உண்டாக்குகிற அல்லது உற்சாகத்தை உண்டாக்குகிற என்ற அர்த்தத்தில் இந்த EFFERVESCENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இரண்டாவதாக it means active, cheerful and full of energy என்று சொல்லலாம் அதாவது சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான மற்றும் ஆற்றல் நிறைந்த என்று அர்த்தம். அதாவது ஒரு நபரோ அல்லது ஒரு இடமோ அல்

Know the word AVALANCHE...

படம்
Word of the day is AVALANCHE... Pronunciation /ˈæv.əl.æntʃ/ Function The word AVALANCHE can be used as verb and noun. Meaning It means a large amount of ice, snow, and rock falling quickly down the side of a mountain என்று சொல்லலாம் அதாவது ஒரு பெரிய அளவில் பனிக்கட்டி, பனி மற்றும் பாறை போன்றவை மலையின் ஒரு பகுதியில் விரைவாக சரிந்து விழுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பனிச்சரிவு ஏற்படும் பொழுது அந்தச் சரிவில் பனி, பனிக்கட்டி, பனிப்பாறை என எல்லாமே சேர்ந்து ஒன்றாக மிகவும் வேகமாக கீழ்நோக்கி சரிந்து விழும் பொழுது அதனை இந்த AVALANCHE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். இவ்வாறாக பனிச்சரிவு ஏற்படும் போது அந்த பனிச்சரிவானது மிகவும் வேகமாக தொலைதூரம் வரை பயணிக்க கூடியது இவ்வாறாக பயணிக்கும் பொழுது உயிரினங்கள் அதனூடே சிக்கி மரணமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இதே அர்த்தத்தில் இந்த வார்த்தையை உருவகமாகவும் பயன்படுத்தலாம் அதாவது ஒரே நேரத்தில் பல வேலைகள் ஒன்றாக வந்து, சூழ்நிலை சமாளிக்க முடியாத அளவிற்கு போகும்பொழுது அந்த இடத்திலே AVALANCHE என்ற இந்த

Know the word STEWARDSHIP...

படம்
Word of the day is STEWARDSHIP... Pronunciation /ˈstu·ərdˌʃɪp/ Function The word STEWARDSHIP is a noun. Meaning It refers to care or management என்று சொல்லலாம் அதாவது பராமரிப்பு அல்லது மேலாண்மை என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! STEWARDSHIP என்ற இந்த வார்த்தையானது ஒரு நபர், தன்னிடம் பொறுப்பாக வழங்கப்பட்ட வளங்களை பராமரித்தல் அல்லது பாதுகாத்தல் அல்லது மேலாண்மை செய்தல் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. வளங்கள் என்று சொல்லும் பொழுது அது இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று போன்றவற்றை குறிக்கலாம் மேலும் பொருளாதார வளங்களான ஒருவருடைய சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் பணம் போன்றவற்றை குறிக்கும். இவ்வாறாக ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும் பொழுது, அந்த நபர் பொறுப்பாக வழங்கப்பட்ட அந்த வளங்களை பராமரித்தல், பாதுகாத்தல் மேலும் அவற்றை பெருக்கி வளர செய்தல் போன்றவற்றில் முடிவுகள் எடுக்கவும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் STEWARDSHIP என்பது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வளங்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் நம்பிக்கைகுரியவராக இருப்பது என்று சொல்லலாம். தமிழில் பாதுகாக்கும் பொறுப்பு

Know the word BIG-TICKET...

படம்
Word of the day is BIG-TICKET... Pronunciation /ˈbɪɡˌtɪkɪt/ Function The word BIG-TICKET is an adjective. Meaning The word BIG-TICKET is used to describe things that cost a lot of money to buy என்று சொல்லலாம் அதாவது வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும் பொருட்களை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் பல நாட்களாக  மெனக்கெடுத்து காசு சேமித்து வாங்கும் அளவிற்கு மிகவும் விலையுயர்ந்த பொருட்களை இந்த BIG-TICKET என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக ஒரு நிலம் வாங்குவது அல்லது ஒரு வீடு வாங்குவது அல்லது ஒரு கார் வாங்குவது அல்லது விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் வாங்குவது அல்லது தங்க நகைகள் வாங்குவது  போன்றவற்றை சொல்லலாம். எனவே தமிழில் விலை உயர்ந்த பொருள் அல்லது விலை மிகுந்த பொருள் என்ற அர்த்தத்தில் இந்த BIG-TICKET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் இந்த வார்த்தையை ஒரு வாக்கியதில் பயன்படுத்தும் பொழுது இடையில் இருக்கும் HYPHEN SYMBOL ஐ யும் சேர்த்தே எழுத வேண்டும். In a sentence It seems that you are saving some money for some big-tick

Know the word PICK-ME-UP...

படம்
Word of the day is PICK-ME-UP... Pronunciation /ˈpɪk·miˌʌp/ Function The word is a noun. Meaning It refers to something, often food or drink, that gives you more energy or makes you feel better என்று சொல்லலாம் அதாவது ஒருவரை நன்றாக உணர வைக்கிற அல்லது ஆற்றலை அதிகரிக்கிற ஏதாவதொன்று பொதுவாக உணவு அல்லது பானம் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! உடல் சோர்விலோ அல்லது மனசோர்விலோ இருக்கும் ஒரு மனிதன் தற்காலிகமாக ஊக்கம் பெறும் விதமாக உண்ணும் உணவையோ அல்லது குடிக்கும் பானத்தையோ அல்லது செய்யும் ஏதாவதொரு செயல்பாட்டையோ இந்த PICK-ME-UP என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். எடுத்துக்காட்டாக உணவு வகைகளில்  பழங்கள் அல்லது சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிடுதலை சொல்லலாம். பானமாக சொல்லும் பொழுது டீ குடித்தல் அல்லது காபி குடித்தல் போன்றவற்றை சொல்லலாம். செயல்பாடு என்று சொல்லும் பொழுது ஏதாவதொரு சின்ன நடை பயிற்சி அல்லது ஒரு சின்ன உடற்பயிற்சி போன்றவற்றை சொல்லலாம். தமிழில் ஊக்கமளிக்கும் உணவு அல்லது உற்சாக பானம் அல்லது உற்சாகமளிக்கும் செயல்பாடு  போன்ற அர்த்தங்களில் இந்த PICK-ME-UP என்ற இந்த வார்த்த

Know the word CRANKY...

படம்
Word of the day is CRANKY... Pronunciation / ˈkræŋ.ki / Function The word CRANKY is an adjective. Note The word CRANKY has two meanings. Meaning முதலாவதாக It means easily annoyed என்று சொல்லலாம் அதாவது எளிதில் எரிச்சல் அடைதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதனுக்கு சகிப்புத்தன்மை என்ற ஒன்று குறைவாக இருக்கிற பொழுது அவன் எல்லா விஷயத்திற்கும் எரிச்சல் அடைவான். அவன் எதை பார்த்தாலும் எரிச்சல் அடைவான், எதைக் கேட்டாலும் எரிச்சல் அடைவான். இவ்வாறாக ஒரு மனிதன் மிகவும் எளிதாக எரிச்சல் அடையக் கூடியவனாக இருக்கும் பொழுது அந்த மனிதனை இந்த CRANKY என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். எனவே தமிழில் எளிதாக எரிச்சலடைகின்ற அல்லது எல்லாவற்றிற்கும் எரிச்சலடைகின்ற அல்லது எதற்கெடுத்தாலும் எரிச்சலடைகின்ற போன்ற அர்த்தங்களில் இந்த CRANKY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். Meaning இரண்டாவதாக It means strange and unusual என்று சொல்லலாம் அதாவது விசித்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதனின் எண்ணங்களும் செயல்களும் வித்தியாசமாக இருக்கும் பொழ

Know the idiom BREATHE A WORD...

படம்
Know the idiom BREATHE A WORD... Function The idiom BREATHE A WORD is used in a sentence keeping the word BREATHE as a verb. Meaning It means to tell a secret என்று அர்த்தம் அதாவது ஒரு இரகசியத்தை சொல்லுதல் என்று அர்த்தம்.   நண்பர்களே! BREATHE A WORD என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும் பொழுது அந்த வாக்கியமானது 99 சதவீதம் NEGATIVE வாக்கியமாகவே பேசப்படுகிறது. அதாவது இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது அந்த வாக்கியத்தில் NOT அல்லது NEVER போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியே பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு பேர் அல்லது மூன்று பேருக்கே தெரிந்த அல்லது தெரிவிக்கப்பட்ட ஒரு இரகசியத்தை மற்றவருக்கு சொல்லாதே அல்லது சொல்லிவிடாதே  என்ற அர்த்தத்திலேயே 99 சதவீதம் இந்த IDIOM ஆனது பயன்படுத்தப்படுகிறது. மீதி இருக்கின்ற ஒரு சதவீதம் POSITIVE வாக்கியமாக பயன்படுத்தப்படுகிறது எனவே POSITIVE வாக்கியமாகவும் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். BREATHE A WORD என்ற இந்த IDIOM ஐ SAY A WORD என்ற PHRASE ஆகவும் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தலாம். இரண்டிற்குமே ஒரே அர்த்தம்தான். தமிழில

Know the word STATUS QUO...

படம்
Word of the day is STATUS QUO... Pronunciation /ˌsteɪ.t̬əs ˈkwoʊ/ Function The word is a noun. Meaning It refers to the present situation or condition என்று சொல்லலாம் அதாவது தற்போதைய சூழ்நிலை அல்லது நிலை என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த STATUS QUO என்ற இந்த வார்த்தையானது ஒரு  NEGATIVE ஆன அர்த்தத்தை கொண்ட ஒரு வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தொழிலோ அல்லது ஒரு முடிவோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே நிலையில் பல நாட்களாக, பல வருடங்களாக நீடித்துக் கொண்டே இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த STATUS QUO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தவித முன்னேற்றத்தையோ அல்லது மாற்றத்தையோ விரும்பாத பொழுது அவர்கள் தற்போது இருக்கும் நிலையையே அதாவது STATUS QUO வையே தொடர்ந்து நீடித்திருக்க விரும்புவார்கள். அதே நேரத்தில்  புதிய சிந்தனைகளை கொண்ட துடிதுடிப்பான ஒருவர் பொறுப்பில் வரும் பொழுது புது முயற்சிகளை செய்ய ஆர்வத்துடன் இருப்பார். இப்படிப்பட்டவர்கள் தற்போது இருக்கும் நிலையை மாற்ற முயற்

Know the word DUBIOUSLY...

படம்
Word of the day is DUBIOUSLY... Pronunciation / ˈduː.bi.əs.li / Function The word DUBIOUSLY is an adverb. Meaning It means in a way that is probably not true or fair, or that is probably not honest என்று சொல்லலாம் அதாவது ஒருவேளை ஒரு விஷயம் உண்மையாகவோ அல்லது நியாயமாகவோ அல்லது நேர்மையாகவோ இல்லாத வகையில் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நாம் நம் கண்களால் பார்க்கிற ஒரு விஷயமோ அல்லது காதால் கேட்கிற ஒரு விஷயமோ நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிற பொழுது அல்லது அதனுடைய உண்மைத்தன்மை நமக்கு கேள்விக்குறியதாக தெரியும் பொழுது அந்த இடத்திலே DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக உங்களுடைய ஆதார் அட்டையை ஒருவர் சரி பார்க்கும் பொழுது அந்த ஆதார் அட்டையில் உள்ள உங்களது புகைப்படத்தையும் உங்களையும் ரொம்ப நேரமாக சந்தேகத்தோடு ஒருவர் பார்க்கும் பொழுது அந்த இடத்திலே இந்த DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு தேர்தல் முடிவைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அல்லது பார்த்து கொண்டிருக்கும் பொழுது அங்கே சொல்லப்படும் முடிவுகள் உங்களுக்கு சந்தேகத்தை ஏற

Know the idiom DEPART THIS LIFE...

படம்
Know the idiom DEPART THIS LIFE... Function The idiom DEPART THIS LIFE is used in a sentence keeping the word DEPART as a verb. Meaning It means to die என்று அர்த்தம் அதாவது தமிழில் இறந்து விடுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இறந்து விடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பல வழிகளில் சொல்லலாம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அந்த அளவுக்கு எக்கச்சக்கமான வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளது. அதைப்போலவே அதற்கு நிகரான தமிழ் வார்த்தைகளும் உள்ளது என்று சொல்லலாம். நாம் சாதாரணமாக DIE என்ற வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லது PASS AWAY என்ற வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லது EXPIRE என்ற வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லது BREATHE YOUR LAST என்ற IDIOM ஐ பயன்படுத்துவோம் அதனோடே கூட இந்த DEPART THIS LIFE என்ற இந்த IDIOM யையும் பயன்படுத்தலாம். எனவே தமிழில் இவ்வுலகிலிருந்து பிரிதல் என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். In a sentence He departed this life yesterday. நேற்று அவர் இவ்வுலகிலிருந்து பிரிந்தார். There will be a prayer in memory of her beloved brother who departed this life l

Know the word PENETRALIA...

படம்
Word of the day is PENETRALIA... Pronunciation / ˌpɛ.nəˈtɹeɪ.li .ə/ Function The word is a noun. Meaning It refers to a secret or hidden place of a building என்று சொல்லலாம் அதாவது ஒரு கட்டிடத்தினுள் இரகசியமாக அல்லது மறைவாக இருக்கும் ஒரு பகுதி என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்தின் உரிமையாளர்கள் அல்லது அந்த இடத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட அறை என்று ஒன்று இருக்கும். அது வீடாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அலுவலகமாக இருந்தாலும் சரி. பொதுவாக அந்த அறைக்குள் அந்த இடத்தின் உரிமையாளர்கள் உள்ளே செல்வார்கள் அல்லது அந்த இடத்தில் வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே உள்ளே செல்வார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்க படமாட்டார்கள். ஏனெனில் அந்த அறையினுள் வீட்டின் மிகவும் முக்கியமான பொருட்களை வைத்திருப்பார்கள் அல்லது ஒரு அலுவலகமாக இருந்தால் அந்த அலுவலகம் சார்ந்த மிகவும் முக்கியமான கோப்புகளை அந்த இடத்தில் வைத்து பராமரிப்பார்கள். இவ்வாறாக ஒரு வீட்டிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ அல