இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Super 5 idioms on EXTREMELY HAPPY...

படம்
Let's learn some idioms today... நண்பர்களே! இந்த பதிவில் EXTREMELY HAPPY அதாவது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருத்தல் என்ற அர்த்தத்தை கொண்ட IDIOMS ஐ பார்ப்போம். முதலாவதாக ON TOP OF THE WORLD என்ற IDIOM அதிக அளவில் பயன்படுத்தப்படும். In a sentence ஒருவர் I am on top of the world என்று சொல்லும் பொழுது அவர் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் என்று சொல்லுகிறார் என்று அர்த்தம். இரண்டாவதாக BE FLOATING ON AIR என்ற IDIOM ஐ சொல்லலாம். In a sentence ஒருவர் She is floating on air because she won the gold medal என்று சொல்லும் பொழுது அவள் தங்கப் பதக்கம் வென்றதால் அவள் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள் என்று சொல்லுகிறார் என்று அர்த்தம். மூன்றாவதாக BE DANCING IN THE STREETS என்ற IDIOM ஐ சொல்லலாம். In a sentence ஒருவர் As he heard the exam results, he was dancing in the streets என்று சொல்லும் பொழுது அவன் தேர்வு முடிவுகளைக் கேட்டதும், அவன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமானான் என்று சொல்லுகிறார் என்று அர்த்தம். நான்காவதாக BE FULL OF THE JOYS OF SPRING என்ற IDIOM ஐ சொல்லலாம். In ...

Know the word GOODNESS...

படம்
Word of the day is GOODNESS... Pronunciation /ˈɡʊd.nəs/ Function The word GOODNESS is a noun. Note GOODNESS என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக It refers to the moral excellence of a person என்று சொல்லலாம் அதாவது ஒரு மனிதனின் ஒழுக்கம் சார்ந்த மேன்மை என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதனுடைய ஒழுக்கம் சார்ந்த விஷயங்களான நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல குணநலன்கள் போன்றவற்றை குறிக்கிற இடத்தில் GOODNESS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் நற்குணம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence It is his father's goodness that saved his life. அவனது தந்தையின் நற்குணமே அவனது உயிரைக் காப்பாற்றியது. Meaning இரண்டாவதாக It refers to the beneficial or nourishing element of food என்று சொல்லலாம் அதாவது உணவின் பயனுள்ள அல்லது ஊட்டமளிக்கும் உறுப்பு என்று அர்த்தம். அதாவது நண்பர்களே ஒவ்வொரு உணவும் வெவ்வேறு வகையான வைட்டமின்களையும் சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இவ்வாறாக இந்த வைட்டமின்கள...

Know the word JEJUNE...

படம்
Word of the day is JEJUNE... Pronunciation /dʒəˈdʒuːn/ Function The word JEJUNE is an adjective. Meaning It means childish, boring and not interesting என்று சொல்லலாம் அதாவது குழந்தைத்தனமான, சலிப்பான மற்றும் சுவாரஸ்யமற்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லாத பொழுது அல்லது பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லாத பொழுது அல்லது ரசிக்கும் அளவுக்கு  இல்லாத பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக ஒரு படமானது பெரிதாக ரசிக்கும் அளவுக்கு இல்லாத பொழுது அந்த படத்தை இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம். அதைப்போலவே ஒரு கதையை வாசிக்கும் பொழுது அந்த கதை பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லாத பொழுது அந்த கதையை இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம். அதைப்போலவே ஒரு மனிதர் பேசும் பொழுது அவரது பேச்சு பெரிதாக சொல்லும் அளவுக்கு அல்லது ரசிக்கும் அளவுக்கு அல்லது அவரது பேச்சில் ஆக்கமோ ஊக்கமோ அல்லது அறிவோ இல்லாத பொழுது அந்த பேச்சை இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம். எனவ...

Know the word PROMULGATE...

படம்
Word of the day is PROMULGATE... Pronunciation /ˈprɑː.məl.ɡeɪt/ Function The word PROMULGATE is a verb. Meaning It means to spread or to announce beliefs or ideas or new laws publicly என்று சொல்லலாம் அதாவது நம்பிக்கைகள் அல்லது கருத்துக்கள் அல்லது புதிய சட்டங்கள் போன்றவற்றை பொதுவில் பரப்புதல் அல்லது அறிவித்தல் என்று அர்த்தம். ஒரு மதமானது அல்லது ஒரு இனமானது அல்லது ஒரு குழுவானது அல்லது ஒரு நிறுவனமானது அதனுடைய கோட்பாடுகளை அல்லது மதிப்பீடுகளை அல்லது சட்ட திட்டங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிற இடத்தில் அல்லது அறிவிக்கிற இடத்தில் அல்லது விளம்பரப்படுத்துகிற இடத்தில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு அரசாங்கமானது புதிதாக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை அல்லது விதிமுறையை அறிவிக்கிற இடத்தில் அல்லது அறிவித்து ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைப்படுத்துகிற இடத்தில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு மனிதன் அவனுடைய எண்ணங்களை அல்லது நம்பிக்கைகளை அல்லது தத்துவம் நிறைந்த கருத்துக்களை எழுதி வெளியிட்டு எல்லோரும் அறியும்படி பரப்புகிற ...

Know the word WITHSTAND...

படம்
Word of the day is WITHSTAND... Pronunciation /wɪðˈstænd/ Function The word WITHSTAND is a verb. Meaning It means remain undamaged or unaffected by என்று சொல்லலாம் அதாவது சேதமடையாமல் அல்லது பாதிக்கப்படாமல் இருத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ தன்னை எதிர்க்கின்ற ஒரு சக்தியை அல்லது தகர்க்க முனைகின்ற ஒரு சக்தியை அந்த சக்தி தீய சக்தியாக கூட இருக்கலாம் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்தும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக நாம் அடிக்கடி உதாரணமாக பயன்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டை கூட சொல்லலாம் அதாவது கல்லானது உளியால் அடிக்கப்படும் பொழுது அந்த அடிகளை எதிர்கொண்டு, அந்த அடிகளை தாங்கி, சேதம் அடையாமல் நிற்கும் பொழுது தான் அந்த கல்லிலிருந்து ஒரு அருமையான சிற்பம் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ தன்னை எதிர்க்கின்ற ஒரு சக்தியை அல்லது தகர்க்க முனைகின்ற ஒரு சக்தியை வெற்றிகரமாக எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்தும் பொழுது இந்த WITHSTAND இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்....

Know the word MALEVOLENT...

படம்
Word of the day is MALEVOLENT... Pronunciation /məˈlev.əl.ənt/ Function The word MALEVOLENT is an adjective. Meaning It means causing or wanting to cause harm or evil என்று சொல்லலாம் அதாவது தீங்கு அல்லது தீமையை ஏற்படுத்துதல் அல்லது ஏற்படுத்த விரும்புதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதனுடைய எண்ணம் முழுமையாக பிறருக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியதாக அல்லது ஏற்படுத்த விரும்புவதாக இருக்கும் பொழுது அந்த மனிதனை இந்த MALEVOLENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம். பொதுவாக ஒரு மனிதனுடைய எண்ணம் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் பொழுது அவனுடைய பார்வை மற்றும் செயல் என எல்லாமே பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கும் ஏனென்றால் மனிதனுடைய அனைத்து செயல்களும் எண்ணத்தில் இருந்து தானே பிறக்கிறது! மேலும் இப்படிப்பட்டவர்கள் பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர்களாக இருப்பதால் இவர்கள் பிறர் படும் துன்பத்தை பார்த்து, கஷ்டத்தை பார்த்து, வேதனையை பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியவர்களாக, திருப்தி அடையக் கூடியவர்களாக இருப்பார்கள். எனவே தமிழில் தீங்கிழைக்க கூடிய என...

Know the word BEFOREHAND...

படம்
Word of the day is BEFOREHAND... Pronunciation /bɪˈfɔːr.hænd/ Function The word BEFOREHAND can be used as adverb and adjective. Meaning It means earlier or in advance or ahead of time என்று சொல்லலாம் அதாவது முன்னதாக அல்லது முன்கூட்டியே அல்லது நேரத்திற்கு முன்பே என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு தகவல் முன்கூட்டியே சொல்லப்படுகிற இடத்தில் அல்லது ஒரு தயாரிப்பு முன்கூட்டியே செய்யப்பட வேண்டிய இடத்தில் இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு விருந்தாளி வீட்டிற்கு வருவதை அவர் வருவதற்கு முன்னரே அதனை சொல்லிவிட்டு வரும் பொழுது அந்த இடத்திலே இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒருவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக அல்லது முன் தயாரிப்பாக அவர் அந்த நாட்டிற்கு செல்வதற்கான விசா பெற்றிருக்க வேண்டும் என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு தகவல் முன்கூட்டியே சொல்லப்படுகிற இடத்தில் அல்லது ஒரு தயாரிப்பு முன்கூட்டியே செய்யப்பட வேண்டிய இடத்தில் இந்த BEFOREHAND என்ற இந்த ...

Know the idiom PULL ONE'S LEG...

படம்
Idiom is PULL ONE'S LEG.. . Function The idiom, PULL ONE'S LEG is a verb. Meaning It means to trick or lie to someone in a playful way என்று சொல்லலாம் அதாவது விளையாட்டாக ஒருவரை ஏமாற்றுவது அல்லது பொய் சொல்வது என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த PULL ONE'S LEG என்ற இந்த IDIOM ஆனது நண்பர்கள் மத்தியில் அல்லது சக ஊழியர்கள் மத்தியில் அல்லது நன்கு தெரிந்தவர்கள் மத்தியில் பயன்படுத்த வேண்டிய ஒரு IDIOM என்று சொல்லலாம். அதாவது நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்வதற்காக அல்லது கிண்டல் செய்வதற்காக அல்லது சிரித்து மகிழ்வதற்காக ஒருவர் மற்றொருவரை விளையாட்டிற்காக ஏமாற்றி மகிழும் இடத்தில் அல்லது ஏதாவது ஒன்று சொல்லும் இடத்தில் பயன்படுத்த வேண்டும். இதனை வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது PULL ONE'S LEG என்ற சொற்றொடரில் ONE'S என்ற வார்த்தைக்கு பதிலாக சரியான POSSESSIVE ADJECTIVE (MY, OUR, YOUR, HIS, HER, ITS & THEIR) ஐ பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் சும்மா வம்புக்கு இழுத்தல், விளையாட்டுக்கு ஏமாற்றுதல், விளையாட்டாக கேலி செய்தல் போன்ற அர்த்தங்களில் இ...

Know the word STIPULATION...

படம்
Word of the day is STIPULATION... Pronunciation /ˌstɪp.jəˈleɪ.ʃən/ Function The word STIPULATION is a noun. Meaning It refers to a rule that must be followed or something that must be done என்று சொல்லலாம் அதாவது பின்பற்ற வேண்டிய அல்லது செய்ய வேண்டிய விதி அல்லது ஏதாவது ஒன்று என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தில் வயது சார்ந்து, தரம் சார்ந்து, எண்ணிக்கை சார்ந்து, படிப்பு சார்ந்து, தேவை சார்ந்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மாணவர்கள் பங்கெடுக்க முடியும் என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு போட்டி தேர்வில் குறிப்பிட்ட வயது உள்ளவர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே இரண்டு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை குறித்து ஒப்பந்தமிடுகையில் அங்கே சில கட்டுப்பாட...

Know the word STATURE...

படம்
Word of the day is STATURE... Pronunciation /ˈstætʃ.ər/ Function The word STATURE is a noun. Note இந்த STATURE என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் Meaning முதலாவதாக It refers to a person's or animal's natural height when standing upright என்று சொல்லலாம் அதாவது நிமிர்ந்து நிற்கும் போது ஒரு மனிதரின் அல்லது ஒரு விலங்கின் இயற்கையான உயரம் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! பொதுவாக நாம் ஒரு மனிதரையோ அல்லது ஒரு விலங்கையோ அடையாளம் காட்டும் பொழுது அவர்கள் இயற்கையாக பெற்றிருக்கும் உடல் உயரத்தின் அளவை அடையாளமாக கூறுவோம். இவ்வாறாக உடல் அளவை அடையாளமாக கூறும் இடத்தில் இந்த STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே இந்த அர்த்தத்தில் STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் உடல் அளவில் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். In a sentence He is a man of tall stature with white hair. அவர் உடல் அளவில் உயரமானவர் மேலும் வெள்ளை முடி கொண்டவர். Meaning இரண்டாவதாக It refers to a respect coming from achievement or development என்று சொல்லலாம் அதாவது சாதனை ...

Know the word BARISTA...

படம்
Word of the day is BARISTA... Pronunciation /bɑːrˈiːs.tə/ Function The word BARISTA is a noun. Meaning It refers to a person who serves customers in a coffee shop என்று சொல்லலாம் அதாவது ஒரு காபி கடையில் வாடிக்கையாளர்களுக்கு காபி  பரிமாறும் நபர் என்று அர்த்தம். பிரிண்ட்ஸ்! இந்த BARISTA அப்படிங்கிறது யாரு அப்படின்னு சொன்னா இந்த காபி ஷாப்ல வெவ்வேறு வகையான காபி போட தெரிஞ்ச அந்த நபரை தான் BARISTA அப்படின்னு ஆங்கிலத்தில சொல்றாங்க. பிரிண்ட்ஸ்! கிட்டத்தட்ட ஒரு 25 வகையான காபி இருக்குதுன்னா பாத்துக்கோங்களேன்! நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு காபி தான். அப்படிதானே...? இந்த BARISTA அப்படிங்கிறவரு கையால ஆத்து ஆத்து அத்தி காபி போடுறவர் கிடையாதுங்க. ESPRESSO MACHINE ஐ பயன்படுத்தி காபி போட தெரிந்தவர். BARISTA அப்படின்னு சொன்னதும் அது ஒரு பெண்ணுக்கான வேலைன்னு  நினைச்சிடாதீங்க. இந்த வேலையா ஆணும் செய்யலாம், பெண்ணும் செய்யலாம் அதனால ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவங்க BARISTA தான் ஒரிஜினலா இந்த BARISTA அப்படிங்கிற இந்த வார்த்தை இத்தாலியில்தான் பயன்படுத்தப்பட்டுச்சு இத்தா...

Know the word BLURT...

படம்
Word of the day is BLURT... Pronunciation /blɝːt/ Function The word BLURT is a verb. Meaning It means to say something suddenly and without thinking என்று சொல்லலாம் அதாவது சிந்தனை செய்யாமல் ஏதாவது ஒன்றை திடீரென்று சொல்லிவிடுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவர் சிறிது கூட சிந்திக்காமல் எதனை பேசக்கூடாது அல்லது எதனை சொல்லக்கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே பேசி விடும் பொழுது அல்லது சொல்லி விடும் பொழுது BLURT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். பொதுவாக ஒருவர் பதட்டத்தில் இருக்கும் பொழுது எதனை சொல்ல கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே சொல்லி விடுவார்கள். அதைப்போலவே  ஒருவர் அதிகப்படியான சந்தோஷத்தில் இருக்கும் பொழுதும்,  உற்சாகத்தில் நிரம்பியவராய், தன்னிலை மறந்தவராய் எதனை சொல்ல கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே சொல்லி விடுவார்கள். அதைப்போலவே ஒருவர் பிறர் முன்னிலையில் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசும் இடத்திலும் இவ்வாறு சிந்தனை செய்யாமல் ஏதாவது ஒன்றை பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறாக ஒருவர் பதட்டத்திலோ அல்லது உற்...

Know the word COMPOSED...

படம்
Word of the day is COMPOSED... Pronunciation /kəmˈpoʊzd/ Function The word COMPOSED is an adjective. Meaning It means calm and in control of emotions என்று சொல்லலாம் அதாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதனானவன் எரிச்சல், கோபம், வெறுப்பு, சந்தோஷம், பயம், பாசம் என எல்லா வகையான உணர்ச்சிகளையும்  தன்னகத்தே கொண்டவன் என்பதுதான் உண்மை. எரிச்சலேப்படாத, கோபமேப்படாத, பயப்படவே செய்யாத, சந்தோஷமேப்படாத, பாசத்தையே காட்டாத ஒரு மனிதனை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். எனவே ஒரு மனிதனை எரிச்சல்படவே மாட்டார் அல்லது கோப்படவே மாட்டார் அல்லது பயப்படவே மாட்டார் என்று சொல்வதை விட அவர் அந்த உணர்ச்சிகளை எப்படிப்பட்ட மிகப்பெரிய பதட்டமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி அல்லது பயம்நிறைந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி அதனை அவர் வெளிக்காட்ட மாட்டார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். இவ்வாறாக ஒரு மனிதனால் எவ்வளவு பெரிய பதட்டமான சூழ்நிலையிலும் பயம்நிறைந்த சூழ்நிலையிலும் கோபம் நிறைந்த சூழ்நிலையிலும் தனது உணர்ச்சியை வெளிக்காட...

Know the word PRECIPITATION...

படம்
Word of the day is PRECIPITATION... Pronunciation /priːˌsɪp.əˈteɪ.ʃən/ Function The word PRECIPITATION is a noun. Note இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம். இந்த மூன்று அர்த்தங்களுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொல்லலாம். Meaning முதலாவதாக It refers to any form of water that falls from the sky towards the ground என்று சொல்லலாம் அதாவது வானிலிருந்து நீரானது எந்த வடிவத்தில் தரையில் விழுந்தாலும் அதனைக் குறிக்கிறது என்று அர்த்தம். வானிலிருந்து நீரானது எந்த வடிவத்தில் தரையில் விழுந்தாலும் அதனை குறிக்கிறது என்று சொல்லும் பொழுது வானிலிருந்து நீரானது எந்தெந்த வடிவங்களில் தரையில் விழுகிறது என்பதை தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும். முதலாவதாக வானிலிருந்து நீரானது RAIN அதாவது மழை வடிவத்தில் தரையில் விழுகிறது.   இரண்டாவதாக வானிலிருந்து நீரானது SNOW வடிவத்தில் அதாவது பனி வடிவத்தில் தரையில் விழுகிறது. மூன்றாவதாக வானிலிருந்து நீரானது SLEET வடிவத்தில் அதாவது மழைத்துளி அளவில் உறைந்த பனிக்கட்டியாக தரையில் விழுகிறது. நான்காவதாக வானிலிருந்து...

know the Idiom BEAT AROUND THE BUSH...

படம்
know the Idiom BEAT AROUND THE BUSH Function The idiom, BEAT AROUND THE BUSH is a verb. Meaning It means to avoid talking about what is important என்று சொல்லலாம் அதாவது முக்கியமானதைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது என்று அர்த்தம். அதாவது ஒருவர் பேசும் பொழுது அவர் சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாக தெளிவாக சொல்லாமல் அதனைத் தவிர பிற கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது பயன்படுத்து வேண்டிய ஒரு idiom என்று சொல்லலாம். BEAT AROUND THE BUSH என்ற இந்த IDIOM ஐ BEAT ABOUT THE BUSH என்றும் பயன்படுத்தலாம். இதற்கு இணையான தமிழ் சொற்றொடரை சொல்ல வேண்டுமென்றால் சுற்றி வளைத்து பேசுதல் அல்லது கதை கதையாக விடுதல் அல்லது கம்பி கட்டுற கதையெல்லாம் விடுதல் போன்றவற்றை சொல்லலாம். இதனுடைய எதிர்பதம் PLAIN SPEAKING என்று சொல்லலாம் அதாவது சொல்ல வந்த கருத்துக்களை நேர்மையாகவும் நேரடியாகவும் சொல்வது என்று அர்த்தம். In a sentence It will be good if you stop beating around the bush. நீ சுற்றி வளைத்து பேசுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். Nobody likes someone who beats about the bush. சுற்றி வளைத்து பேசும் ...

Know the word SPURIOUS...

படம்
Word of the day is SPURIOUS... Pronunciation /ˈspjʊr.i.əs/ Function The word SPURIOUS is an adjective. Meaning It means false or inauthentic என்று சொல்லலாம் அதாவது தவறான அல்லது நம்பகத்தன்மையற்ற என்று அர்த்தம். அதாவது ஒரு விஷயம் பொய்யானதாக அல்லது போலியானதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SPURIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் பொய்யான அல்லது போலியான தகவல்களை சொல்லும் பொழுது அந்த தகவல்களைப் SPURIOUS INFORMATION என்று சொல்லலாம். அதைப் போலவே ஒரு உணவு பொருள் கலப்படம் நிறைந்ததாக, தரம் குறைந்ததாக அதனுடைய அசல் தரத்தை இழந்து நிற்கும் பொழுது அதனை SPURIOUS FOOD ITEMS அல்லது SPURIOUS DRINKS என்று சொல்லலாம். அதைப் போலவே திருட்டுத்தனமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டிருக்கும் போலியான பணத்தை கள்ள நோட்டு என்று சொல்லுவோம் ஆங்கிலத்தில் COUNTERFEIT NOTES அல்லது COUNTERFEIT CURRENCY அல்லது COUNTERFEIT MONEY என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள் அதனை SPURIOUS CURRENCY அல்லது SPURIOUS MONEY என்றும் கூட சொல்லலாம். அதைப் போலவே மருத்துவத்திற்காக காப்பீட...

Know the word PLAUSIBLE...

படம்
Word of the day is PLAUSIBLE... Pronunciation /ˈplɑː.zə.bəl/ Function The word PLAUSIBLE is an adjective. Meaning It means seeming likely to be true, or able to be believed என்று சொல்லலாம் அதாவது உண்மைக்கு ஏதுவாக அல்லது நம்பதகுந்ததாக தோன்றுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் எதையாவது ஒன்றை குறித்து விளக்கம் அளிக்கப்படுகின்ற இடத்தில் அந்த விளக்கத்தை விவரிக்கின்ற இடத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்த ஒரு மாணவனிடம், "ஏன் பள்ளிக்கு வரவில்லை?" என்று விளக்கம் கேட்கிற இடத்தில் அந்த மாணவன் சொல்கிற விளக்கமானது ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நம்பதகுந்த வகையில் இருக்கும் பொழுது இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு பொருளை விற்கின்ற வியாபாரி அந்த பொருளை விற்பதற்காக அந்த பொருளை பற்றிய விஷயங்களை நம்பதகுந்த வகையில், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் எடுத்துக் கூறி அந்த பொருளை விற்கின்ற இடத்தில் இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். என...

Know the word MUSINGS...

படம்
Word of the day is MUSINGS... Pronunciation /ˈmjuː.zɪŋz/ Function The word MUSINGS is a noun. Meaning It refers to thoughts or comments on something that one has been thinking about carefully and for a long time என்று சொல்லலாம் அதாவது ஒருவர் கவனமாகவும் நீண்ட காலமாகவும் யோசித்துக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றிய எண்ணங்கள் அல்லது கருத்துகள் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் நமது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அதைப்போலவே பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறிய கருத்துக்கள் நமது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அதைப்போலவே நமது வாழ்க்கையில் நமக்கு நடந்த ஒரு நிகழ்வு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறாக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்களை குறித்து மிகவும் ஆழமாகவும் நீண்ட காலமாகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நமது மனதில் எழுகின்ற எண்ணங்களை இந்த MUSINGS என்ற இந்த வார்த்தையானது குறிக்கிறது. MUSINGS என்ற இந்த வார்த்தையை NOUN ஆக பயன்படுத்தும் போது பெரும்பாலும் பன்மையாக அதாவது MUSINGS என்றே பயன்படுத்த ...

Know the word BRAG...

படம்
Word of the day is BRAG... Pronunciation /bræɡ/ Function The word BRAG can be used as verb, noun and adjective. Note BRAG என்ற இந்த வார்த்தையை VERB ஆகவும் NOUN ஆகவும் பயன்படுத்தும் பொழுது ஒரு அர்த்தத்தை தருகிறது. அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது முற்றிலுமாக மாறுபட்ட வேறொரு அர்த்தத்தை தருகிறது. Meaning முதலாவதாக VERB ஆகவும் NOUN ஆகவும் பயன்படுத்தும் பொழுது It means to speak too proudly about what one has done or what one owns என்று சொல்லலாம் அதாவது ஒருவர் செய்ததை பற்றியோ அல்லது அவருக்குச் சொந்தமானதைப் பற்றியோ மிகவும் பெருமையாகப் பேசுவது என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவர் புதிதாக வாங்கி இருக்கும் அவரது மொபைலை பற்றியோ அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடையை பற்றியோ அளவுக்கு அதிகமாக பெருமையாக பேசும் பொழுது சிறிது நேரம் கூட பேசாமல் இருக்க முடியவில்லை என்றால் அவர் செய்யும் அந்த செயலை BRAG என்ற இந்த வார்த்தையை கொண்டு விளக்கலாம். அதைப்போலவே ஒருவர் செய்த செயலை அல்லது ஒரு சாதனையை போகும் இடமெல்லாம் சொல்லி திரியும் பொழுது அந்த செயலை BRAG என்ற இந்த வார்த்தையை கொண்டு விளக்...

Know the word PLEASED...

படம்
Word of the day is PLEASED... Pronunciation /pliːzd/ Function The word PLEASED is an adjective. Meaning It means happy or satisfied என்று சொல்லலாம் அதாவது மகிழ்ச்சி அல்லது திருப்தி என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த PLEASED என்ற இந்த வார்த்தையானது ஒரு நிகழ்ச்சியோ அல்லது ஒரு சூழ்நிலையோ மனதிற்கு இன்பத்தை தரும் பொழுது அதனால் ஏற்படும் மன நிறைவை அல்லது மகிழ்ச்சியை குறிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நண்பர்களே! இப்படிப்பட்ட மகிழ்ச்சியோ அல்லது மன நிறைவோ ஒருவரது எதிர்பார்ப்பு நிறைவேறுகிற இடத்தில் அல்லது ஒருவரது சுயமதிப்பு உயருகிற இடத்தில் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் PLEASED என்ற இந்த வார்த்தையை ஒருவரை வாழ்த்துவதற்காகவும் பயன்படுத்தலாம் அதாவது ஒரு நபரை முதல் முறையாக சந்திக்கும் பொழுது I AM PLEASED TO MEET YOU என்று சொல்லலாம் அதாவது நான் உங்களை சந்தித்ததில் மன மகிழ்ச்சி அடைகிறேன் என்று அர்த்தம் இவ்வாறாக இந்த PLEASED என்ற இந்த வார்த்தையை ஒருவரை வாழ்த்துவதற்காகவும் பயன்படுத்தலாம். எனவே தமிழில் இன்பம் அல்லது மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் அல்லது மன ...

Know the word SAGACIOUS...

படம்
Word of the day is SAGACIOUS... Pronunciation /səˈɡeɪ.ʃəs/ Function The word SAGACIOUS is an adjective. Meaning It means having or showing understanding and the ability to make good judgments என்று சொல்லலாம் அதாவது புரிதல் மற்றும் நல்ல தீர்ப்புகளை வழங்குதல் போன்ற திறனைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே இந்த SAGACIOUS என்ற இந்த வார்த்தையானது அதிகப்படியான மதிநுட்பம் உடைய ஒரு நபரை விவரிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு நிறுவனமோ ஒரு திட்டத்தை அறிவிக்கும் பொழுது அந்தத் திட்டத்தை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒரு சாதாரண மனிதனுக்கு அந்தத் திட்டமானது மிகவும் சிறந்த ஒன்றாக தெரியலாம் ஆனால் அதே நேரத்தில் இந்த SAGACIOUS திறனை கொண்டவர்கள் அந்தத் திட்டத்தினுடைய அடிப்படையை வெகு விரைவாக ஆராய்ந்து அதனுடைய நன்மை தீமையை உடனடியாக எடுத்து சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் ஒரு நாட்டின் தலைவர்கள் தங்களது அருகாமையில் வைத்து கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு  அருக...

Know the word HOSPITALITY...

படம்
Word of the day is HOSPITALITY... Pronunciation /ˌhɑː.spɪˈtæl.ə.t̬i/ Function The word HOSPITALITY is a noun. Meaning It refers to the act of being friendly and welcoming to the guests and visitors என்று சொல்லலாம் அதாவது விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் நட்புடன் வரவேற்கும் செயல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நமது வீட்டிற்கு நமக்கு முன்பின் அறிமுகமானவர்களோ அல்லது அறிமுகமாகாதவர்களோ விருந்தினர்களாக வரும்பொழுது அவர்களுக்கு இருப்பதற்கு இடம் கொடுத்து, உண்பதற்கு உணவு கொடுத்து, குடிப்பதற்கு தேநீர் கொடுத்து, அவர்கள், அவர்களது வீட்டில் இருக்கும் பொழுது எவ்வாறு சுதந்திரமாக இருப்பார்களோ அதைப் போலவே சுதந்திரமாக,  அவர்கள் வீடு போலவே நமது வீட்டையும் அனுபவிப்பதற்கு அனுமதி கொடுத்து அவர்களை உபசரிக்கும் ஒரு செயலை இந்த HOSPITALITY என்ற இந்த வார்த்தை குறிக்கிறது. வந்தாரை வரவேற்பது தமிழரின் பண்பாடு என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு அதாவது வருபவர் எதிரியாக இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பது என்பது தமிழரின் பண்பாடு என்று சொல்வார்கள். பொதுவாகவே வெளிநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது ...

Know the word DEBAUCHERY...

படம்
Word of the day is DEBAUCHERY... Pronunciation /dɪˈbɑː.tʃɚ.i/ Function The word DEBAUCHERY is a noun. Meaning It refers to the extreme indulgence in bodily pleasures என்று சொல்லலாம் அதாவது உடல் சார்ந்த இன்பங்களில் அதீத ஈடுபாடு செலுத்துதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! மனிதனுடைய ஆசையை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று உலகம் சார்ந்த ஆசை மற்றொன்று இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட ஆசை அதனை தான் ஆன்மீகம் என்று சொல்கிறோம். சாதாரணமாக ஒரு மனிதன் இந்த இரண்டு ஆசைகளில் எந்த ஆசையை  கொண்டிருக்க வேண்டும் என்று கேள்வி எழும்பொழுது அதற்கு சரியான பதிலாக சொல்லப்படுவது ஒரு மனிதன் சாதாரணமாக இந்த இரண்டு ஆசையையும் சரிவிகிதத்தில்  கொண்டிருக்க வேண்டும் என்றுதான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை முற்றிலுமாக மறந்து உலக ஆசையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தும் பொழுது அவன் குடி வெறி, சூதாட்டம், போதை, காம வெறி போன்ற மித மிஞ்சின உடல் ஆசைகளை உள்ளடக்கிய ஒரு ஒழுக்கக்கேடான ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறான். மேலும் நண்பர்களே! இந்த உடல் ஆசைகள் ஒரு பொழுதும் நிலையான பேரின்பத்தை தரு...

Know the word RETRENCHMENT...

படம்
Word of the day is RETRENCHMENT... Pronunciation /rɪˈtrentʃ.mənt/ Function The word RETRENCHMENT is a noun. Meaning It refers to the reduction of expenditures in order to become financially stable என்று சொல்லலாம் அதாவது ஒரு நிலையான நிதி நிலையை ஏற்படுத்துவதற்காக செலவினங்களைக் குறைத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு நிறுவனமோ கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது அந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக செலவினங்களை குறைக்கிற இடத்தில் இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். சமீபத்தில் உலக நாடுகள் முழுவதுமே மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது ஆதலால் சில நாடுகள் வரியை உயர்த்திக் கொண்டே இருக்கிறது மேலும் சில நாடுகள் செலவினங்களை குறைத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாட்களை குறைத்துக் கொண்டே வருகிறார்கள். இவ்வாறாக ஒரு நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாட்களை குறைக்கிற இடத்திலும் இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்ப...

Know the word CONFIDANT(E)...

படம்
Word of the day is CONFIDANT(E)... Pronunciation /ˈkɑːn.fə.dɑːnt/ Function The word CONFIDANT is a noun. Meaning It refers to a person you trust and share your feelings and secrets with என்று சொல்லலாம் அதாவது நீங்க நம்பி உங்களது உணர்வுகளையும் ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நபர்‌ என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நம்முடைய வாழ்க்கையில் நமக்கென்று சில நண்பர்கள் இருப்பார்கள் அந்த நண்பர்கள் மத்தியிலும் நமது இன்பங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும், வெற்றிகளையும் தோல்விகளையும், யாருக்கும் தெரியாத ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வதற்கென்று கண்டிப்பாக ஒரு நபர் இருப்பார். அந்த நபர் மற்ற நண்பர்களை விட மிகவும் நெருக்கமாக இருப்பார். அந்த ஒரு நண்பரைத் தான் இந்த CONFIDANT என்ற இந்த வார்த்தையானது குறிப்பிடுகிறது. நாம் ஏற்கனவே INTIMATE என்று ஒரு வார்த்தை படித்தோம் அந்த வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை தான் இந்த CONFIDANT என்ற இந்த வார்த்தை. மேலும் நண்பர்களே! இந்த CONFIDANT என்ற இந்த வார்த்தையை ஆண் நண்பர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் பெண் நண்பராக இரு...

Know the word CONFIDENT...

படம்
Word of the day is CONFIDENT... Pronunciation /ˈkɑːn.fə.dənt/ Function The word CONFIDENT is an adjective. Meaning It means being very sure of something என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றின் மீது உறுதியாக இருத்தல் என்று அர்த்தம். ஏதாவது ஒன்றின் மீது உறுதியாக இருத்தல் என்று சொல்லும் பொழுது அந்த ஏதாவது ஒன்று என்பது ஒருவரது திறமையாக இருக்கலாம் அல்லது ஒருவரது ஏதாவதொரு திட்டமாக இருக்கலாம் அல்லது ஒருவரோடு பணி புரியும் மற்றொரு நபராக இருக்கலாம் அல்லது ஒருவரின் எதிர்காலமாக கூட இருக்கலாம். இவ்வாறாக ஒருவர் தன்மீதோ அல்லது தனது திறமை மீதோ அல்லது பிறர் மீதோ அல்லது பிறரின் திறமை மீதோ அல்லது தான் செய்கின்ற ஒரு செயலின் மீதோ நேர்மறை எண்ணம் கொண்டவராக உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருக்கும் பொழுது இந்த CONFIDENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். நண்பர்களே! நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் குறைந்தபட்சமாக நம்மீதாவது அல்லது நாம் செய்கின்ற செயலின் மீதாவது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் வருகின்ற சவால்களை எதிர்கொள்ளவும் முடியும் சமாளி...

Know the word DENOUNCE

படம்
Word of the day is DENOUNCE... Pronunciation /dɪˈnaʊns/ Function The word DENOUNCE is a verb. Meaning It means to criticize something or someone strongly and publicly என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றையோ அல்லது யாராவதொருவரையோ கடுமையாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த DENOUNCE என்ற இந்த வார்த்தையை ஒருவர் மற்றொருவரை ஏதாவது ஒன்றை குறித்தோ அல்லது யாராவது ஒருவரை குறித்தோ கடுமையாகவும் பகிரங்கமாகவும் குறை கூறும் பொழுது அல்லது குற்றம் சாட்டும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை. எடுத்துக்காட்டாக ஆளுங்கட்சியானது எதையாவது ஒன்றை குறித்து புதிதாக ஒரு விதிமுறையை அறிவிக்கும் பொழுது அந்த விதிமுறையானது ஏற்றுக் கொள்ளாத வகையில் இருக்கும் பொழுது அதனை எதிர்த்து எதிர்க்கட்சியோ அல்லது பிற கட்சிகளோ அல்லது ஒரு தனி மனிதனோ பொதுவெளியில் பகிரங்கமாகவும் கடுமையாகவும் விமர்சிக்கிற இடத்தில் அல்லது குற்றம் சுமத்துகிற இடத்தில் DENOUNCE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் கண்டனம் தெரிவித்தல், குற்றம் சாட்டுதல் அல்லது கடுமையாக விமர்சித்தல் போன்ற அர...

Know the word INTIMATE...

படம்
Word of the day is INTIMATE... Pronunciation /ˈɪn.t̬ə.meɪt/ Function The word INTIMATE can be used as noun, adjective and verb. இந்த வார்த்தையானது noun மற்றும் adjective ஆக செயல்படும் பொழுது கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் verb ஆக செயல்படும் பொழுது இதனுடைய அர்த்தமானது முற்றிலும் மாறுபடுகிறது. Meaning (noun) முதலாவதாக INTIMATE என்ற இந்த வார்த்தையானது NOUN ஆக செயல்படும் பொழுது it refers to a very close friend என்று சொல்லலாம் அதாவது மிக நெருங்கிய நண்பர் என்று அர்த்தம். மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லும் பொழுது அந்த நண்பர் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். எனவே தமிழில் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது மிகவும் நெருக்கமானவர் என்ற அர்த்தத்தில் இந்த INTIMATE என்ற வார்த்தையை NOUN ஆக பயன்படுத்தலாம். In a sentence Everything about him is known to his intimates. அவரைப் பற்றிய அனைத்தும் அவரது மிகவும் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். Meaning (adjective) இரண்டாவதாக INTIMATE என்ற இந்த வார்த்தையானது ADJECTIVE ஆக செயல்படும் பொழுது it means pr...

Know the word CHAUFFEUR...

படம்
Word of the day is CHAUFFEUR... Pronunciation /ˈʃəʊ.fər/ Function The word CHAUFFEUR can be used as noun and verb. Meaning It refers to someone whose job is to drive a car for a rich or important person என்று சொல்லலாம் அதாவது ஒரு பணக்காரர் அல்லது முக்கியமான நபருக்கு கார் ஓட்டும் வேலையை செய்பவர் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையானது சாதாரணமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் DRIVER என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அந்த டிரைவரானவர் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு பணக்காரருக்கோ அல்லது ஒரு முக்கியமான நபருக்கோ சம்பளத்திற்காக வண்டி ஓட்டும்போது அந்த டிரைவரை இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். இப்படிப்பட்ட ஓட்டுநர்கள் அவர்களுக்கென்று தனியாக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சீருடை அணிந்து பணியில் இருப்பார்கள். எனவே தமிழில் ஓட்டுநர் என்ற அர்த்தத்தில் இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence He is a chauffeur and he is paid well. அவர் ஒரு ஓட்டுநர் மேலும் அவருக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுக...