Know the word LANGUISH...
Word of the day is LANGUISH... Function The word LANGUISH is a verb. Meaning இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது முதலாவதாக it means to grow weak or feeble அதாவது தொடர்ந்து பலவீனமாகுதல் அல்லது வலுக்குறைதல் என்று அர்த்தம். அதாவது ஒரு உயிரினம் (மனிதனாக இருக்கலாம் அல்லது விலங்காக இருக்கலாம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது தாவரமாக இருக்கலாம்) உண்ண உணவின்றியோ அல்லது சத்தான உணவில்லாமையினாலோ வலிமை இழந்து சக்தி இழந்து பலவீனமாக இருக்கும் பொழுது இந்த LANGUISH என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம். மேலும் ஒரு தொழில் வளர்ச்சி குன்றி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் பொழுதும் இந்த LANGUISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இரண்டாவதாக it means to exist in an unpleasant or unwanted situation, often for a long time அதாவது விருப்பமில்லாத அல்லது சந்தோஷம் இல்லாத ஒரு சூழ்நிலையில் நீண்டகாலமாக வாழ்தல் என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் தான் விருப்பமில்லாத அல்லது சந்தோசமில்லாத ஒரு இடத்தில் வாழ தள்ளப்படும் போதும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேற்கூறிய இரண்டு அர்...