இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word BACKBITE...

படம்
Word of the day is BACKBITE... Pronunciation /ˈbæk.baɪt/ Function The word BACKBITE is a verb. Meaning to say unpleasant and unkind things about someone who is not there அதாவது இல்லாத ஒருவரைப் பற்றி விரும்பத்தகாத மற்றும் இரக்கமற்ற விஷயங்களைச் சொல்வது என்று அர்த்தம். BACKBITE என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான வார்த்தை என்று சொல்லலாம் ஆனால் அதே நேரத்தில் மிகவும் கேவலமான அல்லது ஒரு இழிவான செயல் என்று சொல்லலாம். மனிதன் தவறு செய்வது என்பது ஒரு இயற்கையான விஷயமாகும். 100% தவறு செய்யாத ஒரு நபர் இந்த உலகில் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். ஒருவர் தவறு செய்யும் பொழுது அவர் செய்த தவற்றை சுட்டிக்காட்டி, அந்த தவறான செயலை திருத்துவது என்பது ஒரு அருமையான செயல் என்றே சொல்லலாம். ஒருவர் செய்த தவற்றை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முதலில் நாம் ஒழுங்காக இருக்க வேண்டும் பின்பு அதனை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு நமக்கு துணிச்சல் இருக்க வேண்டும் இல்லை என்றாலும் அதனை செய்ய முடியாது. ஆங்கிலத்தைப் போலவே இந்த BACKBITE என்ற இந்த வார்த்தைக்கு தமிழில் புறங்கூறிதிரிதல் அல்லது புறங்கூறுதல் அல்லது மு...

Know the word IMPLORE...

படம்
Word of the day is IMPLORE... Pronunciation /ɪmˈplɔːr/ Function The word IMPLORE is a verb. Meaning to call upon in supplication அதாவது வேண்டிக் கேட்டுக் கொள்ளுதல் என்று அர்த்தம். அதாவது கடவுளிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நேர்மையாகவும் உண்மையாகவும் எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வேண்டுதல் செய்யும் பொழுது IMPLORE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போன்றே ஒரு மனிதனிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நேர்மையாகவும் உண்மையாகவும் எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் எதையாவது ஒன்றை கேட்கும் பொழுதும் IMPLORE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பள்ளிக்கு போக விருப்பம் இல்லாமல் இருக்கும் சின்ன குழந்தையை பள்ளிக்குப் போக கட்டாயப்படுத்தும் போது அந்த சின்ன குழந்தை தயவுசெய்து அனுப்பாதீங்க என்று அழுது கெஞ்சி நிற்கும் அந்த குழந்தையின் அந்த செயலுக்கு இந்த IMPLORE என்ற இந்த வார்த்தையை ஒப்பிடலாம். அதே போன்று வாங்கின கடனானது இன்று செலுத்தப்படவில்லை என்றால் வீடானது ஜப்தி செய்யப்படும் என்று வரும்பொழுது பணத்திற்காக உங்...

Know the word CONVICTION...

படம்
Word of the day is CONVICTION... Pronunciation /kənˈvɪk.ʃən/ Function The word CONVICTION is a noun. Meaning CONVICTION என்ற இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக it means the fact of officially finding someone guilty என்று சொல்லலாம் அதாவது அதிகாரப்பூர்வமாக ஒருவரை குற்றவாளியென கண்டறிதல் என்று அர்த்தம். அதாவது ஒருவரை தகுந்த ஆதாரத்துடன் ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்காக குற்றவாளியென அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் பொழுது CONVICTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில் CONVICTION என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படும்போது தமிழில் குற்றவாளியென தீர்ப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். இரண்டாவதாக it means an unshakable belief in something without need for proof or evidence என்று சொல்லலாம் அதாவது எந்தவித ஆதாரமும் இல்லாமல், சாட்சியும் இல்லாமல் ஒரு விஷயத்தின் மீது ஒருவர் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை என்று அர்த்தம். அதாவது நமது அனுபவத்தின் மூலமாகவோ அல்லது நமது எண்ணத்தின் மூலமாகவோ நமக்கு சில நபர்கள் மீதோ அல்லது ந...

Know the word INSATIABLE...

படம்
Word of the day is INSATIABLE... Pronunciation /ɪnˈseɪ.ʃə.bəl/ Function The word INSATIABLE is an adjective. Meaning a desire or need that is too great to be satisfied அதாவது ஒரு ஆசை அல்லது ஒரு தேவை திருப்தி அடைய முடியாத அளவுக்கு இருத்தல் என்று அர்த்தம். INSATIABLE என்ற இந்த வார்த்தையானது ஒரு நெகட்டிவான அர்த்தம் கொண்ட ஒரு வார்த்தை போல தெரியலாம் ஆனால் இந்த INSATIABLE என்ற இந்த வார்த்தையை பாசிடிவாகவும் பயன்படுத்தலாம் நெகட்டிவாகவும் பயன்படுத்தலாம். அதாவது ஆசைகளை இரண்டு வகைப்படுத்தலாம் அவை ஆன்மீகம் சார்ந்த ஆசைகள் மற்றும் உலகம் சார்ந்த ஆசைகள். எனவே INSATIABLE என்ற இந்த வார்த்தையை கொண்டு ஆன்மீகம் சார்ந்த ஆசைகளை பற்றி பேசும் பொழுது பாசிட்டிவாக பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் உலகம் சார்ந்த ஆசைகள் பற்றி பேசும் பொழுது நெகட்டிவாகவும் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக நாடி நரம்பு எல்லாம் பணம் பணம் என்று நிறைந்திருக்கும் ஒருவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதிலே திருப்தி இருக்காது என்று சொல்லலாம். அதுபோல எண்ணம் ஏக்கம் எல்லாமே பதவி பதவி என்று இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு பதவி உயர்வு க...

know the word DISCLOSE...

படம்
Word of the day is DISCLOSE... Pronunciation /dɪˈskloʊz/ Function The word DISCLOSE is a verb.  Meaning to give information to the public that was not previously known அதாவது கடந்த காலத்தில் பொதுமக்களுக்கு தெரியாத ஒரு தகவலை தெரியப்படுத்துதல் என்று அர்த்தம். பொதுவாக ஒரு படத்தினுடைய கதையானது அந்த படம் வெளிவரும் வரை யாருக்கும் தெரியாமல் கவனமாக இரகசியமாக வைத்திருக்கப்படும். தமிழ்நாட்டில் கருக்கலைப்பு அதிகமாக இருப்பதால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்ற தகவலானது இரகசியமாக பாதுகாக்கப்படும்.  அதேபோன்றே ஒரு நிர்வாகமானது வரி கட்டுவதற்கு பயந்து அதனுடைய லாபத்தை ரகசியமாகவே வைத்திருக்கும். இவ்வாறாக ரகசியமாக வைத்திருக்கப்பட்ட ஒரு தகவலானது எல்லோருக்கும் தெரியும்படி வெட்ட வெளிச்சமாக சொல்லப்படும் பொழுது இந்த DISCLOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தமிழில் வெளிப்படுத்துதல் அல்லது வெளியிடுதல் என்ற அர்த்தத்தில் இந்த DISCLOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence When WhatsApp disclosed its terms and conditions, many people uninstalled the app. வாட்ஸ்அப்பா...

Know the word DOMICILE...

படம்
Word of the day is DOMICILE... Pronunciation /ˈdɑː.mə.saɪl/ Function The word DOMICILE can be used as verb and noun.  Meaning the place where a person lives அதாவது ஒரு நபர் வசிக்கும் இடம் என்று அர்த்தம். அதாவது நீங்க பலமாடி அடுக்கு கட்டடத்தில் வாழ்ந்தாலும் சரி அல்லது ஒரு பங்களாவில் வாழ்ந்தாலும் சரி அல்லது ஒரு அப்பார்ட்மெண்ட்ல வாழ்ந்தாலும் சரி அல்லது ஒரு சின்ன கூரை வீட்டில் வாழ்ந்தாலும் சரி அல்லது தெருவோரத்தில் மக்கள் நடைபாதையில் ஒரு இடத்தில் வாழ்ந்தாலும் சரி அதுதான் நீங்க வசிக்கும் இடம் அதுதான்  உங்களுடைய வாழ்விடம் அதுதான் ஆங்கிலத்தில் DOMICILE என்ற இந்த வார்த்தை பயன்படுத்தி அழைக்கப்படுகிறது. மேலும் DOMICILE என்ற இந்த வார்த்தையானது சட்டப்படி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரது வாழ்விடத்தை குறிக்கிறது என்றும் சொல்லலாம்.  தமிழில் வாழ்விடம் அல்லது உறைவிடம் அல்லது இருப்பிடம் என்ற அர்த்தத்தில் DOMICILE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence At present he is domiciled in Japan. தற்போது அவர் ஜப்பானை வாழ்விடமாக கொண்டுள்ளார். Though he does not hav...

Know the word HAVEN...

படம்
Word of the day is HAVEN... Pronunciation /ˈheɪ.vən/ Function The word HAVEN is a noun. Meaning இந்த HAVEN என்ற இந்த வார்த்தையானது இரண்டு இடங்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக it refers to a safe or peaceful place என்று சொல்லலாம் அதாவது அமைதியான அல்லது பாதுகாப்பான ஒரு இடம் என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதனுக்கு அமைதி தரும் ஒரு இடத்தை அல்லது பாதுகாப்பு தரும் ஒரு இடத்தை அல்லது அடைக்கலம் தரும் ஒரு இடத்தை குறிப்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அவ்வாறாக பயன்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை புகலிடம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.  இரண்டாவதாக it refers to a small port என்று சொல்லலாம் அதாவது சிறிய துறைமுகம் என்று அர்த்தம். அதாவது HAVEN என்ற இந்த வார்த்தையானது கப்பல்களுக்கு அல்லது விசை படகுகளுக்கு பாதுகாப்பு தரும் ஒரு இடமாக அல்லது அடைக்கலம் தரும் ஒரு இடமாகவும் பயன்படுத்தலாம்.  இவ்வாறாக பயன்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை சிறிய துறைமுகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். In a sentence My room is always a haven for me. எனது அறை எனக்கு எ...

Know the word PRODIGY...

படம்
Word of the day is PRODIGY... Pronunciation /ˈprɑː.də.dʒi/ Function The word PRODIGY is a noun. Meaning a person, especially a young one, endowed with exceptional qualities or abilities அதாவது விதிவிலக்கான குணங்களை அல்லது திறமைகளைக் கொண்ட ஒரு இளைஞன் என்று அர்த்தம். அதாவது இந்த விவேகம், ஞானம், அறிவு, மதிநுட்பம் போன்ற விஷயங்கள் எல்லாம் வயதாக வயதாக ஒருவருக்கு அவர் படித்த படிப்பின் மூலமாகவோ அல்லது அவருக்கு கிடைத்த பல நல்ல அனுபவங்கள் மூலமாகவோ வருவது என்பது நாம் அறிந்ததே.  அதே நேரத்தில் சிலர் இந்த விவேகம், ஞானம், அறிவு, மதிநுட்பம்  போன்றவற்றை சிறுவயதிலேயே பெற்றிருப்பதையும் நம்மால் காண முடியும் இப்படிப்பட்ட நபர்களை தான் இந்த PRODIGY என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். தமிழில் அசாதாரண திறமை உள்ளவர் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence ஒருவர் இசையில் இளம் வயதிலேயே மிகப்பெரிய அசாதாரண திறமைகளை பெற்றிருக்கும் பொழுது அவரை He is a musical prodigy என்று சொல்லலாம். அதேபோன்று ஒருவர் கணிதத்தில் மிகப்பெரிய அசாதாரண திறமைகளை பெற்றிருக்கும் பொழுது அவரை She...

Know the word PLUMMET...

படம்
Word of the day is PLUMMET... Pronunciation /ˈplʌm.ɪt/ Function The word PLUMMET can be used as verb and noun. Meaning to drop swiftly and directly அதாவது விரைவாகவும் நேரடியாகவும் விழுதல் என்று அர்த்தம். அதாவது PLUMMET என்ற இந்த வார்த்தையை பல நிலைகளில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம், தங்கத்தின் விலையானது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம், காய்கறிகளின் விலையானது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம் மேலும் பள்ளிக்கு வர வேண்டிய மாணவர்களின் வருகை மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு விஷயமானது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் பொழுது PLUMMET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் அந்த சரிவானது வேகமாகவும் விரைவாகவும் நடக்கும் பொழுது பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக மேலே தூக்கி வீசப்பட்ட ஒரு கல்லானது அதனுடைய ZERO நிலையை அடைந்து மீண்டும் கீழே நோக்கி வரும்பொழுது எவ்வளவு வேகமாக வருமோ அவ்வளவு வேகமாக சரிவை சந்தி...

Know the word IMPLY...

படம்
Word of the day is IMPLY... Pronunciation /ɪmˈplaɪ/ Function The word IMPLY is a verb. Meaning to communicate an idea or feeling without saying it directly அதாவது ஒரு யோசனையை அல்லது ஒரு உணர்வை நேரடியாகச் சொல்லாமல் இருப்பது என்று அர்த்தம். அதாவது இந்த IMPLY என்ற இந்த வார்த்தையானது ஒருவரிடம் ஒரு விஷயத்தை நேரடியாக வார்த்தையின்  மூலமாக சொல்லாமல் செயலின் மூலமாக சொல்லும்பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.  எடுத்துக்காட்டாக ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு நல்லதொரு சாப்பாடு சமைத்துக் கொடுக்கணும் என்று ஆசையாக அடுப்பரைக்கு சென்ற மனைவியிடம் இன்று சமைக்க வேண்டாம் வெளியில் போய் சாப்பிடுவோம் என்று கணவன் சொல்லும் பொழுது அதனை மனைவி பாசிட்டிவாகவும் எடுக்கலாம், நெகட்டிவாகவும் எடுக்கலாம். அதாவது மனைவிக்கு சரியாக சமைக்க தெரியாது என்று வெளியே சாப்பிட போவோம் என்று சொல்கிறாரோ என்று நெகடிவ்வாக எடுக்கலாம் அல்லது மனைவியுடன் சந்தோஷமாக வெளியே போய் வருவோம் என்று சொல்கிறார் என்று பாசிட்டிவாகவும் எடுக்கலாம்.  இவ்வாறாக ஒரு விஷயமானது நேரடியாக வார்த்தையின் மூலம...

Know the word INCRIMINATE...

படம்
Word of the day is INCRIMINATE... Pronunciation /ɪnˈkrɪm.ə.neɪt/ Function The word INCRIMINATE is a verb. Meaning to accuse or bring criminal charges against அதாவது குற்றம் சாட்டுதல் அல்லது குற்றச்சாட்டுகளை சுமத்துதல் என்று அர்த்தம். INCRIMINATE என்ற இந்த வார்த்தையானது தமிழில் குற்றம் கூறுதல் அல்லது குற்றம் சுமத்துதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படவேண்டும். ஆனால் அதே நேரத்தில் அந்த குற்றச்சாட்டுக்கு ஒரு வலுவான சாட்சி இருக்கும்பொழுது மட்டுமே பயன்படுத்தபட வேண்டிய ஒரு வார்த்தை ஆகும். சாதாரணமாக குற்றம் கூறுதல் அல்லது குற்றம் சாட்டுதல் என்ற வார்த்தைக்கு ACCUSE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தலாம். ஆனால் அந்த ACCUSE என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுது வலுவான சாட்சி இருக்க வேண்டிய தேவை என்று ஒன்று இல்லை ஆனால் இந்த INCRIMINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும்போது வலுவான சாட்சி ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். In a sentence He did not open his mouth because he thought that he would incriminate himself. அவர் தன் மீது தானே குற்றம் சுமத்த நேரிடும் என ...

Know the word CONDUCIVE...

படம்
Word of the day is CONDUCIVE... Pronunciation /kənˈduː.sɪv/ Function The word CONDUCIVE is an adjective. Meaning providing the right conditions for something good to happen or exist அதாவது ஏதாவது நல்லது நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருத்தல் அல்லது சூழ்நிலையை ஏற்படுத்துதல் என்று அர்த்தம். அதாவது CONDUCIVE என்ற இந்த வார்த்தையானது ஒரு காலநிலையை அடிப்படையாகக் கொண்டு அல்லது ஒரு சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பேசப்படுகின்ற ஒரு வார்த்தையாகும். அதாவது ஒரு சூழ்நிலை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது அல்லது ஏற்றதாக இல்லாமல் இருக்கிறது என்ற அர்த்தங்களில் பயன்படுத்தபட வேண்டும். மேலும் அந்த சூழ்நிலை எதற்கு ஏற்றதாக இருக்கிறது என்பதையும் CONDUCIVE என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து to அல்லது for போன்ற prepositions ஐ பயன்படுத்தி விளக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வாக்கியமானது முழுமையடையும். CONDUCIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும்பொழுது தமிழில் ஏற்றதாக அல்லது உகந்ததாக  என்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம். In a sentence Dhoni's century made the situation conducive to wi...

Know the word WARY...

படம்
Word of the day is WARY... Pronunciation /ˈweə.ri/ Function The word WARY is an adjective. Meaning not completely trusting or certain about something or someone அதாவது எதையாவதொன்றை அல்லது யாரையாவதொருவரை முழுமையாக நம்பாத என்று அர்த்தம். அதாவது ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரை கவனத்துடன் கையாளுதல் என்ற அர்த்தத்தில் WARY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அதாவது புதுசா ஒரு இடத்துக்கு போனோம் அப்படின்னா அந்த இடத்தில இருக்கிற குளம் குட்டைகளில் தனியாக குளிக்கப் போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா அந்த குளத்துல அல்லது அந்த குட்டைல இருக்கிற பாறையோ அல்லது பள்ளமோ புதுசா போகிற நமக்குத் தெரியாது என்பதற்காகத்தான். அதுபோல முன்பின் தெரியாத ஒரு நபரிடம் பார்த்து கவனமாக பழக வேண்டும் என்று சொல்லுவாங்க ஏனென்றால் எந்த புற்றுல எந்த பாம்பு இருக்குது என்று நமக்கு தெரியாது என்பதற்காகத்தான். இவ்வாறாக எதையாவதொன்றை அல்லது யாரையாவதொருவரை முழுமையாக நம்பாமல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் அணுகுகின்ற ஒரு இடத்தில் இந்த WARY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தமிழில் எச்சரிக்கையாக என்ற அர்த்தத்தில்...

Know the word ANXIOUS...

படம்
Word of the day is ANXIOUS... Pronunciation /ˈæŋk.ʃəs/ Function The word ANXIOUS is an adjective. Meaning ANXIOUS என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். முதலாவதாக it means worried and nervous என்ற சொல்லலாம் அதாவது கவலையுடனும் பதட்டத்துடனும் கூடிய என்று அர்த்தம். இரண்டாவதாக it means very eager என்று சொல்லலாம் அதாவது அதிக ஆவலுடன் கூடிய என்று அர்த்தம். அதாவது பதட்டத்துடன் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு இடத்தில் இதனை கவலையுடனும் பதட்டத்துடனும் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் ஆவலுடன் ஒரு விஷயத்திற்காக  எதிர்பார்த்து காத்திருக்கும் இடத்தில் இதனை ஆவலுடன் கூடிய எந்த அர்த்தத்தில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக மாலைப் பொழுதே வீட்டிற்கு வர வேண்டிய மகனோ மகளோ இரவு நேரமாகியும் வீட்டிற்குவராத பொழுது அங்கு பெற்றோருக்கு ஏற்படுகின்ற அந்தப் பதட்டத்தையும் கவலையையும் குறிக்கும் இடத்தில் பதட்டத்துடனும் கவலையுடனும் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது மகனோ அல்லது மகளோ பல வருடங்களுக்குப் பிறகு...

Know the word ISLE...

படம்
Word of the day is ISLE... Pronunciation /aɪl/ Function The word ISLE is a noun. Meaning a small island அதாவது குட்டி தீவு என்று அர்த்தம். அதாவது பரந்து விரிந்திருக்கிற இந்த பூமியில் கொஞ்சம் நிலப்பரப்புக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறது அதே நேரத்தில் அளவில் மிக பெரியதாக இருக்கிறது அதனைத்தான் நாம் கண்டங்கள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் CONTINENTS என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் நிறைய நிலப்பரப்புக்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும் அளவில் மிகச் சிறியதாகவும் இருக்கிறது இவற்றைத்தான் நாம் தீவுகள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் ISLANDS என்று அழைக்கப்படுகிறது. தீவு என்று சொல்வதற்கு ஒரே ஒரு வரையறை தான் இருக்கிறது அது நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட பகுதி என்பதாகும் அப்படிப் பார்த்தால் எல்லா கண்டங்களும் கூட நான்கு பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுதான் இருக்கிறது. எனவே நண்பர்களே நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு கண்டம் (CONTINENT) ஆகும். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட சிறிய பகுதி தீவு (ISLAND) ஆகும். மேலும் நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட ம...

Know the word AMELIORATE...

படம்
Word of the day is AMELIORATE... Pronunciation /əˈmiːl.jə.reɪt/ Function The word AMELIORATE is a verb. Meaning to make a bad or unsatisfactory situation better அதாவது மோசமான அல்லது திருப்தியற்ற ஒரு சூழ்நிலையை சிறப்பானதாக்குதல் என்று அர்த்தம். அதாவது ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு இடத்தில் வாழும் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யாமல் விடப்படும் போது அங்கே ஏற்படும் பிரச்சனைகள் அல்லது குளறுபடிகளை சிறிது நிவர்த்தி செய்வதன் மூலமாக அந்த சூழ்நிலையை மேம்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பசியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் சாப்பாடு கொடுப்பதன் மூலமாக அல்லது சாப்பாடு வாங்குவதற்கு பணம் கொடுப்பதன் மூலமாக அந்த சூழ்நிலையை மேம்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு செல்போன் மட்டும் இருக்கும் பொழுது அந்த ஒரு செல்போனுக்காக இரண்டு குழந்தைகளும் சண்டையிடும் பொழுது அந்த பிரச்சனையை தீர்க்க இன்னொரு செல்போன் வாங்கி கொடுப்பதன் மூலமாக அந்த சூழ்நிலையை மேம்படுத்தும் பொழுது இந...

Know the word VERBOSE...

படம்
Word of the day is VERBOSE... Pronunciation /vɚˈboʊs/ Function The word VERBOSE is an adjective. Meaning using or containing more words than are necessary அதாவது தேவையானதை விட அளவுக்கு அதிகமான வார்த்தைகளை கொண்டிருத்தல் அல்லது பயன்படுத்துதல் என்று அர்த்தம். அதாவது வெட்டிப்பேச்சு வேதனையைத் தரும் என்று சொல்லுவாங்க. அதாவது சில பேருக்கு பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால வாயில வருகின்ற எல்லாவற்றையும் பேசுவாங்க, தேவையானதுதான் பேசுறோமா அல்லது சரியானதுதான் பேசுறோமா என்று கொஞ்சம் கூட யோசித்து பார்க்க மாட்டாங்க.  சரியான பேச்சு என்று சொல்லப்படுவது எது தெரியுமா? யாராவது ஏதாவது கேட்டாங்க அப்படின்னா அதுக்கு பதில் "ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை" இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதை தாண்டி ஒரு வார்த்தை பேசினாலே அது பல வார்த்தைகளை பேச வழி வகுத்துவிடும். அது பிற்காலத்தில் வேதனையைத் தரும். சில பேர் பேசினால் பேசிக்கிட்டே இருப்பாங்க அவங்க என்ன பேசுறாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது அவங்க பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அடுத்தவங்களுக்கும் அதை சொல்ல தெரியாது அந்த அளவுக்கு எக்கச்சக...

Know the word CORDIAL...

படம்
Word of the day is CORDIAL... Pronunciation /ˈkɔː.di.əl/ Function The word CORDIAL can be used as adjective and noun. CORDIAL என்ற இந்த வார்த்தையானது அருமையான மூன்று அர்த்தங்களைக் கொண்டுள்ளது. Meaning முதலாவதாக it means warm and friendly என்று சொல்லலாம் அதாவது இனிமையான மற்றும் நட்புடனான என்று அர்த்தம். தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உள்ளன்புள்ள அல்லது அன்பான அல்லது சுமுகமான போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம். அதாவது இரண்டு நபர்களுக்கிடையேயான உறவை CORDIAL என்ற இந்த வார்த்தையை வைத்து விளக்கும் பொழுது அதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்த இரு நபர்களுக்கிடையேயான உறவில் அன்பு இருக்கிறது மற்றும் உண்மையும் இருக்கிறது அதே நேரத்தில் எந்த விதமான எதிர்பார்ப்போ அல்லது நம்பிக்கையோ இல்லை என்று அர்த்தம். இவ்வாறாக ஒரு உறவு தொடரப்படும் பொழுது அந்த உறவினை இந்த CORDIAL என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். இந்த வகையான உறவானது நட்பு வட்டாரத்திற்குள்ளும் வராது குடும்ப உறவுகளுக்குள்ளும் வராது.  In a sentence I just want to maintain a cordial relationship with him.  அவருடன் ...

Know the word NAUGHT...

படம்
Word of the day is NAUGHT... Pronunciation /nɑːt/ Function The word NAUGHT is a noun. Meaning NAUGHT என்ற இந்த வார்த்தைக்குள் மூன்று அருமையான விஷயங்கள் அடங்கியுள்ளது அவை nothing or complete failure or zero அதாவது ஒன்றுமில்லை அல்லது முற்றிலும் தோல்வி அல்லது பூஜ்ஜியம் என்று அர்த்தம். அதாவது இந்த NAUGHT என்ற இந்த வார்த்தையை NOTHING என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம் அதாவது ஒன்றுமில்லை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக Did you say anything? என்று ஒருவர் கேட்கும் பொழுது No, I did not say anything என்று சொல்லலாம் அல்லது No, I said nothing என்று சொல்லலாம் அல்லது  NOTHING என்று மிகவும் Short ஆக சொல்லலாம் அல்லது அதற்கு பதிலாக NAUGHT என்று சொல்லி விடலாம் அதாவது ஒன்றுமில்லை என்று அர்த்தம். மேலும் இரு நபர்களை ஒருவரோடு ஒருவரை ஒரு விஷயத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசும் பொழுது ஒருவர் மற்றொருவருக்கு எந்த விதத்திலும் ஒன்றும் இல்லாதவராக இருக்கும்பொழுது NAUGHT என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். அதாவது He is naught for me என்று சொல்லலாம் அதாவது He is nothing for...

Know the word VAINGLORY...

படம்
Word of the day is VAINGLORY... Pronunciation /veɪnˈɡlɔː.ri/ Function The word VAINGLORY can be used as verb and noun. Meaning inordinate pride in oneself or one's achievements அதாவது ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது தனது சாதனைகள் பற்றியோ அளவுக்கு மீறி பெருமை பாராட்டுவது என்று அர்த்தம். தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வீண் பெருமை என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத கேவலமான ஒரு குணம் என்று சொல்லலாம். இந்த வார்த்தையானது பணிவு என்ற வார்த்தைக்கு அப்படியே எதிர்ப்பதம் ஆகும். இந்த குணம் படைத்தவர்கள் எப்பொழுதும் தன்னைப் பற்றியே தனது நலனைப் பற்றியே தனது சாதனைகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு அதிலே சந்தோஷமடைந்து கொண்டு இருப்பார்கள். மேலும் பிறரை மட்டம் தட்டி பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் நண்பர்களே! இந்த வீண் பெருமை பேசுவது எந்தவித பயனையும் தராது மாறாக அழிவை மட்டுமே தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். In a sentence She vaingloried herself throughout the meeting. அவள் கூட்டம் முழுவதும் தன்னைப்பற்றியே வீண் பெருமை பேசினாள். His vainglory ruined...

Know the word ABOVEBOARD...

படம்
Word of the day is ABOVEBOARD... Pronunciation /əˌbʌvˈbɔːd/ Function The word ABOVEBOARD can be used as adjective and adverb. Meaning honest and not trying to deceive அதாவது நேர்மையான மற்றும் ஏமாற்ற முயற்சிக்காத என்று அர்த்தம். அதாவது ABOVEBOARD என்ற இந்த வார்த்தையானது சீட்டு விளையாட்டிலிருந்து தோன்றிய ஒரு வார்த்தையாகும். சீட்டு விளையாட்டில் நேர்மையாக விளையாடுவது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். எல்லா விளையாட்டிலும் நேர்மையாக விளையாடுவது என்பது மிக முக்கியமான ஒன்று தான் ஆனால் இந்த சீட்டு விளையாட்டில் சிறியதாக ஏமாற்றினாலே அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதாவது சீட்டு விளையாடும் பொழுது சீட்டு விளையாடும் ஒரு நபரின் கையும் சீட்டும் மேஜைக்கு மேலே இருக்கும் வரை அவர் நேர்மையாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தத்தை தரும். அதே நேரத்தில் சீட்டு விளையாடும் ஒரு நபர் அவரது கையையோ அல்லது சீட்டையோ மேஜைக்கு அடியில் கொண்டு போக முயற்சி செய்தாலே அவர் ஏதோ ஏமாற்ற முயற்சி செய்கிறார் என்ற அர்த்தத்தை தந்துவிடும். எனவே நண்பர்களே! இந்த ABOVEBOARD என்ற இந்த வார்த்தையை ஒருவர் அவரது...

Know the word OPULENT...

படம்
Word of the day is OPULENT... Pronunciation /ˈɑː.pjə.lənt/ Function The word OPULENT is an adjective. Meaning expensive and luxurious அதாவது விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான என்று அர்த்தம். தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதிசொகுசான என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் OPULENT என்ற இந்த வார்த்தையானது ஒரு நாட்டின் நம்பர் ஒன் பணக்காரர்களுக்கு என்று ஒதுக்கி விடப்பட்ட ஒரு வார்த்தை என்று சொல்லலாம். ஏனென்றால் இவர்களிடம் மட்டுமே அதி சொகுசான வாகனங்கள், அதிசொகுசான பொருட்கள், அதிசொகுசான இருப்பிடங்கள், அதிசொகுசான வாழ்விடங்கள், அதிசொகுசான ஹோட்டல்கள் என்று எல்லாமே அதிகப்படியான சொகுசு நிறைந்ததாகவே இருக்கும். எனவே இந்த OPULENT என்ற இந்த வார்த்தையானது நாட்டின் நம்பர் ஒன் பணக்காரர்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும்போது அவர்களுக்கு நிகரான ஒரு வார்த்தை என்று சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும். அதே நேரத்தில் அந்த பணக்காரர்கள் வரிசையில் இல்லாத ஒருவர் அதிசொகுசு நிறைந்த ஒரு பொருளை வைத்திருந்தால் இந்த வார்த்தையானது பணக்காரரை போல அவர் பாசாங்கு செய்கிறார் என்ற தவறான ...

Know the word LOATHE...

படம்
Word of the day is LOATHE... Pronunciation /loʊð/ Function The word LOATHE is a verb. Meaning to feel strong hate or dislike for someone or something அதாவது யார் மீதாவது அல்லது எதன் மீதாவது கடுமையான வெறுப்பை உணர்தல் என்று அர்த்தம். அதாவது LOATHE என்ற இந்த வார்த்தையானது உச்சகட்ட வெறுப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். தமிழில் சுத்தமா பிடிக்காது என்று பயன்படுத்தும் இடங்களில் இந்த வார்த்தையை பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக சிலருக்கு சைவ உணவு சுத்தமா பிடிக்காது அதே நேரத்தில் சிலருக்கு அசைவ உணவு சுத்தமா பிடிக்காது. சிலருக்கு இரவு நேரத்தில் சோறு சாப்பிட சுத்தமா பிடிக்காது அதே நேரத்தில் சிலருக்கு இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட சுத்தமா பிடிக்காது. சிலருக்கு கழிவறையை கழுவ சுத்தமா பிடிக்காது அதே நேரத்தில் சிலருக்கு வீட்டு வேலையை செய்யவே சுத்தமா பிடிக்காது. இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் சில விஷயங்கள் சுத்தமா பிடிக்காது சிலருக்கு சில மனிதர்களை சுத்தமா பிடிக்காது சிலருக்கு சில பொருட்களை சுத்தமா பிடிக்காது சிலருக்கு சில இடங்களை சுத்தமா பிடிக்காது.  எனவே இந்த LOATHE...

Know the word OPAQUE...

படம்
Word of the day is OPAQUE... Pronunciation /oʊˈpeɪk/ Function The word OPAQUE is an adjective. Meaning OPAQUE என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் முதலாவதாக it means preventing light from traveling through அதாவது ஒளி பயணம் செய்வதைத் தடுத்தல் என்று அர்த்தம். அதாவது OPAQUE என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒளி புகாத ஒரு பொருளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக மரக்கட்டை இரும்பு போன்ற பொருட்கள் ஒளி புகாததாக இருக்கிறது. மேலும் OPAQUE என்ற இந்த வார்த்தையானது not clearly understood  என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் அதாவது தெளிவாக புரிந்து கொள்ள முடியாத என்று அர்த்தம். அதாவது ஒருவர் பேசும் வார்த்தைகளோ அல்லது ஒருவர் எழுதும் கவிதைகளோ அல்லது கட்டுரைகளோ புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும் பொழுது அந்த இடத்திலும் இந்த OPAQUE என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம். எனவே இந்த OPAQUE என்ற இந்த வார்த்தையை தமிழில் ஒளி புகாத அல்லது தெளிவாக புரிந்து கொள்ள முடியாத என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். In a sentence Even some of the windows in the jail are opa...

Know the word TRUANT...

படம்
Word of the day is TRUANT... Pronunciation /ˈtru·ənt/ Function The word TRUANT can be used as noun and adjective. Meaning TRUANT என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் முதலாவதாக it refers to someone who is absent from school without permission அதாவது அனுமதியின்றி பள்ளிக்கு வராத ஒருவர் என்று அர்த்தம். அதாவது TRUANT என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் அனுமதியில்லாமல் தொடர்ந்து பள்ளிக்கு வராத ஒரு மாணவனை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாணவர்களின் பெற்றோர்களை பொருத்தவரையில் இவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இவர்கள் பள்ளிக்கு செல்வது போல் காட்சியளித்து பள்ளிக்கு செல்லாமல் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பார்கள். பெரிய பெரிய நகரங்களில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்றவற்றில் TRUANT SCHOOL BOYS INVOLVED என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் It refers to a person who shirks his or her duty அதாவது தனது கடமையைத் தவிர்க்கும் ஒரு நபரையும் குறிப்பதற்காக இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது. அதாவது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நபர...

Know the word REJUVENATE...

படம்
Word of the day is REJUVENATE... Pronunciation /rɪˈdʒuː.vən.eɪt/ Function The word REJUVENATE is a verb. Meaning to revitalize by giving new energy or vigor அதாவது புதிய ஆற்றல் அல்லது வீரியம் கொடுப்பதன் மூலம் புத்துயிர் பெறுதல் என்று அர்த்தம். அதாவது ஒரு உயிரினம் (மனிதனாக இருக்கலாம் அல்லது விலங்காக இருக்கலாம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது தாவரமாக இருக்கலாம்) அதனுடைய முந்தைய வலிமையை இழந்தோ அல்லது இளமையை இழந்தோ இருக்கும் பொழுது அது இழந்த அந்த வலிமையை, அந்த இளமையை, மீட்டெடுக்க முயற்சி செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் அந்த உயிரினம் தனது பழைய நிலையை அடையும் பொழுது இந்த REJUVENATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் ஒரு நிறுவனம் நலிவடைந்து அதனுடைய முந்தைய வளமையை இழந்து அதனுடைய நல்ல வியாபாரத்தை இழந்து இருக்கும் பொழுது அது இழந்த அந்த வளமையை, அந்த வியாபாரத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் அந்த நிறுவனம் அதனுடைய பழைய நிலையை அடையும் பொழுதும் இந்த REJUVENATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் ஒரு இடம் அதனுடைய முந்தைய அழகை இழந்து பொதுமக்களின் ...

Know the word ADEQUATE...

படம்
Word of the day is ADEQUATE... Function The word ADEQUATE is an adjective.  Pronunciation  /ˈæd.ə.kwət/ Meaning satisfactory or acceptable in quality or quantity அதாவது தரம் அல்லது அளவில் திருப்திகரமான அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க என்று அர்த்தம். அதாவது நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படையான தேவைகள் என்று ஒன்று இருக்கிறது அவை உணவு, உடை, உறைவிடம்.  இதையும் தாண்டி இந்த உலகத்தில் இன்னும் சிறப்பாக வாழ்வதற்கு அறிவு தேவைப்படுகிறது, பணம் தேவைப்படுகிறது, உறவுகள் தேவைப்படுகிறது. இதையும் தாண்டி இன்னும் பலருக்கு பலவிதமான தேவைகள் இருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. இவ்வாறாக இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான தேவைகள் சிலரிடத்தில் அளவுக்கு அதிகமாகவே இருக்கும் ஆனால் திருப்தி என்ற ஒன்று இருக்காது. பலரிடத்தில் சுத்தமாகவே ஒன்றும் இருக்காது திருப்பியும் இருக்காது, இன்னும் சிலரிடத்தில் போதுமானதாக இருக்கும் திருப்தியும் இருக்கும் என்று சொல்லலாம். இவ்வாறாக ஒருவரிடத்தில் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான ஒரு விஷயம் போதுமானதாகவும் திருப்திகரமாகவும் இருக்கும் பொழுது அந்த இடத்த...

Know the word DESPAIR...

படம்
Word of the day is DESPAIR... Function The word DESPAIR can be used as verb and noun. Pronunciation /dɪˈspɛəɹ/ Meaning to be hopeless or utter hopelessness அதாவது நம்பிக்கையற்று இருத்தல் அல்லது முற்றிலும் நம்பிக்கையற்ற என்று அர்த்தம். அதாவது இந்த DESPAIR என்ற இந்த வார்த்தையை நம்பிக்கை என்பது ஒரு துளிகூட இல்லாத இடத்தில் பயன்படுத்த வேண்டும். எடுத்துகாட்டாக தேர்வுக்கு கொஞ்ச நேரம் கூட கொடுத்து தயார் செய்யாத ஒரு மாணவனுக்கு அந்த தேர்வில் வெற்றி அடைவான் என்ற நம்பிக்கை ஒரு துளி கூட இருக்காது. பலமுறை கேட்டும் கொடுத்த பணத்தை வாங்க முடியாத இடத்தில் அந்த பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒரு துளி கூட இருக்காது. நம்மை சுற்றி 40-பேர் துப்பாக்கியோடு நம்மை சுடுவதற்காக நிற்கும் பொழுது நாம் மீண்டும் வாழ்வோம் என்ற நம்பிக்கை ஒரு துளி கூட இருக்காது. இவ்வாறாக நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத இடத்தில் இந்த DESPAIR என்ற இந்த வார்த்தையை  பயன்படுத்த வேண்டும்.  ஒரு மனிதன் நம்பிக்கை இழந்து இருக்கும் அந்த நிலையை தமிழில் விரக்தி என்ற வார்த்தையால் விவரிக்கிறோம் எனவே தமிழில் விரக்தியடைதல் அல்லத...

Know the word HECTIC...

படம்
Word of the day is HECTIC... Function The word HECTIC is an adjective. Pronunciation /ˈhek·tɪk/ Meaning busy, fast, and full of activity அதாவது நிறைய வேலைகளை ஓய்வில்லாமலும் வேகமாகவும் செய்ய வேண்டிய என்று அர்த்தம். அதாவது ஐந்து நாட்களில் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை வரும்போது அந்த நாளை HECTIC DAY என்று அழைக்கலாம். இவ்வாறாக தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் வேலை இருந்ததால் அதனை HECTIC WEEK என்று அழைக்கலாம். வருடம் முழுவதுமே வேலை இப்படிதான் இருக்கும் என்றால் அந்த வேலையை HECTIC JOB என்று அழைக்கலாம். மொத்தத்தில் வேலை செய்யும் இடத்தில் நிம்மதியாக கொஞ்ச நேரம் கூட ஓய்வாக இருக்க முடியாத ஒரு சூழ்நிலையை HECTIC என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். தமிழில் ஓய்வே இல்லாத பரபரப்பான என்ற அர்த்தத்தில் இந்த HECTIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence Nobody will like a hectic job. ஓய்வே இல்லாத பரபரப்பான ஒரு வேலையை யாரும் விரும்ப மாட்டார்கள். Practice it எனவே நண்பர்களே! ஓய்வே இல்லாத பரபரப்பான என்ற அர்த்தத்தில் இந்த HECTIC என்ற இந்த வார...

Know the word INCESSANT...

படம்
Word of the day is INCESSANT... Function The word INCESSANT is an adjective.  Meaning Without pause or stop; not ending, especially to the point of annoyance அதாவது இடைநிறுத்தமோ அல்லது நிறுத்தமோ அல்லது முடிவே இல்லாமல் எரிச்சலூட்டுகின்ற என்று அர்த்தம். அதாவது INCESSANT என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயம் தொடர்ந்து எரிச்சலூட்டுகின்ற வகையில் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். அதாவது இந்த INCESSANT என்ற இந்த வார்த்தை 100% நெகட்டிவ்வாக பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம். அதாவது இந்த INCESSANT என்ற இந்த வார்த்தையை தமிழில் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்வோமல்லவா! அதேபோன்று இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக மழை வராதா என்று ஏங்கி காத்திருப்போம் ஆனால் தொடர்ந்து மழை விழும் பொழுது அது எரிச்சலை உண்டு பண்ணிவிடும். அதேபோன்று வெயில் வராதா என்று ஆசையாக காத்திருப்போம் ஆனால் தொடர்ந்து வெயில் அடிக்கும் பொழுது அது எரிச்சலை உண்டு பண்ணிவிடும் இதேபோன்ற இ...