இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word SCANDAL...

படம்
Word of the day is SCANDAL... Pronunciation /ˈskæn.dəl/ Function The word SCANDAL is a noun. Meaning It refers to a disgraceful action or event or report என்று சொல்லலாம் அதாவது ஒரு அவமானகரமான செயல் அல்லது நிகழ்வு அல்லது அறிக்கை என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதனின் செயலானது நேர்மையற்றதாக, பிறரை வஞ்சிக்க கூடியதாக ஏமாற்றக் கூடியதாக இருக்கும் பொழுது மேலும் அது சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கும் பொழுது அது பொது மக்களின் பார்வையில் ஒழுக்கக்கேடானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் எனவே அந்த இடத்திலே இந்த SCANDAL இன்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே பணம் சார்ந்தோ அல்லது ஒழுக்கம் சார்ந்தோ ஒரு குழு நடத்திய ஒரு நிகழ்வானது சட்டத்திற்கு புறம்பானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SCANDAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் நண்பர்களே! இப்படிப்பட்ட SCANDALS எல்லாமே ஒரு தனி மனிதனுடைய அதிகப்படியான பேராசையினாலும் காம உணர்வினாலும் அதிகார துஷ்பிரயோகத்தினாலுமே  உருவாகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும

Know the word FRUCTIFY...

படம்
Word of the day is FRUCTIFY... Pronunciation /ˈfrʌk.tɪ.faɪ/ Function The word FRUCTIFY is a verb. Meaning It means to produce a good or useful result என்று சொல்லலாம் அதாவது ஒரு நல்ல அல்லது பயனுள்ள முடிவை உருவாக்குதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த FRUCTIFY என்கிற இந்த வார்த்தையை ஒரு மரமானது நன்றாக வளர்ந்து காய்த்து கனி கொடுக்கக்கூடிய காலத்திலே அதிக அளவில் கனிகளை ஈனும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம். அதேபோலவே ஒரு மனிதன் செய்த ஒரு முதலீடோ அல்லது செய்த ஒரு செயலோ தகுந்த காலத்தில் பயன் அளிக்கும் பொழுது அந்த இடத்திலும் இந்த FRUCTIFY என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கனி கொடுத்தல் அல்லது பலனளித்தல் என்கிற அர்த்தத்தில் இந்த FRUCTIFY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence Mango trees fructified abundantly this year. இந்த ஆண்டு மா மரங்கள் அதிகளவில் கனிகள் ஈன்றன. I hope that the investments which I made fructify soon. நான் செய்த முதலீடுகள் விரைவில் பலனளிக்கும் என்று நான் நம்புகிறேன். Practice it எனவே

Know the word CRITTER...

படம்
Word of the day is CRITTER... Pronunciation /ˈkrɪt̬.ɚ/ Function The word CRITTER is a noun.  Meaning The word critter refers to a creature especially an animal என்று சொல்லலாம் அதாவது ஒரு உயிரினம் குறிப்பாக ஒரு விலங்கு என்று அர்த்தம். அதாவது நண்பர்களே இன்று CRITTER என்ற இந்த வார்த்தையானது CREATURE என்ற வார்த்தையில் இருந்து உருவான ஒரு வார்த்தையாகும் அதாவது உயிரினம் என்று அர்த்தம். அதாவது இந்த CRITTER என்ற இந்த வார்த்தையை எல்லா வகையான உயிரினத்தையும் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம் அது விலங்காக இருக்கலாம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது மனிதனாக கூட இருக்கலாம் ஏனென்றால் மனிதனும் ஒரு விலங்கு தானே! இருந்தபோதிலும் அதிகப்படியாக இந்த CRITTER என்ற இந்த வார்த்தையானது ஒரு விலங்கை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த விலங்கானது பெரிய வகை விலங்கிலிருந்து சிறிய வகை பூச்சி வரை இருக்கலாம். மேலும் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகள் என எல்லா வகையான விலங்குகளையும் இந்தக் CRITTER என்ற இந்த வார்த்தையானது உள்ளடக்கி இருக்கிறது. எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உயிர

Know the word DEFER...

படம்
Word of the day is DEFER... Pronunciation /dɪˈfɝː/ Function The word DEFER is a verb.  DEFER என்ற இந்த வார்த்தையானது இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளது. Meaning முதலாவதாக It means to delay something until a later time என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை பின் நேரத்திற்கு தாமதப்படுத்துதல் என்று அர்த்தம். அதாவது ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது காரணமே இல்லாமலேயோ ஒருவர் செய்ய வேண்டிய ஒரு வேலையையோ அல்லது ஒரு செயலையோ சிறிது காலத்திற்கு தாமதித்தல் என்கிற இடத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே இந்த அர்த்தத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தபொழுது தமிழில் தாமதப்படுத்துதல் அல்லது தள்ளி போடுதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். இரண்டாவதாக The word defer means to yield to another's wish or opinion என்று சொல்லலாம் அதாவது மற்றொருவரின் விருப்பம் அல்லது கருத்துக்கு அடிபணிதல் என்று அர்த்தம். அதாவது நாம் ஒரு இடத்தில் வேலை செய்கிறோம் என்றால் அந்த இடத்திற்கு என்று சில விதிமுறைகள் இருக்கும் எனவே அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நாம் செ

Know the word NAIVE...

படம்
Word of the day is NAIVE... Pronunciation /naɪˈiːv/ Function The word NAIVE is an adjective.  Meaning It means lacking worldly experience and wisdom  என்று சொல்லலாம் அதாவது உலக அனுபவமும் அறிவும் இல்லாத என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நாம் யாராவது ஒருவரை NAIVE என்று இந்த வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்த நபர் உலக அனுபவம் இல்லாதவர், எது சரி? எது தவறு? என்று அறிந்து தேர்ந்தெடுக்க தெரியாதவர், தானாகவே சிந்தித்து செயல்பட புத்தி இல்லாதவர், யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்ப கூடியவர், உலக மக்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளத் தெரியாதவர் என்று அர்த்தம்.  யாருக்குமே தன்னை பிறர் NAIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி கூப்பிடவே பிடிக்காது என்றே சொல்லலாம்.  ஒரே வார்த்தையில் மிகவும் தெளிவாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்த SOPHISTICATED என்று ஒரு வார்த்தையை படித்தோம் அந்த வார்த்தைக்கு அப்படியே எதிர்ச்சொல்தான் இந்த NAIVE என்ற இந்த வார்த்தை. எனவே NAIVE = UNSOPHISTICATED என்றே சொல்லலாம்.  எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உலகி

Know the word DECIPHER...

படம்
Word of the day is DECIPHER... Pronunciation /dɪˈsaɪ.fɚ/ Function The word DECIPHER is a verb.  Meaning It means to discover the meaning of something written badly or in a difficult or hidden way என்று சொல்லலாம் அதாவது மோசமாக அல்லது கடினமான அல்லது மறைமுக வழியில் எழுதப்பட்ட ஒன்றின் பொருளைக் கண்டறிதல் என்று அர்த்தம். அதாவது மருத்துவர்கள் மருந்து பரிந்துரைக்கிற சீட்ல எழுதி இருக்கிற அந்த மருந்துகளின் பெயர்களை சாதாரணமாக நம்மால் வாசித்து புரிந்து கொள்ள முடியாது ஆனால் அதே நேரத்தில்  மருந்து கடையில் இருக்கிற ஒருவரால் அதனை வாசித்து புரிந்து கொள்ள முடியும்.  அதைப்போலவே ஒரு நாடானது சில ரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது அந்தத் தகவலானது பிறரால் எளிதில் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் இருக்காது மாறாக ரகசிய முறையில் எழுதி இருக்கும். அதனை அந்த குழுவைச் சார்ந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். அதேபோலவே ஒரு அச்சிடப்பட்ட தகவலில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லாத பொழுது அதிலே என்ன அச்சிடப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் எடுத்துக்கா

Know the word SOPHISTICATED...

படம்
Word of the day is SOPHISTICATED... Pronunciation /səˈfɪs.tə.keɪ.t̬ɪd/ Function The word SOPHISTICATED is an adjective.  Meaning It means having obtained worldly experience and intellectual என்று சொல்லலாம் அதாவது உலக அனுபவமும் அறிவாற்றலும் பெற்ற என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் தான் கற்ற கல்வியின் வாயிலாகவும் உலகத்தில் அவருக்கு கிடைத்த அனுபவத்தின் வாயிலாகவும் உலகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளை அறிந்தவனாக, உலகின் வெவ்வேறு இடங்களின் கலாச்சாரத்தை பண்பாட்டை அறிந்தவனாக திகழும் பொழுது அவன் உலகின் போக்கை அறிந்தவனாக திகழ்கிறான் இவ்வாறு உலக அனுபவமும் அறிவாற்றலும் பெற்ற ஒருவரை இந்த SOPHISTICATED என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.  அதைப்போலவே ஒரு இயந்திரத்திற்கு செயற்கையாக இப்படிப்பட்ட அறிவாற்றலை கொடுக்கும் பொழுது அந்த இயந்திரமும் உலக அனுபவமும் அறிவாற்றலும் கொண்டது போல செயல்பட ஆரம்பிக்கும் (எடுத்துக்காட்டாக நாம் பயன்படுத்தும் கணினியையும் அலைபேசியையும் ரோபோக்களையும் கொள்ளலாம்) மேலும் இவை மனிதனை விட பல மடங்கு அறிவாற்றல் கொண்டதாக செயல்படும் மேலும் மனிதனால் தீர்க்க முடியாத சிக்கல

Know the word PERSPICACIOUS...

படம்
Word of the day is PERSPICACIOUS... Pronunciation /ˌpɝː.spɪˈkeɪ.ʃəs/ Function The word PERSPICACIOUS is an adjective.  Meaning It means quick in noticing, understanding, or judging things accurately என்று சொல்லலாம் அதாவது ஒரு விஷயத்தை விரைவாகவும் துல்லியமாகவும் கவனிக்கக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் தீர்வு காணக்கூடிய என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! வகுப்பறையை பொறுத்தவரையில் எல்லா மாணவர்களுக்கும் எல்லா பாடமும் புரியும் ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு மாணவனும் எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் மாறுபடும் அதனாலதான் ஐந்தாம் வகுப்பில்  கடினமாக தெரிந்த ஒரு கணித பாடம் பத்தாம் வகுப்பிற்கு சென்ற பிறகு அந்த ஐந்தாம் வகுப்பு கணித பாடத்தை பார்க்கும்பொழுது மிகவும் எளிதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் சில மாணவர்கள் ஆசிரியர் பாடத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது எவ்வளவு கடினமான பகுதியாக இருந்தாலும் அதனை அப்படியே புரிந்து கொள்வார்கள்.  இப்படிப்பட்ட அறிவாற்றலை கொண்டவர்களை விவரிக்கத்தான் இந்த PERSPICACIOUS என்ற இந்த வார்த்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.  மேலும் இப்படி

Know the word DISSEMINATE...

படம்
Word of the day is DISSEMINATE... Pronunciation /dɪˈsem.ə.neɪt/ Function The word DISSEMINATE is a verb. Meaning It means to spread something widely என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றை பரவலாக பரப்புதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த DISSEMINATE என்ற இந்த வார்த்தையை ஒரு விவசாயி வயல்வெளியில் விதையை பரப்பி வீசுவது போல, ஒரு மீனவன் கடலில் வலையை பரப்பி வீசுவது போல ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை அல்லது ஒரு விஷயத்தை பரவலாக பரப்பி எல்லோருக்கும் தெரியப்படுத்துதல் அல்லது எல்லோரும் அறியும் படி செய்தல் என்கிற இடத்தில் பயன்படுத்த வேண்டும். அந்த செய்தியானது, அந்த தகவலானது அல்லது அந்த விஷயமானது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். மொத்தத்தில் ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை அல்லது ஒரு விஷயத்தை அல்லது ஒரு கருத்தை நான்கு பேர் அறியும்படி செய்தல் என்கிற இடத்தில் இந்த DISSEMINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பரப்புதல் அல்லது பரவச் செய்தல் என்ற அர்த்தத்தில் DISSEMINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence

Know the word DISAPPROVAL...

படம்
Word of the day is DISAPPROVAL... Pronunciation /ˌdɪs.əˈpruː.vəl/ Function The word DISAPPROVAL is a noun. Meaning It refers to the feeling of having a negative opinion of someone or something என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவரின் அல்லது ஏதாவதொன்றின் எதிர்மறையான கருத்தை கொண்ட உணர்வு என்று அர்த்தம். அதாவது இந்த DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை ஒருவர் மற்றொருவரின் கருத்தையோ அல்லது அவர் செய்த செயலையோ தவறு என்று உணர்ந்தவராய் அந்த கருத்தையோ அல்லது அவர் செய்த அந்த செயலையோ விரும்பாத பொழுது அல்லது ஏற்றுக் கொள்ளாத பொழுது அந்த இடத்தில் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதேபோலவே ஒரு இயந்திரமானது அதனுள் கொடுக்கப்பட்ட உள்ளீடை தவறு என்று கருதி அந்த உள்ளீடை ஏற்றுக்கொள்ளாத பொழுதும் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு ATM இயந்திரத்தில் ஒரு ATM கார்டை உள்ளீடு செய்யும் பொழுது அந்த கார்டானது தவறாக உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் பொழுது அந்த கார்டை அந்த ATM இயந்திரமானது ஏற்றுக் கொள்ளாது எனவே அந்த இடத்தில் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தல

Know the word CONSENT...

படம்
Word of the day is CONSENT... Pronunciation /kənˈsent/ Function The word CONSENT can be used as noun and verb. Meaning It means to give permission to do something என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்று செய்ய அனுமதி வழங்குதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த CONSENT என்ற இந்த வார்த்தையை அதிகாரப்பூர்வமாக ஏதாவதொன்று செய்வதற்கு அனுமதி வழங்குகிற இடத்தில் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு அறுவை சிகிச்சை நடைபெறுகிற இடத்தில் அந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு அனுமதி வழங்குகிற இடத்தில் பயன்படுத்தலாம். அதுபோலவே ஒருவருக்கு சொந்தமான ஒரு விஷயத்தை அல்லது ஒரு பொருளை வேறொரு காரணத்திற்காக மற்றொருவர் பயன்படுத்தும் இடத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற வேண்டியது வரும் அந்த இடத்தில் CONSENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறுகிற இடத்தில் அல்லது அனுமதி வழங்குகிற இடத்தில் இந்த CONSENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் சம்மதம் அல்லது ஒப்புதல் அல்லது சம்மதம் வழங்குதல் அல

Know the word SUCCESSOR...

படம்
Word of the day is SUCCESSOR... Pronunciation /səkˈses.ɚ/ Function The word SUCCESSOR is a noun. Meaning It refers to a person who will hold a job or office after the current holder என்று சொல்லலாம் அதாவது ஒரு வேலையை அல்லது ஒரு பதவியை தற்போது வைத்திருப்பவருக்கு அடுத்ததாக வைத்திருக்க போகும் நபர் என்று அர்த்தம். அதாவது நீங்க ஒரு இடத்துல வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் அந்த இடத்துல அந்த வேலையை உங்களுக்கு பதிலாக உங்களுக்குப் பின்பு பணியமர்த்தப்படும் அந்த நபரை இந்த SUCCESSOR என்ற இந்த வார்த்தை குறிக்கிறது. மேலும் இந்த SUCCESSOR என்ற இந்த வார்த்தையை ஒரு மனிதனை குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் ஒரு பொருளை குறிப்பதற்கும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு கார் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய காரை  அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறாக அந்த கார் நிறுவனமானது அடுத்த வருடம் அறிமுகப்படுத்த போகும் காரானது இந்த வருடம் அறிமுகப்படுத்திய காரின் SUCCESSOR ஆகும். எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பதிலாள், பிந்திய, பின்வரும், பின்பு பதவி வகிக்

Know the word PREDECESSOR...

படம்
Word of the day is PREDECESSOR... Pronunciation /ˈpred.ə.ses.ɚ/ Function The word PREDECESSOR is a noun. Meaning It refers to a person who held a job or office before the current holder என்று சொல்லலாம் அதாவது ஒரு வேலையை அல்லது ஒரு பதவியை தற்போது வைத்திருப்பவருக்கு முன் வைத்திருந்த நபர் என்று அர்த்தம். அதாவது நீங்க ஒரு இடத்துல வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் அந்த இடத்துல அந்த வேலையை உங்களுக்கு முன்பாக யாரொருவர் செய்து கொண்டு இருந்தாரோ அவர்தான் உங்களுக்கு PREDECESSOR. மேலும் இந்த PREDECESSOR என்ற இந்த வார்த்தையை ஒரு மனிதனை குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் ஒரு பொருளை குறிப்பதற்கும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு செல்போன் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய செல்போனை  அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறாக அந்த செல்போன் நிறுவனமானது கடந்த வருடம் அறிமுகப்படுத்திய செல்போனானது இந்த வருடம் அறிமுகப்படுத்திய செல்போனின் PREDECESSOR ஆகும். எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் முன்னோடி, முந்தியவர், முந்தியது முன்பு பதவி வகித்தவர், முன்பிரு

Know the phrase FED UP...

படம்
Word of the day is FED UP... Pronunciation /ˌfed ˈʌp/ FED UP என்ற இந்த வார்த்தையை வார்த்தை என்று சொல்ல கூடாது மாறாக PHRASE என்று அழைக்க வேண்டும் அதாவது சொற்றொடர் என்று அர்த்தம் ஏனென்றால் இதிலே இரண்டு வார்த்தைகள் அடங்கி இருக்கிறது. Function The phrase FED UP is an adjective. Meaning It means bored, annoyed, or disappointed, especially by something that one has experienced for too long என்று சொல்லலாம் அதாவது ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்த ஒரு விஷயத்தால் ஏற்படும் சலிப்பு, எரிச்சல் அல்லது ஏமாற்றம் என்று அர்த்தம். அதாவது சில விஷயங்கள் எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது ஆனால் அதே நேரத்தில் சில விஷயங்கள் ஒருமுறை கூட பார்க்கவோ கேட்கவோ முடியாத அளவுக்கு இருக்கும். எடுத்துக்காட்டாக சில படங்கள் (சில கதைகள் அல்லது சில ஜோக்குகள்) எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் மனதுக்கு இனிதாக இருக்கும்,  பரவசமூட்டுவதாக இருக்கும் ஆனால் அதே நேரத்தில் சில படங்கள் ஒரு முறை தான் பார்க்க முடியும். அதிலும் சிறந்த விதமாக சில படங்

Know the word STARVING...

படம்
Word of the day is STARVING... Pronunciation /ˈstɑːr.vɪŋ/ Function The word STARVING can be used as adjective, noun and present participle of starve. STARVING என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக it refers to a condition of severe suffering due to not having enough food என்று சொல்லலாம் அதாவது போதுமான உணவு இல்லாததால்  கடுந்துன்பத்திற்குள்ளாகும் நிலை என்று அர்த்தம். அதாவது இந்த STARVING என்ற இந்த வார்த்தையை பஞ்சம் காரணமாக அல்லது பொருளாதார குறைபாட்டின் காரணமாக உண்பதற்கு உணவு கிடைக்காமல் போகும் இடத்தில் பயன்படுத்தலாம் மேலும் உண்பதற்கு உணவு கிடைத்தும் சரியான ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் போகும் இடத்திலும் பயன்படுத்தலாம் மேலும் நான்கு இட்லி சாப்பிட முடிகிற இடத்தில் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட கிடைக்கிற இடத்திலும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மொத்தத்தில் ஒரு வேளையாவது வயிறு நிறைய சாப்பாடு கிடைக்காமல் போகுமிடத்தில் STARVING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில் இந்த STARVING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் பட்டி

Know the word LEGIBLY...

படம்
Word of the day is LEGIBLY... Pronunciation /ˈledʒ.ə.bli/ Function The word LEGIBLY is an adverb. Meaning The word LEGIBLY means in a way that can be read easily என்று சொல்லலாம் அதாவது எளிதாக படிக்கக்கூடிய வகையில் என்று அர்த்தம். அதாவது ஒருவர் எழுதக்கூடிய  எழுத்தானது பிறரால் எளிதாக வாசிக்கக் கூடியதாக மேலும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் அவ்வாறாக ஒருவரது கையெழுத்து பிறரால் வாசித்து புரிந்து கொள்ள முடிகிற அளவில் இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.   இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒருவரது கையெழுத்தை குறிக்கதான் பயன்படுத்தப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அச்சிடப்பட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளை குறிக்கவும் LEGIBLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் எளிதாக படிக்கக்கூடிய வகையில் அல்லது தெளிவாக வாசிக்கக்கூடிய வகையில் என்னும் அர்த்தத்தில் இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence If he does not write legibly, he will not score high marks. அவர் தெளிவாக வா

Know the word BOASTFUL...

படம்
Word of the day is BOASTFUL... Pronunciation /ˈbəʊst.fəl/ Function The word BOASTFUL is an adjective. Meaning The word BOASTFUL means exhibiting self-importance என்று சொல்லலாம் அதாவது சுய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற என்று அர்த்தம். அதாவது ஒரு நபர் தனது சாதனைகளைப் பற்றியோ அல்லது தனது திறமைகளை பற்றியோ அல்லது தான் வைத்திருக்கின்ற பொருட்களை பற்றியோ அல்லது அவரது குணங்களைப் பற்றியோ அல்லது அவரது அழகைப் பற்றியோ அல்லது அவர் செய்த வீர தீர செயல்களை பற்றியோ அல்லது அவர் பிறருக்கு செய்த உதவிகளைப் பற்றியோ அவர் பேச ஆரம்பித்த நேரத்திலிருந்து அந்தப் பேச்சை முடிக்க கூட முடியாத அளவுக்கு பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த நபரை இந்த BOASTFUL என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். அதே நேரத்தில் ஒருவர் பிறரை ஊக்கப்படுத்துவதற்காக தான் செய்த சாதனைகளை அல்லது வீர தீர செயல்களை அல்லது தான் செய்த உதவிகளை பற்றி பேசலாம். அதற்கு மாறாக ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னை பற்றியே முடிவே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரை இந்த BOASTFUL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம

Know the word INCOMPATIBLE...

படம்
Word of the day is INCOMPATIBLE... Pronunciation /ˌɪn.kəmˈpæt.ə.bəl/ Function The word INCOMPATIBLE is an adjective. Meaning The word INCOMPATIBLE not able to exist or work with another person or thing because of basic differences என்று சொல்லலாம் அதாவது அடிப்படை வேறுபாடுகள் காரணமாக மற்றொரு நபருடனோ அல்லது பொருளுடனோ இருக்கவோ அல்லது வேலை செய்யவோ முடியாத என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடனோ அல்லது ஒரு பொருள் மற்றொரு பொருளடனோ இணைந்து பயணிக்க இயலவில்லை அல்லது இணைந்து இருக்க இயலவில்லை அல்லது சேர்ந்து ஒரு செயலை செய்ய இயலவில்லை என்று வரும்பொழுது அந்த இடத்திலே இந்த INCOMPATIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். ஒரு சுயநலவாதியும் ஒரு பொதுநலவாதியும் இணைந்து நாட்டிற்கான நலத்திட்டங்களை செய்ய முடியுமா? என்று ஒரு கேள்வி எழும் பொழுது அதற்கான பதில் இல்லை என்று தான் அனுபவத்தில் சிறந்தவர்கள் சொல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே ஒரு மைக்ரோ USB சார்ஜரைக் கொண்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்ற வேண்டிய ஒரு மொபைலை C Type சார்ஜரைக் கொண்டு சார்ஜ் ஏற்றுவது என்பது நடக்காத ஒரு காரியம். இவ்வ

Know the word CONSENSUS...

படம்
Word of the day is CONSENSUS... Pronunciation /kənˈsen.səs/ Function The word CONSENSUS is a noun. Meaning The word CONSENSUS refers to a generally accepted opinion or decision among a group of people என்று சொல்லலாம் அதாவது ஒரு குழுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து அல்லது முடிவு என்று அர்த்தம். பொதுவாக ஒரு நிர்வாகம் என்று வரும் பொழுது அந்த நிர்வாகத்தில் புதிதாக நடக்கவிருக்கின்ற ஒரு நிகழ்வை குறித்தோ அல்லது கடந்த கால நிகழ்வை குறித்தோ ஒரு முக்கியமான முடிவு என்று ஒன்று எடுக்கும் பொழுது அந்த நிர்வாகத்தை சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அந்த முடிவை எடுப்பது தான் வழக்கம்.  இவ்வாறாக ஒரு முடிவு எடுக்கும் பொழுது அங்கே கருத்து மோதல்கள் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதிலும் சிறந்த விதமாக அறிவாளிகள் மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிற இடத்தில் கருத்து மோதல்கள் அதிகமாகவே இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் கருத்து மோதல்கள் நிறைய இருந்தாலும் முடிவு சிறந்த முடிவாக இருக்க வாய்ப்பும் இருக்கிறது. இவ்வாறாக பல கருத்துக்களை கேட்டதற்கு பின்பு ஒரு குழுவாக அல

Know the word FEASIBILITY...

படம்
Word of the day is FEASIBILITY... Pronunciation /ˌfiː.zəˈbɪl.ə.t̬i/ Function The word FEASIBILITY is a noun. Meaning The word feasibility refers to the possibility of something that can be done என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்று செய்யக்கூடியதற்கான சாத்தியம் என்று அர்த்தம். அதாவது இந்த FEASIBILITY என்ற இந்த வார்த்தையானது ஒரு செயலை செய்வதற்கான அல்லது ஒரு குறிக்கோளை அடைவதற்கான சாத்தியத்தை ஆராய்கிற இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த FEASIBILITY என்ற இந்த வார்த்தையை பெரிய அளவிலும் பயன்படுத்தலாம் சிறிய அளவிலும் பயன்படுத்தலாம். பெரிய அளவிலும் பயன்படுத்தலாம் எனும் பொழுது எடுத்துக்காட்டாக ஒரு கார் நிறுவனமானது தனது தொழிற்சாலையை புதிதாக ஒரு இடத்தில் ஆரம்பித்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிற இடத்தில் பயன்படுத்தலாம். சிறிய அளவில் பயன்படுத்தலாம் எனும் பொழுது எடுத்துக்காட்டாக ஒருவர் தனது வீட்டை தனது இரண்டு விடுமுறை நாட்களில் புதிய வண்ணம் தீட்டி வீட்டை புதிதாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிற இடத்தில் பயன்படுத்தலாம். எனவே தமிழில் சாத்தியம் அல்லது சாத்திய கூறுகள் என்னும் அர்த்தத

Know the word CONCENTRATION...

படம்
Word of the day is CONCENTRATION... Pronunciation /ˌkɑːn.sənˈtreɪ.ʃən/ Function The word CONCENTRATION is a noun. CONCENTRATION என்ற இந்த வார்த்தையானது நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த மேலும் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தை அதே நேரத்தில் இந்த வார்த்தையை பற்றி தெரியாத சில அர்த்தங்களும் இருக்கின்றன எனவே இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை பற்றி தெரிந்த அர்த்தத்தையும் தெரியாத அர்த்தத்தையும் இந்தப் பதிவில் பார்ப்போம். Meaning முதலாவதாக It refers to complete attention என்று சொல்லலாம் அதாவது முழு கவனம் என்று அர்த்தம். அதாவது ஒருவர் தான் செய்கின்ற ஒரு செயலில் முழு கவனத்தையும் கொடுத்து எந்தவித கவன சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் அந்த செயலை செய்தல் என்று அர்த்தம். இதனை ஒரு மனிதனின் தனித்திறமை என்றும் சொல்லலாம் ஏனென்றால் எல்லோராலும் இவ்வாறாக செயல்பட முடியாது அதே நேரத்தில் ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தும் அது மாறுபடும்.  எனவே இந்த அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தும் போது ஒருமுகப்படுத்துதல் அல்லது முழு கவனம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence Due to noi

Know the word HAUGHTY...

படம்
Word of the day is HAUGHTY... Pronunciation /ˈhɑː.t̬i/ Function The word HAUGHTY is an adjective. Meaning It means unreasonably proud and unfriendly என்று சொல்லலாம் அதாவது காரணமே இல்லாம பெருமைப்படுதல் மற்றும் நட்பற்ற முறையில் நடத்தல் என்று அர்த்தம். அதாவது ஒரு நபர் காரணமே இல்லாம தன்னை குறித்து ரொம்ப பெருமைப்படுகிறார் அல்லது பிறரோடு சாதாரணமாகவே நட்பா பழக முடியவில்லை என்றால் அதுக்கு காரணம் அவர் தன்னை பிறரை விட மிகவும் சிறந்தவராக கருதுவது தான் என்று சொல்லலாம். இவ்வாறாக தன்னை பிறரை விட மிகவும் சிறந்தவராக கருதும் ஒருவரை இந்த HAUGHTY என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம். மேலும் சொல்ல வேண்டுமென்றால் இந்த HAUGHTY குணம்  படைத்தவர்களை குணம் அற்றவர்கள் என்றே சொல்லிவிடலாம் ஏனென்றால் இவர்கள் எப்பொழுதும் தன்னைப் பற்றிய பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள் மற்றவர்களை தன்னைவிட தாழ்ந்தவராகவே சித்தரித்துக் கொண்டிருப்பார்கள்.  எனவே தமிழில் ஆணவம் அல்லது கர்வம் அல்லது அகந்தை போன்ற அர்த்தங்களில் இந்த HAUGHTY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence He acted in a haughty manner that n

Know the word CROOKED...

படம்
Word of the day is CROOKED... Pronunciation /ˈkrʊk.ɪd/ Function The word CROOKED is an adjective. CROOKED என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.  Meaning முதலாவதாக It means not forming a straight line, or having many bends என்று சொல்லலாம் அதாவது நேர்கோடாக இல்லாத அல்லது பல வளைவுகள் கொண்ட என்று அர்த்தம். அதாவது ஒரு பொருள் நேராக இல்லாமல் வளைந்து இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த CROOKED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக நேராக இருக்க வேண்டிய ஒரு கோடானது வளைந்து நெளிந்து இருக்கும் பொழுது அந்த இடத்திலே CROOKED LINE  என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.  அதைப்போலவே அதிகமான வளைவுகளை கொண்ட ஒரு சாலையை குறிக்க CROOKED ROAD என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே நேராக இருக்க வேண்டிய பற்கள் வளைந்து குறுக்கு நெடுக்காக இருக்கும் பொழுது அந்த இடத்திலே CROOKED TEETH என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மொத்தத்தில் நேராக இருக்க வேண்டிய ஒரு பொருளானது வளைந்து நெளிந்து இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த CROOKED என்று இந்த வார்த்தையை பயன்படுத்

Know the word COMPLY...

படம்
Word of the day is COMPLY... Pronunciation /kəmˈplɑɪ/ Function The word COMPLY is a verb. Meaning It means to act according to an order, rule, or request என்று சொல்லலாம் அதாவது ஒரு உத்தரவு, விதி அல்லது ஒரு கோரிக்கையின்படி செயல்படுதல் என்று அர்த்தம். அதாவது நாம ஒரு நிறுவனத்துல வேலை செய்யும் பொழுது அந்த நிறுவனத்திற்கென்று சில சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருக்கும் எனவே அந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் அந்த நிறுவனத்திலே நாம் பணி புரிய முடியும்.  அதைப்போலவே நாம ஒரு இடத்திலே வசிக்கும் பொழுது அந்த இடத்திற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கும் மேலும் அந்த இடத்தின் உரிமையாளர் சில சட்ட திட்டங்களை நமக்கு கொடுத்திருப்பார் எனவே அதற்குட்பட்டு, அதற்கு கீழ்படிந்து தான் அந்த இடத்திலே வசிக்க முடியும்.    அதைப் போலவே ஒரு குடும்பம் என்று வரும் பொழுது அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் அங்கே இருப்பார்கள்.  இவ்வாறாக நாம்  வேலை செய்கின்ற இடத்தில் அல்லது வசிக்கின்ற இடத்தில் நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள அந்த சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஏற்று வ

Know the word CONDENSE...

படம்
Word of the day is CONDENSE... Pronunciation /kənˈdens/ Function The word CONDENSE is a verb. CONDENSE என்ற இந்த வார்த்தையை சுருக்குதல், குறைத்தல், அகற்றுதல் அல்லது மாற்றுதல் என்று வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக It means to reduce something, such as a speech or piece of writing, in length என்று சொல்லலாம் அதாவது நீளமாக இருக்கும் ஒரு பேச்சையோ அல்லது எழுத்தையோ சுருக்குதல் என்று அர்த்தம். அதாவது ஒரு மணி நேரம் பேச வேண்டும் என்று எழுதி வைத்திருந்த ஒரு உரையை 10 நிமிடத்திற்குள் பேச வேண்டும் என்று வரும் பொழுது அந்த மிக நீளமான உரையை 10 நிமிடத்திற்குள் பேசுவதற்கு ஏற்றார் போல் சுருக்குவது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். மேலும் இதே போலவே அதிகமாக இருக்கும் ஒரு பொருளின் எண்ணிக்கையை குறைத்தல் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம். அதாவது ஒருவரிடம் உடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது அதிலே தேவையற்றதை குறைத்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence I have asked him to condense his ten page of writing into one page. அவருடைய பத்துப் பக்க எழுத்தை ஒர

Know the word GRAVITY...

படம்
Word of the day is GRAVITY... Pronunciation /ˈɡræv.ə.t̬i/ Function The word GRAVITY can be used as noun and verb. Today we celebrate Teachers Day so I wish all the teachers, "A Happy Teacher's Day." இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையை ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான ஒரு நற்பண்பாக சொல்லலாம்... வாங்க பார்ப்போம்... Meaning இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். முதலாவதாக it refers to the gravitational attraction of the mass of the earth, the moon, or a planet for bodies at or near its surface என்று சொல்லலாம் அதாவது பூமியோ சந்திரனோ அல்லது ஒரு கோளோ அதற்கு மேலே உள்ள அல்லது அதற்கு அருகாமையில் உள்ள பொருட்களை ஈர்க்கக்கூடிய ஈர்ப்புசக்தி என்று அர்த்தம். அதாவது இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கோள்களின் ஈர்ப்பு விசையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கோளும் அதனை சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஈர்ப்பு விசையை பெற்றிருக்கிறது எனவே அந்த சுற்றளவிற்கு

Know the word HOLOCAUST...

படம்
Word of the day is HOLOCAUST... Pronunciation /ˈhɒl.ə.kɔːst/ Function The word HOLOCAUST can be used as noun and verb. இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது VERB ஆக பயன்படுத்தப்படுவதை விட அதிக அளவில் NOUN ஆகவே பயன்படுத்தப்படுகிறது.  Meaning HOLOCAUST என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் முதலாவதாக It refers to burnt offering என்று சொல்லலாம் அதாவது எரிபலி என்று அர்த்தம். அதாவது இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது பெருமளவில் யூத மக்கள் தங்களுடைய கடவுளுக்கு தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக மற்றும் நன்றி பலியாக விலங்குகளை அல்லது பறவைகளை எரிபலியாக பலியிடுதலை குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த அர்த்தத்தில் HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த அர்த்தத்தில் HOLOCAUST என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் எரிபலி என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.  இரண்டாவதாக இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது It refers to a destruction of people especially by fire in a large scale என

Know the word UNPRECEDENTED...

படம்
Word of the day is UNPRECEDENTED... Pronunciation /ʌnˈpres.ə.den.t̬ɪd/ Function The word UNPRECEDENTED is an adjective. Meaning It means never having happened or existed in the past என்று சொல்லலாம் அதாவது கடந்த காலத்தில் நடந்ததில்லை அல்லது இருந்ததில்லை என்று அர்த்தம். அதாவது ஏதாவதொன்று, அது மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கலாம் அல்லது மிகப்பெரிய சரிவாக இருக்கலாம். அந்த வளர்ச்சியோ அல்லது அந்த சரிவோ புதிதானதாக, இதற்கு முன்பு யாரும் கேள்விப்படாத அளவிற்கு அல்லது பார்க்காத அளவிற்கு அல்லது அனுபவிக்காத அளவிற்கு நடைபெறும் பொழுது அந்த இடத்தில் இந்த UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகமாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை ஒரு நிறுவனம் சந்திக்கும் பொழுது அந்த இடத்திலும் கூட UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் அதைப்போலவே இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு சாலை விபத்து அல்லது கொலை, கொள்ளை போன்

Know the word SCRUTINIZE...

படம்
Word of the day is SCRUTINIZE... Pronunciation /ˈskruː.t̬ən.aɪz/ Function The word SCRUTINIZE is a verb. Meaning It means to examine something closely and thoroughly என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை நெருக்கமாகவும் முழுமையாகவும் ஆராய்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! பொதுவாகவே இந்த INCOME TAX OFFICERS ஒருவருடைய கணக்கு வழக்குகளை சோதனை செய்யும் பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஒரு வரி கூட விடாமல் வாசித்து கொடுக்கப்பட்டிருக்கின்ற  கணக்கு வழக்குகள் மிகவும் சரியாக இருக்கிறதா என்று சோதித்து ஆராய்வார்கள். இவ்வாறாக ஆவணங்களை சோதித்து ஆராயும் பொழுது அந்த இடத்திலே இந்த SCRUTINIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதேபோலவே பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது தான் அணிந்திருக்கிற ஆடையை ஒழுங்காக அணிந்திருக்கிறோமா என்று தன்னைத்தானே கண்ணாடி முன்பு நன்கு சோதித்து பார்த்த பின்பு வெளியே செல்வார்கள். இந்த இடத்திலும் கூட இந்த SCRUTINIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக எதையாவதொன்றை நெருக்கமாகவும் முழுமையாகவும் சோதித்து ஆராயும் பொழுது இந்த SCRUTINIZE எ

Know the word PONDER...

படம்
Word of the day is PONDER... Pronunciation /ˈpɒn.dər/ Function The word PONDER is a verb. Meaning It means to think deeply on a subject என்று சொல்லலாம் அதாவது ஒரு விஷயத்தை ஆழமாக சிந்தித்தல்  என்று அர்த்தம். அதாவது ஏதாவதொரு முக்கியமான விஷயத்தை குறித்து ஒரு முடிவை எடுக்கும் பொழுது அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரம் செலவு செய்து, அந்த விஷயத்தை சார்ந்த கருத்துக்களை மிகவும் ஆழமாக சிந்தித்து, அந்த முடிவை மிகவும் கவனமாக தேர்வு செய்யும் இடத்தில் இந்த PONDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். பொறுமை கடலினும் பெரிது என்ற பழமொழிக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது அதற்கென ஒரு நேரம் செலவு செய்து ஆழமாக சிந்தித்து அந்த முடிவை எடுக்கும் பொழுது அந்த முடிவானது மிகவும் தரமானதாகவும் மிகவும் சிறந்ததாகவும் இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. எனவே தமிழில் இந்த PONDER என்ற இந்த வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்தல் அல்லது ஆழ்ந்து யோசித்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். In a sentence She spent a lot of time to ponder the issue. அவள் பி