இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word AUDACIOUS...

படம்
Word of the day is AUDACIOUS... Function The word AUDACIOUS is an adjective. Meaning showing a willingness to take surprisingly bold risks அதாவது வியக்கத்தக்க தைரியமான முடிவுகளை எடுக்க விருப்பம் காட்டுதல் என்று அர்த்தம். அதாவது ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் அதற்கென்று உரிய பழக்கவழக்கம் என்று ஒன்று உண்டு. அந்த பழக்கவழக்கத்திற்கு மாறாக எல்லோரும் வியக்கத்தக்க ஆச்சரியமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் பொழுது இந்த AUDACIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் வேலைக்கு சென்று சம்பாதித்து வருவதும் பெண்ணானவள் வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதும் ஒரு வழக்கமான செயல் ஆனால் அந்த செயல் அப்படியே மாறி பெண்ணானவள் வீட்டிற்கு வெளியே சென்று வேலை பார்த்து வருவதும் ஆணானவன் வீட்டு வேலையை செய்வதுமாக ஒரு முடிவு செய்து செயல்படுத்தும் பொழுது அது வழக்கத்திற்கு மாறான எல்லோரும் வியக்கத்தக்க ஒரு செயல் இவ்வாறாக வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் வியக்கத்தக்க ஆச்சரியமான முடிவை எடுத்து செயல்படுத்தும் பொழுது அதனை ஒரு audacious decision என்று சொல்லலாம். எனவே நண்பர்களே au

Know the word REGURGITATE...

படம்
Word of the day is REGURGITATE... Function The word REGURGITATE is a verb. Two Meanings 1) to bring swallowed food up again to the mouth அதாவது விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருதல் என்று அர்த்தம். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் தான் விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருவது என்பது எல்லோரையும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு செயலாகும் ஆனால் அதே நேரத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் பார்வையில் இந்த செயல் மிகவும் ஒரு முக்கியமான செயலாகும் ஏனெனில் இந்த வகையில்தான் சில விலங்குகள் அசை போடுகின்றன மேலும் பல பறவைகள் தங்களுடைய குஞ்சுகளுக்கு உணவு வழங்குகின்றன. எனவே நண்பர்களே! இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது REGURGITATE என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து FOOD என்ற வார்த்தை வர வேண்டும். எனவே தமிழில் சொல்லும் பொழுது விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருதல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence Many birds regurgitate food to feed their small ones. பல பறவைகள் தங்கள் சிறிய பறவைகளுக்கு உணவளிப்பதற்காக விழுங்கிய உணவை மீ

Know the word STRIFE...

படம்
Word of the day is STRIFE... Function The word STRIFE is a noun. Meaning bitter conflict with heated dissension அதாவது ஆக்ரோஷமான கருத்துவேறுபாடுடன் கூடிய ஒரு கசப்பான மோதல் என்று அர்த்தம். அதாவது இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற ஒரு சாதாரண கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் போது அது ஒரு மிகப் பெரிய கலவரமாக வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறாக இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற ஒரு கருத்து வேறுபாடு மிகப் பெரிய கலவரமாக மாறும் பொழுது அல்லது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும்பொழுது அல்லது மிகப்பெரிய சச்சரவாக மாறும்பொழுது அந்த கலவரத்தை அல்லது அந்த பிரச்சனையை அல்லது அந்த சச்சரவை strife என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம். தமிழில் பிரச்சனை அல்லது சச்சரவு அல்லது கலவரம் போன்ற அர்த்தங்களில் இந்த STRIFE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence It is hard to find a solution for a communal strife. வகுப்புவாத கலவரத்திற்கு தீர்வு காண்பது கடினம். Practice it எனவே நண்பர்களே! தமிழில் பிரச்சனை, சச்சரவு அல்லது கலவ

Know the word RESENTMENT...

படம்
Word of the day is RESENTMENT... Function The word RESENTMENT is a noun Meaning 1) a feeling of anger because you have been forced to accept something that you do not like அதாவது நீங்கள் விரும்பாத ஒன்றை ஏற்றுக்கொள்ள நீங்கள் கட்டாயப்படுத்தபடும் பொழுது ஏற்படும் கோபம் என்று அர்த்தம். பொதுவாக நமக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நமது கண்ணெதிரே நடைபெறும் பொழுது ஒரு மனிதனாக இருந்தால் கண்டிப்பாக கோபம் என்று ஒன்று வரும் ஆனால் அதனை விட்டு மிகவும் எளிதாக வெளியே வரவும் முடியும். resentment என்ற இந்த வார்த்தையானது கோபத்தை குறிக்கிறது ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யும்படி உங்கள் மீது திணிக்கப்படும் பொழுது ஏற்படுகின்ற அந்தக் கோபத்தை குறிக்கிறது. மேலும் resentment என்ற இந்த வகை கோபமானது பல வருடங்களாக ஒரு மனிதனுக்குள் நீடித்துக் கொண்டிருக்கும் ஒரு வகை கோபத்தை குறிக்கிறது. இந்த resentment என்ற இந்த வகையான கோபமானது ஆழமாக வேரூன்றியிருக்கும் மரத்தைப் போன்றது எளிதில் பிடுங்கி எறிந்து விட முடியாது ஒரு சாதாரண misunderstanding கூட ஒரு மிகப்பெரிய பல நாள் resentment போன்ற கோபத

Know the word HARBOR or HARBOUR...

படம்
Word of the day is HARBOUR... Function The word HARBOUR can be used as verb and noun Meaning as a noun a sheltered port where ships can take on or discharge cargo அதாவது கப்பல்கள் பாதுகாப்பாக சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இடம் என்று அர்த்தம். அதாவது மிகவும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக வணிகம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் என்று சொல்லலாம் இதைத்தான் நாம் தமிழில் துறைமுகம் என்று அழைக்கிறோம். எனவே harbour என்ற இந்த வார்த்தையானது noun ஆக பயன்படுத்தப்படும் பொழுது துறைமுகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். In a sentence I spent this evening in the harbour with my friends. நான் இன்றைய மாலை பொழுதை எனது நண்பர்களுடன் துறைமுகத்தில் கழித்தேன். Meaning as a verb 1) to shelter or hide a wanted person அதாவது தேடப்படும் ஒரு நபருக்கு அடைக்கலம் தருதல் அல்லது மறைத்து வைத்தல் என்று அர்த்தம். அதாவது ஒரு நபர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அந்த நபரை காவல்துறை தேடிக்கொண்டிருக்கும் பொழுது அந்த நபரை காப்பாற்றுவதற்காக ஒருவர் தனது வீட்டிலோ அ

Know the word MOOR...

படம்
Word of the day is MOOR... Function The word MOOR can be used as verb and noun Meaning as a verb 1) to attach a boat or ship to something on the land or to the surface under the water to keep it in place அதாவது ஒரு விசைப்படகோ அல்லது கப்பலோ நிலையாக இருப்பதற்காக நிலத்திலோ அல்லது நீருக்கு அடியில் உள்ள மேற்பரப்பிலோ பொருத்துவது என்று அர்த்தம். பொதுவாக கரையில் கொண்டு வந்து நிறுத்தி வைக்க முடியாத பெரிய வகை கப்பல்கள் போன்ற விசைப்படகுகளை கடலிலேயே நிறுத்தி வைத்து பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும். அவ்வாறாக கடலிலேயே கப்பல்கள் போன்ற விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும் பொழுது moor என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தமிழில் நிறுத்தி வைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence The ship is waiting to be moored in the harbour. துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்காக கப்பல் காத்திருக்கிறது. Meaning as a noun a member of the group of Muslim people from North Africa who ruled Spain from 711 to 1492 அதாவது 711 முதல் 1492 வரை ஸ்பெயினை ஆட்சி செய்த வட

Know the word CONVENE...

படம்
Word of the day is CONVENE... Function The word CONVENE is a verb. Meanings 1) to meet formally அதாவது முறைப்படி சந்தித்தல் என்று அர்த்தம். அதாவது ஒரு நிர்வாகம் தங்களுக்கு கீழே பணிபுரியும் பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கூட்டமாக கூட்டும்பொழுது அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் தனக்குக் கீழே பணிபுரியும் பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கூட்டமாக கூட்டும்பொழுது convene என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒருவர் தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக முறைப்படி சந்திப்பதற்காக ஒரு கூட்டமாக கூட்டும்பொழுது convene என்ற இந்த வார்த்தையை கூட்டமாக கூட்டுதல் அல்லது கூட்டுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence The management convened the teachers to discuss the issue. பிரச்னையைக் குறித்து ஆலோசிக்க ஆசிரியர்களை நிர்வாகம் கூட்டமாக கூட்டியது. The teachers were convened in the meeting hall. ஆசிரியர்கள் கூட்ட அரங்கில் கூட்டப்பட்டனர். Practice it இவ்வாறாக ஒருவர் தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களை ஒரு குறிப்பிட்ட காரண

Know the word TARNISHED...

படம்
Word of the day is TARNISHED... Function The word TARNISHED is an adjective. Meaning 1) to become less bright அதாவது பிரகாசம் குறைந்துவிடுதல் என்று அர்த்தம். பொதுவாக புத்தம் புதிதாக இருக்கும் ஒரு பொருளானது அதிக பொலிவை கொண்டதாக இருக்கும், பிறரது கண்களை கவரக் கூடியதாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பக் கூடியதாக இருக்கும். ஆனால் அந்த பொருளானது நாளுக்கு நாள் அதனுடைய பொலிவை இழப்பது என்பது இயற்கையான ஒரு விஷயமாகும். இவ்வாறாக ஒரு பொருளானது அதனுடைய பொலிவை இழக்கும் பொழுது இந்த tarnished என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இது போன்றே ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ அதனுடைய நல்ல பெயரை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அது அதனுடைய தவறான செயல்களால் இருக்கலாம் அல்லது அதன் மீது பிறர் கொண்ட பொறாமையினாலும் இருக்கலாம். இவ்வாறாக ஒரு பொருளானது அதனுடைய பொலிவை இழக்கும் பொழுது பொலிவு இழந்த அல்லது பொலிவு மங்கிய என்ற அர்த்தத்தில் tarnished என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் அதே வேளையில் ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ அதனுடைய நல்ல பெயரை இழக்கும் பொழுது கெட்டுவிட்டது அல்லது களங்கப்பட்டது என்

Know the word LUSTER...

படம்
Word of the day is LUSTER... Function The word LUSTER is a noun. Two Meanings முதலாவதாக 1) the brightness that a shiny surface has அதாவது ஒரு பளபளப்பான மேற்பரப்பு கொண்டிருக்கும் பிரகாசம் என்று அர்த்தம். அதாவது ஒரு பொருளின் மீது ஒளியானது படும் பொழுது அந்த பொருளானது அந்த ஒளியை பிரதிபலிக்க உகந்ததாக இருக்கும் பொழுது அந்த பொருளை பளபளக்கிறது என்று சொல்லுவோம். பொதுவாக ஒரு பொருளானது புதிதாக இருக்கும்பொழுது அது ஒளியை பிரதிபலித்து பளபளப்பாக இருக்கும் மேலும் எல்லோரையும் கவரக் கூடியதாகவும் இருக்கும். எனவே நண்பர்களே! மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் பளபளப்பு என்று சொல்லும் இடத்தில் இந்த luster என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence He polished the wooden chair to restore its luster. மர நாற்காலியின் பளபளப்பை மீட்டெடுக்க அவர் அதை மெருகூட்டினார். இரண்டாவதாக 2) a very special, attractive quality that people admire அதாவது மக்கள் போற்றும் ஒரு சிறப்பான, கவர்ச்சிகரமான தரம் என்று அர்த்தம். அதாவது ஒரு விஷயம் ஒரு மனிதனின் ஆளுமைக்கோ அல்லது ஒரு பொருளுக்கோ அல்லது ஒரு இடத்திற்கோ

Know the word STRIDE...

படம்
Word of the day is STRIDE... Function The word STRIDE can be used as verb and noun Meaning 1) a decisive long step அதாவது நன்கு திட்டமிட்டு எடுத்து வைக்கப்படுகிற ஒரு நீளமான அடி என்று அர்த்தம். அதாவது STRIDE என்ற இந்த வார்த்தையானது சாதாரணமாக ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை விரைவாக அடைவதற்காக பெரிய பெரிய அடிகளை எடுத்து வைத்து அந்த இடத்தை அடைதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். மேலும் ஒருவர் தனது வாழ்கையில் முன்னேறுவதற்காக, படிப்பில் முன்னேறுவதற்காக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக அல்லது அவர் செய்து கொண்டிருக்கின்ற ஒரு வேலையில் முன்னேறுவதற்காக  திட்டமிட்டு எடுத்து வைக்கிற ஒரு தீர்கமான மிகப்பெரிய முடிவு (long step) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம்.  அதாவது தமிழில் அகலக்கால் எடுத்து வைத்தல் என்று சொல்லுவோம் ஆனால் அகலக்கால் எடுத்து வைத்தல் என்பதை நெகட்டிவ் அர்த்தத்தில்தான் பயன்படுத்துவோம் ஆனால் இங்கே இந்த இடத்துல அந்த அகலக்கால் எடுத்து வைத்து பாசிட்டிவாக அமைந்தால் என்ன ஆகுமோ அந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். In a sentence I only need few strides to reach my

Know the word TOPPLE...

படம்
Word of the day is TOPPLE... Function The word TOPPLE is a verb. Meaning 1) to overturn something அதாவது எதையாவதொன்றை கவழ்த்தல் என்று அர்த்தம் அதாவது ஒரு பொருளோ அல்லது ஒரு கட்டிடமோ தானாகவோ அல்லது பிறராலோ, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கீழே விழும்பொழுது topple என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். மிகவும் எளிதாக இந்த வார்த்தையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த topple என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படும் பொழுது ஏதோ ஒன்று கீழே கவிழ்ந்து கிடக்கிறது என்று அர்த்தம். எனவே நண்பர்களே! தமிழில் கவிழ்தல், கவிழ்த்து போடுதல் கவிழ்த்தல் போன்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். In a sentence Earthquake toppled the building. நிலநடுக்கம் கட்டிடத்தை கவிழ்த்து போட்டது. Former government was toppled by the people. முந்தைய அரசாங்கமானது மக்களால் கவிழ்க்கப்பட்டது. Practice it எனவே நண்பர்களே! தமிழில் கவிழ்தல், கவிழ்த்து போடுதல் கவிழ்த்தல் போன்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க

Know the word MORSEL...

படம்
Word of the day is MORSEL... Function The word MORSEL is a noun. Meaning a small piece of or amount of food or anything அதாவது ஒரு சிறிய துண்டு உணவு அல்லது ஒரு சிறிய அளவு உணவு அல்லது ஒரு சிறிய அளவில் ஏதாவது என்று அர்த்தம். அதாவது ஆரம்ப காலகட்டத்தில் இந்த morsel என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒரு சிறிய துண்டு அல்லது ஒரு சிறிய அளவு உணவை குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்காலத்தில் இந்த morsel என்ற இந்த வார்த்தையானது உணவை குறிப்பதற்காக மட்டுமல்லாமல் சிறிய அளவில் ஏதாவது ஒன்றை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. morsel என்ற இந்த வார்த்தையானது தனியாக பயன்படுத்தப்படும் பொழுது  நேரடியாகவே சிறிய அளவு உணவை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக The hostel boys ate every last morsel on their plate. விடுதி மாணவர்கள் தட்டில் இருந்த ஒவ்வொரு சாதத்தையும் சாப்பிட்டார்கள். அதாவது விடுதி மாணவர்கள் ஒரு பொட்டு சோறு கூட விடாமல் சாப்பிட்டார்கள் அல்லது ஒரு சிறிய துண்டு அல்லது சிறிய அளவு சோறு கூட விடாமல் சாப்பிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் அதேநேரத்தில் morsel என்ற இந்த வார்த்தையானது உ

Know the word RAD...

படம்
Word of the day is RAD... Function The word RAD is an adjective. Meaning 1) extremely exciting or good அதாவது ரொம்ப உற்சாகமான அல்லது ரொம்ப அருமையான என்று அர்த்தம். அதாவது உங்களுக்கு கிடைத்த ஒரு அனுபவம் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியையோ அல்லது உற்சாகத்தையோ தரும்பொழுது அந்த அனுபவத்தை ரொம்ப அருமையான ஒரு அனுபவம் அல்லது ரொம்ப உற்சாகமாக இருந்தது என்று சொல்லுவோம் அந்த இடத்துல இந்த RAD ங்ற வார்த்தையை பயன்படுத்தலாம். ஒரு அருமையான உல்லாசப்பயணத்தை நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு அனுபவித்து விட்டு திரும்பி வரும்பொழுது அந்த பயணத்தின் முடிவில் ரொம்ப அருமையா இருந்துச்சு என்று நீங்கள் உணர்ந்தால் அந்த உல்லாச பயணத்தை That was a rad picnic என்று சொல்லலாம். நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திய ஒரு படத்தை பார்த்து விட்டு வரும் பொழுது அந்தப்படத்தை That was a rad movie என்று சொல்லலாம். கடைசி நிமிடம் வரை முடிவு தெரியாமல் ஆர்வத்தோடு பார்த்து விட்டு வந்த ஒரு போட்டியை (cricket match, football match etc) பற்றி பேசும்பொழுது That was a rad match என்று சொல்லலாம். Practice

Know the word LAVISH...

படம்
Word of the day is LAVISH... Function The word LAVISH is an adjective. Meaning 1) spending, giving, or using more than is necessary or reasonable அதாவது தேவையானதை விட அல்லது நியாயமானதை விட அதிகமாக செலவு செய்தல், கொடுத்தல் அல்லது பயன்படுத்துதல் என்று அர்த்தம். பொதுவாக ஒரு கருத்து சொல்லுவாங்க அதாவது 50 ரூபாய் கைகடிகாரமாக இருந்தாலும் சரி 50000 ரூபாய் கைக்கடிகாரமாக இருந்தாலும் சரி ஒரே நேரத்தை தான் காட்டும் என்று. அதாவது இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ஒருவருடைய செலவு என்பது அவருடைய வருவாய்க்கு உள்ளுக்குள்ளதான் இருக்க வேண்டும் அப்படிங்கறதுதான். ஒருவர் ஒருவருடைய சம்பாத்தியத்தை விட அதிகமாக செலவு செய்தாலோ அல்லது அவரை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்கி கொடுத்தாலோ அல்லது அவரே அவரது சம்பாத்தியத்தை விட அதிக செலவு செய்து ஒரு பொருளை வாங்கி பயன்படுத்தினாலோ அது தேவையற்றதாக அல்லது நியாயமற்றதாக கருதப்படும். அந்த இடத்தில்தான் ஆடம்பரம் என்ற தமிழ் அர்த்தத்தில் LAVISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence He gave a lavish gift to his lady love. அவர் தனது காதலிக்கு ஆடம்பரம

Know the word KNOBBLY...

படம்
Word of the day is KNOBBLY... Function The word KNOBBLY is an adjective. Meaning 1) having raised areas like lumps on the surface அதாவது மேற்பரப்பில் கட்டிகள் போன்ற உயர்ந்த பகுதிகளை பெற்றிருத்தல் என்று அர்த்தம். பொதுவாக ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது ஒரு இடமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு உயிரினமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிற்கும் அதற்கென்று ஒரு உருவம் என்று ஒன்று உள்ளது. அவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு உயிரினமோ ஒழுங்கற்ற உருவத்தை பெற்றிருக்கும் பொழுது அதிலும் சிறந்த விதமாக இங்குமங்குமாக வீங்கி கொண்டிருந்தால் இந்த knobbly என்ற இந்த adjective ஐ பயன்படுத்தி அதனை விவரிக்கலாம். காய்கறிகளில் உருளைக்கிழங்கானது அனேக நேரங்களில் இவ்வாறாக ஒழுங்கற்ற உருவத்தை பெற்றிருக்கும் அதனை knobbly potatoes என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சமதளமாக இருக்க வேண்டிய ஒரு சாலையானது இங்கும் அங்குமாக மேடாக இருந்தால் அதனை நாம் Knobbly road என்று வரையருக்கலாம். அதைப்போலவே சமதளமாக இருக்க வேண்டிய ஒரு விளையாட்டு மைதானம் இங்குமங்குமாக மேடு மேடாக இருந்தால் அதனை knobbly field என்று சொல்லலாம். I

Know the word IMPOSE...

படம்
Word of the day is IMPOSE... Function The word IMPOSE is a verb. Meaning 1) to officially force a rule, tax, punishment, etc. to be obeyed or received அதாவது அதிகாரப்பூர்வமாக ஒரு விதி, வரி, தண்டனை போன்றவற்றைக் கடைப்பிடிக்க அல்லது பெற வைப்பது என்று அர்த்தம். அதாவது மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவருக்கு பிடிக்காத ஒன்றை அவரை செய்ய வைப்பது என்று சொல்லலாம். பொதுவாக அரசாங்கம் மக்கள் மீது அரசாங்கத்தை அமைதியாக நடத்துவதற்காக, பொருளாதார சிக்கல் இல்லாமல் இருப்பதற்காக வரிகள் விதிப்பதும் சட்டங்கள் இயற்றுவதும் அவசியமானதாகும் ஆனால் அதே நேரத்தில் அந்த வரியோ அல்லது அந்த சட்டமோ அளவுக்கு அதிகமாக ஏற்றுக்கொள்ளாதபடி இருக்கும் பொழுது அந்த சட்டமும் அந்த வரியும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறாக ஒருவர் மீது ஒரு சட்டமோ அல்லது வரியை அல்லது தண்டனையோ சரியான காரணமில்லாமல் கடைபிடிக்க வைக்கப்படும்போது imposeங்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தமிழில் திணித்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence Do not impose on others what you your

Know the word VANISH...

படம்
Word of the day is VANISH... Function The word VANISH is a verb. Meaning 1) to disappear or stop being present especially in a sudden and surprising way அதாவது திடீரென ஆச்சரியமான முறையில் மறைந்துவிடுவது அல்லது இல்லாமல் போவது என்று அர்த்தம். அதாவது ஒரு பொருளோ அல்லது ஒரு நபரோ கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருக்கின்ற சில நொடிகளில் காணாமல் போகும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கார் விரைவில் கண்ணிலிருந்து மறைந்து விடும். ஃப்ரிட்ஜில் இருக்கும் எல்லோருக்கும் பிடித்த கடைசி துண்டு கேக் ஆச்சரியமான முறையில் காணாமல் போய்விடும். வீட்டுக்கு போக துடித்துக் கொண்டிருக்கும் பள்ளி மாணவி பெல் அடித்ததும் காணாமல் போய் விடுவாள். பூனையை பார்த்த எலி சடாரென்று காணாமல் போய்விடும். இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு நபரோ கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருக்கின்ற சில நொடிகளில் காணாமல் போகும் பொழுது VANISHங்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். தமிழில் சடார்னு காணாமல் போகுதல் அல்லது மறைந்துவிடுதல் அப்படிங்கற இடத்தில vanish ங்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence The th

Know the word UPHOLD...

படம்
Word of the day is UPHOLD... Function The word UPHOLD is a verb. Meaning to defend or keep a principle or law, or to say that a decision that has already been made, especially a legal one, is correct அதாவது ஒரு கொள்கை அல்லது சட்டத்தை பாதுகாப்பது அல்லது கடைப்பிடிப்பது அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவு அதாவது சட்டமானது சரியானது என்று கூறுவது என்று அர்த்தம். மிகவும் எளிதாக இந்த வார்த்தையை விளக்க வேண்டுமென்றால் இந்த uphold என்ற இந்த வார்த்தையை பெரும்பாலும் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கும் பொழுது ஆதரவு தெரிவித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் மேலும் காவல் அதிகாரிகள் சட்டத்தை நிலைநாட்டும் பொழுது நிலைநிறுத்துதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும். பொதுவாக அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றும் பொழுது அந்த சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் கிளர்ந்தெழும் பொழுது அந்த சட்டத்தை நிலைநாட்டுவதற்காக காவல் அதிகாரிகள் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதுதான் காவல் அதிகாரிகளினுடைய வேலை. அரசாங்கம் இயற்றிய அந்த சட்டமானது அந்த காவல் அதிகாரிக்கு  கூட பிடிக்காமல் இருக்கலாம்

Know the word BANISH...

படம்
Word of the day is BANISH... Function The word BANISH is a verb. Two Meanings 1) to send someone away, especially from their country or from a group or community அதாவது ஒருவரை அவரது நாட்டிலிருந்து அல்லது ஒரு குழு அல்லது சமூகத்திலிருந்து அனுப்பிவிடுவது என்று அர்த்தம். அதாவது சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அந்த நாட்டிலிருந்து அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டிற்கு அல்லது மற்றொரு இடத்திற்கு  அனுப்பி வைப்பது என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் ஒருவரை அவர் சார்ந்த ஒரு குழுவிலிருந்தோ அல்லது சமூகத்திலிருந்தோ தண்டனை கொடுக்கும் விதமாக ஒதுக்கி வைக்கும் பொழுதும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். வெளியேற்றுதல், அனுப்பி வைத்தல் அல்லது ஒதுக்கி வைத்தல் போன்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence  He was banished from India by the government. அவர் இந்தியாவிலிருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டார். He is banished from the team for his misbehavior. அவரது தவறான நடத்தைக்காக அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 2) t

Know the word ALLUSIVE...

படம்
Word of the day is ALLUSIVE... Function The word ALLUSIVE is an adjective. Two Meanings 1) characterized by indirect references அதாவது மறைமுக குறிப்புகளால் வகைப்படுத்தப்படுதல் என்று அர்த்தம். அதாவது ஒருவர் அவர் சொல்ல வருகின்ற கருத்தை அல்லது விஷயத்தை நேரடியான முறையில் சொல்லாமல் மறைமுகமாக சொல்லும்பொழுது இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் கவிதைகள் மறைமுக கருத்துக்களை கொண்டதாக இருக்கிறது அதேபோன்று சிலரது கட்டுரைகளும் கதைகளும் மறைமுக கருத்துக்களை கொண்டதாக இருக்கும். நவீன காலத்தில் நடனங்கள் கூட மறைமுக கருத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறாக மறைமுக கருத்துக்களோடு பேசுவது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.  ஒருவர் இவ்வாறாக மறைமுகமாக பேசுவது உங்களுக்கு பிடித்தது என்றால் சுவாரசியமாக பேசுகிறார் என்று நேர்மறையாக எடுத்துக் கொள்ளலாம் அதே நேரத்தில் ஒருவர் இவ்வாறாக பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஜாடையாக பேசுகிறார் என்று எதிர்மறையாக குறிப்பிடலாம். சுவாரசியமாக அல்லது ஜாடையாக   போன்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம

Know the word EXUBERANT...

படம்
Word of the day is EXUBERANT... Function The word EXUBERANT is an adjective. Two Meanings feeling really happy and enthusiastic அதாவது ரொம்ப மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்தல் என்று அர்த்தம். அதாவது நீங்க உங்களுக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை குறித்தோ அல்லது அனுபவத்தை குறித்தோ மிக்க மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணரும்போது exuberant என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். ரொம்ப மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence She is exuberant as she is pregnant. அவள் கர்ப்பமாக இருப்பதால் ரொம்ப மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறாள். 2) இரண்டாவதாக exuberant என்ற இந்த வார்த்தையை to grow in extreme abundance அதாவது அதீத வளர்ச்சி அல்லது ஏராளமான  விளைச்சல் என்று அர்த்தத்தில் பயன்படுத்தலாம். அதாவது ஒரு செடியானது வேகமாக வளரும் பொழுது The plant is exuberant என்று சொல்லலாம் அதை போல ஒரு மரமானது ஏராளமான காய்களை, கனிகளை விளைவிக்கும் போது அங்கேயும் The tree is exuberant என்று சொல்லலாம். Practice it மேற்கூறிய அர்த்தத்தில் இந்த EXUBERANT

Know the word CONSUME...

படம்
Word of the day is CONSUME... Function The word CONSUME is a verb. Three Meanings 1) to use fuel, energy, or time, especially in large amounts அதாவது எரிபொருள், ஆற்றல் அல்லது நேரம் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்துதல் என்று அர்த்தம் பொதுவாக இயற்கையிலிருந்து பெறப்படுகின்ற வளங்கள் சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒரு பொது நீதி என்று சொல்லலாம். ஆனால் அவை சில பல காரணங்களால் அளவுக்கு அதிகமாக உபயோகிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் நாம் தமிழில் உட்கொள்ளுதல் அல்லது தின்னுதல் அல்லது குடித்தல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். அந்த இடத்தில் நாம் இந்த consume என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இதனை வைத்து நாம் சில வாக்கியங்கள் பார்ப்போம் உங்களுக்கு புரியும். In a sentence This car consumes lot of petrol. இந்த காரானது அதிக பெட்ரோலை உட்கொள்கிறது அல்லது இந்த காரானது பெட்ரோலை அளவுக்கதிகமாக தின்னுகிறது. This car consumes petrol like water. இந்த காரானது பெட்ரோலை தண்ணி போல  குடிக்கிறது. I have to sell this motor because it consumes lot of elect

Know the word FRANKLY...

படம்
Word of the day is FRANKLY... Function The word FRANKLY is an adverb. Meaning in an honest and direct way அதாவது நேர்மையான மற்றும் நேரடியான முறையில் என்று அர்த்தத்தம். அதாவது ஒருவர் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு விஷயத்தை பற்றியோ அல்லது அவரது அனுபவத்தை பற்றியோ உண்மையாக வெளிப்படையாக முகத்துக்கு நேராக சொல்லும் பொழுது frankly என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். வெளிப்படையாக என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence She spoke frankly about her experience in politics. அவர் அரசியலில் அவரது அனுபவத்தை பற்றி வெளிப்படையாகப் பேசினார். Practice it வெளிப்படையாக என்ற அர்த்தத்தில் இந்த FRANKLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் ஒரு வாக்கியம் எழுத சொல்லுங்க...

Know the word APPARENTLY...

படம்
Word of the day is APPARENTLY... Function The word APPARENTLY is an adverb. Two meanings 1) used to say what you have read or been told something although you are not certain it is true  அதாவது நீங்க படித்ததின் அடிப்படையிலேயோ அல்லது கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயோ உண்மை என்று உறுதியாக தெரியாத பொழுதும் அதனை பற்றி பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம். அதாவது எடுத்துக்காட்டாக இன்றைக்கு மழை வரும் என்று நாம் படித்திருப்போம் அல்லது யாராவது நமக்கு சொல்லி இருப்பார்கள் அது உண்மை என்று உறுதியாக தெரியாத போதும் அதனைப் பற்றி பேசும்பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence Apparently it is going to rain today. இன்று மழை பெய்யும் என்று தெரிகிறது. 2) used when the real situation is different from what you thought it was அதாவது நீங்கள் நினைத்ததை விட உண்மையான சூழ்நிலை வேறுபட்டால் என்று அர்த்தம். அதாவது ஒருவரை பார்க்கும்போது அவர் நல்லவர் போல தெரியலாம் ஆனால் உண்மை வேறு விதமாக  இருக்கும் அதைப்போல ஒருவரைப் பார்க்கும் பொழுது அவள் இளம் வயதுக்காரர் போல தெரியலாம் ஆனால் உண்மை வ

Know the word FORSAKE...

படம்
Word of the day is FORSAKE... Function The word FORSAKE is a verb. Two Meanings 1) to leave someone for ever, especially when they need you ஒருவர் உங்களது தேவையில் இருக்கும் பொழுது அவரை என்றென்றும் விட்டுச் செல்லுதல். அதாவது நமது நெருங்கிய உறவுகளான நமது பெற்றோர்கள், நமது உடன்பிறப்புக்கள், நமது உறவினர்கள், நமது நண்பர்கள், நம்மோடு இணைந்து பணிபுரியும் சக ஊழியர்கள் நமது உதவியை நாடி இருக்கும்பொழுது அவர்களை கைவிடுதல் என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக கைவிடுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence He forsook his parents in their old age. அவன் அவனது பெற்றோரை அவர்களது வயதான காலத்தில் கைவிட்டான். 2) to stop doing or having something அதாவது எதையாவது செய்வதை அல்லது வைத்திருப்பதை நிறுத்துதல் அதாவது ரொம்ப காலமாக செய்து கொண்டிருந்த ஒரு செயலை அல்லது பழக்கத்தை மேலும் ரொம்ப காலமாக பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு பொருளை பயன்படுத்தாமல் நிறுத்துதல் அல்லது கைவிடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். இவ்வாறாக நிறுத்துதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்

Know the word PROFUSELY...

படம்
Word of the day is PROFUSELY... Function The word PROFUSELY is an adverb. Meaning in large amounts அதாவது மிக அதிக அளவில் என்று அர்த்தத்தம். அதாவது ஒரு விஷயம் அளவுக்கு அதிகமாக நடைபெறும் பொழுது அந்த இடத்திலே இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். மிகவும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் *excessively* என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடத்தில் அந்த வார்த்தைக்கு பதிலாக இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக அல்லது மிகுதியாக என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence 1) He sweats profusely. அவனுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது. அவனுக்கு வியர்த்து கொட்டுகிறது. 2) He talks profusely. அவன் அளவுக்கதிகமாக பேசுகிறான். 3) Though she apologized profusely, the management did not forgive her. அவள் அளவுக்கதிகமாகவே மன்னிப்பு கேட்டபொழுதும், நிர்வாகம் அவளை மன்னிக்கவில்லை. Practice it அளவுக்கு அதிகமாக அல்லது மிகுதியாக என்ற அர்த்தத்தில் இந்த PROFUSELY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க

Know the word FORMIDABLE...

படம்
Word of the day is FORMIDABLE... Function The word FORMIDABLE is an adjective. Meaning extremely impressive in strength or excellence அதாவது சிறந்து விளங்குவதன் மூலமாக அல்லது வலிமையாக இருப்பதன் மூலமாக அதிகப்படியாக ஈர்க்கக்கூடிய என்று அர்த்தம். அதாவது ஒருவர் படித்திருக்கும் படிப்பு நிமித்தமாக அல்லது அவரது அறிவுக்கூர்மையால் அல்லது அவங்க வகிக்கிற பொறுப்பு அல்லது பதவியின் நிமித்தமாக பிறருக்கு ஆச்சரியத்தை, மரியாதையை அல்லது பயத்தை ஏற்படுத்தினால் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். வலிமையான அல்லது பயங்கரமான என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence He is a formidable bodyguard. அவர் ஒரு வலிமையான மெய்க்காப்பாளர். She is a formidable opponent. அவள் ஒரு வலிமையான எதிரி. Practice it வலிமையான அல்லது பயங்கரமான அப்டிங்ற இடத்தில இந்த FORMIDABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

Know the word DISTRAUGHT...

படம்
Word of the day is DISTRAUGHT... Function The word DISTRAUGHT is an adjective. Meaning extremely worried, nervous, or upset அதாவது கவலை, பதட்டம் அல்லது வருத்தம் ஆகியவற்றின் உச்சம் என்று அர்த்தம். அதாவது வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து அல்லது ஏமாற்றத்தை சந்தித்து அல்லது இழப்பை சந்தித்து தனிமையில் விடப்பட்ட நிலையில் வாழ்க்கையே வெறுத்து நொந்துபோய் இருக்கும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். மிகவும் மனமுடைந்திருத்தல் அல்லது மிகவும் நொருங்கிபோயிருத்தல் அல்லது மிகவும் நொந்துபோயிருத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence She is distraught at the loss of her husband. கணவனை இழந்ததால் அவள் மிகவும் மனமுடைந்து இருக்கிறாள். Practice it மிகவும் மனமுடைந்திருத்தல் அல்லது மிகவும் நொருங்கிபோயிருத்தல் அல்லது மிகவும் நொந்துபோயிருத்தல் என்ற அர்த்தத்தில் இந்த DISTRAUGHT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

Know the word DESERVE...

படம்
Word of the day is DESERVE... Function The word DESERVE is a verb. Meaning to be worthy of as a result of past actions அதாவது கடந்த கால செயல்களின் விளைவாக தகுதியாகுதல் என்று அர்த்தத்தம். நமது நிகழ் காலமானது நமது கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது ஒரு பொதுவான கருத்து. அதுபோலவே நாம் நல்ல செயல்கள் பல செய்திருந்தால் நன்மையான அனுகூலங்களை பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே தரமற்ற செயல்களை, கீழ்த்தரமான செயல்களை செய்திருந்தால் அதனுடைய விளைவை அனுபவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது அதுபோலவே ஏதேனும் ஒரு தவறு செய்திருந்தால் அதுவும் சட்டத்திற்கு புறம்பான மிகப்பெரிய தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனை பெறுவதற்கு நாம் தகுதி ஆகிறோம். அதுபோலவே நாம் சிறப்பாக உழைத்திருந்தால் அதற்கேற்ற ஊதியம் பெறுவதற்கு நாம் தகுதி ஆகிறோம் இவ்வாறாக ஏதேனும் ஒன்றிற்கு நமது கடந்த காலத்தின் அடிப்படையில் நாம் தகுதி ஆகிறோம். அந்த இடத்தில்தான் தகுதியாதல் என்ற தமிழ் அர்த்தத்தில் deserve என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence He deserves this promotion because he worked assiduously everyday. இந்த

Know the word ENTRUST...

படம்
Word of the day is ENTRUST... Function The word ENTRUST is a verb. Meaning to give someone a thing or duty for which they are responsible: அதாவது ஒருவர் பொறுப்பில் ஒரு பொருளை அல்லது வேலையை வழங்குவது என்று அர்த்தத்தம். அதாவது ஒரு முக்கியமான ஒரு வேலை அல்லது ஒரு பொறுப்பு அதனை செய்வதற்கு நீங்கள் ஒரு நம்பிக்கையான நபரை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைப்பீர்கள் அந்த இடத்தில்தான் ஒப்படைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். In a sentence My friend usually entrusts his car to me whenever he goes abroad. எனது நண்பர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் அவரது காரை என்னிடம் ஒப்படைப்பது வழக்கம். Practice it ஒப்படைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த ENTRUST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

Know the word RENOUNCE...

படம்
Word of the day is RENOUNCE... Function The word RENOUNCE is a verb. Meaning 1) to turn away from or to give up something or someone அதாவது எதையாவதொன்றை அல்லது யாராவதொருவரை விட்டு விலகுதல் அல்லது கைவிடுதல் என்று அர்த்தம். அதாவது அதிகாரப்பூர்வமாக ஒருவருடைய பதவியையோ அல்லது உடமையையோ அல்லது ஒரு பழக்கத்தையோ கைவிடும் பொழுது அல்லது துறக்கும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக துறத்தல், கைவிடுதல் & விட்டுவிலகுதல் என்ற அர்த்தங்களில் தமிழில் பயன்படுத்தலாம். Sentences 1) The prince renounced his kingship. இளவரசர் தனது அரச பதவியைத் துறந்தார். 2) He renounced drinking alcohol. அவர் மது அருந்துவதை கைவிட்டார். 3) She renounced her relationship with him. அவள் அவனுடனான அவளது உறவைத் துறந்தாள். Practice it துறத்தல், கைவிடுதல் & விட்டுவிலகுதல் போன்ற அர்த்தங்களில் இந்த RENOUNCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.